வழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்
08 Oct,2018
முடி உதிர்தல் பிரச்சினை பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை. இதனுடன் பொடுகு, தலை அரிப்பு போன்றவையும் தொற்றிக் கொள்ளும். சில பேருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை கூட அந்த இடத்தில் ஏற்பட்டு விடும்.
என்னன்னமோ ஆயில் தேய்த்தாலும் தலை முடி மறுபடியும் வளராத சோகத்தில் தான் நாம் இருப்போம். இந்த பிரச்சினைக்கு பெரிதான தீர்வை தேடி போக வேண்டும் என்றே அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.
முடி உதிர்தல் பிரச்சினைக்கு பிறகும் உங்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்ட கீழ்க்கண்ட பொருட்கள் பயன்படுகிறது.
வெங்காயம்
ஆலிவ் ஆயில்
முட்டை மாஸ்க்
கறிவேப்பிலை
பேக்கிங் சோடா
வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான சல்பர் நமக்கு முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நீண்ட அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலை பரிசளிக்கிறது.
பயன்படுத்தும் முறை
வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.
ஆலிவ் ஆயில் நிறைய அழகு பராமரிப்பை நமக்கு கொடுக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஈ தலைமுடியின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான போஷாக்காகும். உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சினை இருந்தால் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி வாருங்கள்.
பயன்படுத்தும் முறை
1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீ ஸ்பூன் பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.
நம் மயிர்க்கால்கள் வலிமையாக இருக்க புரோட்டீன் மிகவும் அவசியம். அதில் முட்டை மாஸ்க் நம் கூந்தலுக்கு தேவையான புரோட்டீன் போஷாக்கை தருகிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக பிரித்து வைத்து அடித்துக் கொள்ளுங்கள். உடனே 1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேருங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை கொண்டு அலசி விடுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
கறிவேப்பிலை முடி உதிர்தல் பிரச்சினையை போக்கி முடி வளர்ச்சியை தூண்டவும் செய்கிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் கூந்தலின் வலிமையை கூட்டுகிறது.
பயன்படுத்தும் முறை
காய வைத்த கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள். நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி தலையில் தடவிக் கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு மாதத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடா பொடுகு மற்றும் தலை அரிப்பை போக்கும் சிறந்த பொருள். அடர்த்தியான வலிமையான கூந்தல் கிடைக்க உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
பேக்கிங் சோடா மற்றும் ஹென்னா பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப்பை தலையில் தேய்த்து பயன்படுத்தி வரவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசி விடவும். சீக்கிரமாகவே நல்ல மாற்றத்தை காணலாம்.
இனி முடி உதிர்தல் பிரச்சினைக்கு பை பை சொல்லி விடலாமா.