கனடாவில்... கடன் பட்டோரின், மனக்கவலை அதிகரிப்பு!
29 Oct,2018
கனடாவில் அதிகரித்துவரும் வங்கிக்கடன் வட்டி காரணமாக, கடன்பட்டோர்கள் மிகவும் மனக்கவலையில் உள்ளனர்.
கடந்த ஒரு தசாப்த காலமாக சொந்த வீடுகளையுடைய கனடிய மக்கள் மிகவும் குறைந்த வட்டிகளைக் கொண்ட கடன்களைப் பெற்று மகிழ்ச்சியாகவும் இலாபகரமாகவும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
படிப்படியாக அதிகரித்துக் கொண்டுவந்த வங்கிக் கடனுக்கான வட்டித் தொகையானது கடந்த வாரத்திலிருந்து பாரிய அளவு அதிகரிப்பைக் கண்டுள்ளது.
அதாவது 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் காணப்பட்ட வட்டிக்கு தற்போதைய வட்டி ஐந்து மடங்கு அதிகமாகும்.
400,000 டொலர் பெறுமதியான அடைமானத்திற்கு மாதாந்தம் 186 டொலர் வட்டி அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், எதிர்வரும் புதுவருடம் வங்கிக்கடனுக்கான வட்டி மேலும் அதிகரிக்குமென எதிர்வு கூறப்படுவதோடு இதனால் வீட்டுக்கடன்கள் பெற்ற எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.