கேரள பிஷப் மீதான பாலியல் புகார்: திருச்சபைகள் மீதான நம்பிக்கை குலைகிறதா?
21 Sep,2018
புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற கன்னியாஸ்திரிகள்
கன்னியாஸ்திரீ ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, விசாரணைக்கு உள்ளாகியுள்ள ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால் பதவி விலக முன்வந்ததை கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திகான் ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தனது ஜெபமாலையை பயன்படுத்துவதை கீதா சாஜன் நிறுத்தவில்லை. கன்னியாஸ்திரியாவதற்குப் படிக்கும் தனது மகளின் பாதுகாப்பு குறித்த தமது அச்சத்தைக் குறைக்க இதுவே அவருக்கு வழி.
ஒரு கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பிஷப்பை கைது செய்யக்கோரி கொச்சியில் நடந்த போராட்டத்தை கீதாவும் அவரது கணவர் ஷாஜன் வர்கீசும் பார்த்தனர்.
"ஒரு தாயாக என் மகளின் பாதுகாப்பு குறித்து எனக்கு கவலை எழுந்துள்ளது. கன்னியாஸ்திரிகள் சபைதான் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாகத் தோன்றியது. இப்போது அதுவும் பாதுகாப்பானது என்று தோன்றவில்லை," என்கிறார் கீதா.
கேரள கன்னியாஸ்திரீயின் பாலியல் குற்றச்சாட்டு - யார் இந்த பஞ்சாப் ஆயர்?
ஜெர்மனி: 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்
"இந்தச் செய்தியைக் கேட்டதும் என் மனைவி அழத் தொடங்கினார். கன்னியாஸ்த்திரீ ஆவதற்குப் படிக்கும் எங்கள் மகளின் படிப்பை நிறுத்த வேண்டும் என அவர் விரும்பினார்," என்கிறார் ஷாஜன்.
பிரான்கோ முலக்கால் கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டத்தைத் தொடங்கியதன் மூலம் அதில் ஈடுபட்ட கன்னியாஸ்திரீகள் ஐவரும் வரலாறு படைத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் கன்னியாஸ்திரீகள் மற்றும் ஆயர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், திருச்சபையில் நடந்த சம்பவத்துக்கு எதிராகவே அவர்கள் போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை.
"இதற்கு முன்பு இத்தகைய போராட்டம் நடந்ததே இல்லை. திருச்சபை நடவடிக்கை எடுக்காததால்
பாலியல் குற்றம் சுமத்தியுள்ள கன்னியாஸ்திரீயின் சகோதரியான இன்னொரு கன்னியாஸ்திரீ ஆல்ஃபியும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஐவரில் ஒருவர். அவர்களின் இன்னொரு சகோதரியும் மூன்று நாள் உண்ணாநிலை போராட்டத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாங்கள் திருச்சபையிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால்தான் தெருவில் இறங்கிப் போராடியதாகக் கூறுகிறார் ஆல்ஃபி.
ஒரு திருமணமான பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக, சில மாதங்களுக்கு முன்னர் நான்கு ஆயர்கள் நீதிமன்றப் படிகளை ஏறினர்.
பாதிரியார் ஒருவர் இரு சிறுமிகள் உள்பட பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டால் கேரளாவில் உள்ள திருச்சபை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு மோசமான விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த சிறுமிகளில் ஒருவர் கர்ப்பமடைந்தார்.
இத்தகைய நிகழ்வுகளால் இயேசுவின் பிரதிநிதிகளாக உள்ள திருச்சபையினர் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளதா?
தவறு செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பாதிரியார்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ திருச்சபைகள் ஆதரிப்பது பிற்காலத்தில் அதன் நற்பெயருக்கு கடுமையான களங்கத்தை விளைவிக்கும் என்கிறார் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழத்தைச் சேர்ந்த வரலாற்றுப்
சமீபத்திய வழக்கில்கூட மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை ஆயர் முலக்காலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த கன்னியாஸ்திரீ காவல் துறையை வற்புறுத்தி
விசாரணைக்காக பிரான்கோ முலக்கால் வந்திறங்கிய காரின் கண்ணாடிகள் கருப்பு திரைகள் மூலம் மூடப்பட்டன.
குற்றம்சாட்டும் கன்னியாஸ்திரீயின் படம் திருச்சபையால் வெளியிடப்படுகிறது. ஆனால், காருக்குள் ஆயர் இருக்கும்போது அவர் முகம் காட்டப்படாதா என்று காவல் அதிகாரிகளிடம் அங்கிருந்த தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
திருச்சபைக்குள்ளேயே நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அதிருப்தி நிலவுகிறது. இந்தப் போராட்டங்கள் எதுவும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை," என்கிறார் கன்னியாஸ்திரீகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் 'சேவ் அவர் சிஸ்டர்ஸ்' நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த பாதிரியார் அகஸ்டின் பட்டொலி.
ஒவ்வொரு முறையும் கேரளாவில் இருக்கும் எதாவது திருச்சபை பாலியல் வல்லுறவு குற்றசாட்டுக்கு உள்ளாகும்போது நீதி கோரி இத்தகைய அமைப்புகள் தோன்றுவது வழக்கமாகிவிட்டது.
இங்கு திருச்சபைகள் மீதான நம்பிக்கை குறைபாடு இல்லை என்கிறார் கல்வியாளர் டாக்டர் ஆஷா ஆசி ஜோசஃப். மக்கள் எப்போதும் திருச்சபைக்கு செல்வதை நிறுத்த மாட்டார்கள். ஆனால், கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்து விலகி புரோடஸ்டண்ட் மற்றும் எவாஞ்சலிகல் இயக்கங்களை நோக்கி மக்கள் நகரத் தொடங்கிவிட்டார்கள் என்கிறார் அவர்.
மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா, "இந்த வழக்குகள் எதுவும் புதிது அல்ல. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவை நிகழ்ந்து வருகின்றன," என்கிறார். ஆனால், அந்தக் கன்னியாஸ்திரீ புகார் கொடுக்கும் நிலைக்கு என்ன காரணம் என்பதை திருச்சபை, சமூகம் மற்றும் அரசு ஆகியோர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்கிறார் சக்காரியா.
பெயர் வெளியிட விரும்பாத பாதிரியார் ஒருவர் பிபிசி-யிடம் இவ்வாறு கூறுகிறார்: "திருச்சபை என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல. கேரளாவில் திருச்சபைகளுக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, வர்த்தக நடவடிக்கைகள் நிகழும் கட்டடங்களும் உள்ளன."
"கேரளாவில் உள்ள ஒரு சராசரி கிறிஸ்தவருக்கு திருச்சபை செல்வது என்பது ஓர் உயர் அதிகாரத்தில் இருப்பவருடன் தொடர்பில் இருக்கும் ஓர் உணர்வைத் தருகிறது. இந்த கன்னியாஸ்திரீ விவகாரம் திருச்சபைக்கு பெரும் சேதத்தை உண்டாக்கப் போவதில்லை. இதை திருச்சபைகளும் அறிந்திருக்கலாம் எனும் மோசமான உணர்வும் எனக்கு உள்ளது. இதுதான் உண்மை," என்கிறார் சக்காரியா.