மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்
04 Nov,2018
மாடல் அழகியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலை தொடர்ந்து தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
டெல்லியின் பவனா பகுதியில் 3 நாட்களுக்கு முன்னர் 37 வயதான ஆசிரியை சுனிதா பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சுனிதாவை கூலிப்படையை வைத்து ஒருவர் கொலை செய்துள்ளார் என்கிற தகவல் மட்டுமே போலீசாருக்கு கிடைத்தது. கொலை நடைபெற்ற இடத்திலும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிக் கொண்டிருந்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சுனிதாவின் கணவன் மஞ்சீத்தின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மஞ்சீத், ஏஞ்சல் குப்தா எனும் பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஏஞ்சல் குறித்து போலீசார் மஞ்சீத்திடம் கேட்டுள்ளனர். அதற்கு ஏஞ்சல் தங்கள் குடும்ப நண்பர் என்று மஞ்சீத் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஏஞ்சலையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே மஞ்சீத் மற்றும் ஏஞ்சல் தங்கள் செல்போன்களை போலீசாரிடம் ஒப்படைக்க தயங்கினர். இதனை அடுத்து அதனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது மஞ்சீத்தும் – ஏஞ்சலும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தன. இதனை அடுத்தே போலிசார் தங்கள் பாணியில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அப்போது தான் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. 46 வயதான மஞ்சீத்துக்கும் 37 வயதான ஆசிரியை சுனிதாவுக்கும் 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 16 வயதில் ஒரு பெண்ணும், எட்டு வயதில் ஒரு ஆணும் குழந்தைகளாக உள்ளனர். தொழில் அதிபரான மஞ்சீத்துக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால் மஞ்சீத்தை எப்போதுமே சுனிதா கண்காணிப்பிலேயே வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மஞ்சீத் தனது புது காதலியான 28 வயதே ஆன மாடல் அழகி ஏஞ்சலை தனது வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசகமா இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்கு வந்த சுனிதா இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை என்றும் சுனிதா மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன ஏஞ்சல் மனைவி சுனிதாவை கொலை செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மஞ்சீத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டத்திற்கு ஏஞ்சலின் தந்தை ராஜீவும் உதவி செய்துள்ளார். இதன் பிறகே கூலிப்படை மூலம் பவனா பகுதியில் வைத்து சுனிதாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். தற்போது ஏஞ்சல் மற்றும் மஞ்சீத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கூலிப்படையை தேடி வருகின்றனர்.