ஜேர்மனில் புகழ்பெற்ற பியர் திருவிழா; உற்சாக போதையில் மக்கள்ஸ
25 Sep,2018
!
ஜேர்மன் நாட்டின் புகழ்பெற்ற பியர் திருவிழா தொடங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பியர் திருவிழாவாக வர்ணிக்கப்படும் இவ்விழா, முனிச்நகரில் வழக்கமாக உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
பாரம்பரிய உடையணிந்து முனிச் நகர மேயர் டைட்டர் ரெய்ட்டர்தொடங்கி வைத்தார். விழா அரங்கிற்கு வெளியே திரண்டிருந்த மதுப்பிரியர்கள், அனுமதி வழங்கப்பட்டதும், முண்டியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர். சிலர் தடுமாறி கீழே விழுந்தனர்.
பியர் திருவிழாவில் பங்கேற்கும் மதுப்பிரியர்களை மகிழ்விக்க, பாரம்பரிய உடையணிந்த இசைகலைஞர்கள், இசைக்கருவிகளை இசைத்து, உற்சாகப்படுத்துகின்றனர். முனிச் நகரில் நேற்றுத் தொடங்கியுள்ள பியர் திருவிழா, அடுத்த மாதம், 7ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
எப்போது தொடங்கியது?
இந்த திருவிழாவானது 1810 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. முதலில் பீர் திருவிழாவாகவெல்லாம் இல்லாமல் குதிரை திருவிழாவாக ஓர் அரச குடும்ப திருமணம் ஒன்றில் தொடங்கி இருக்கிறது. பின் 19 ஆம் நூற்றாண்டில் இது பீர் திருவிழாவாக மாறி இருக்கிறது.