பெண்ணை கற்பழித்து பிறப்புறுப்பை சிதைத்த கொடூர மிருகங்கள்
24 Oct,2018
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்ற பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலை ஓரத்தில் கிடப்பதை பார்த்த ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட அந்த ராஜிக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று நிலத்தகராறு குறித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு என உறவினர் அழைத்ததாக அந்த பெண் சென்றுள்ளார்.
அப்போது உறவினர் அவரை கொமூரமாக கற்பழித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது பெண் உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கற்பழித்த அந்த உறவினரையும், அவருக்கு உதவியாக இருந்த நபரையும் கைது செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் நிர்பயாவுக்கு நடந்ததுபோல அரங்கேற்றப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.