60 பெண்களை சீரழித்த விபச்சார புரோக்கர் சென்னையில் அதிரடி கைது
03 Oct,2018
சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் 60 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த விபச்சார புரோக்கர் டெய்லர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளான்.
ராமநாதபுரத்தை சேர்ந்த டெய்லர் ரவி(58) என்பவன் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறான். இவன் ஒரு விபச்சார புரோக்கர்.
கடந்த 8 ஆண்டுகளாக இவன் இந்த கீழ்த்தரமான வேலைகளை தான் செய்து வருகிறான். சில முக்கியப் புள்ளிகளுடன் இவனுக்கு பழக்கம் இருப்பதால் இவன் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் சென்னை காவல் துறை ஆணையர், ரவியை கைது செய்ய வேண்டும் என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட, போலீஸார் இவனை பிடிக்க தனிப்படை அமைத்தனர். அதிரடியாக அவனது வீட்டிற்குள் நுழைந்த போலீஸார் அவனை கைது செய்தனர்.