கனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!
18 Oct,2018
கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், 140 பவுண்ட் நிறையுடைவர் மற்றும் கறுப்பு நிற தலை முடியை கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் காணாமல் போயுள்ள குறித்த பெண் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.