உன் தோள் சாய ஆசை
11 Apr,2018
அன்பே...
உன் தோள் சாய நான்
தூங்காமல் கத்திருக்கிறேன்
தூக்கத்தில் மட்டும்தான்
நீ வருவயா?
நான் விழித்திருக்கும் நேரமெல்லாம்
நீ விழி மூடிக் கிடக்கிறாய்
நான் விழி மூடும் நேரமெல்லாம்
என் விழிகளுக்குள் நடக்கிறாய்
இருவரும் சேர்ந்தே விழிப்பதும்
சேர்ந்தே நடப்பதும் எப்போது?
பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும்
புரிந்து கொள்ளவும்
எம்மால் முடிகிறது
உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள்
மனதுக்கும் உண்டு
முடிவே இல்லாத வாழ்வும்
பிரிவே இல்லாத உறவும்
என்றுமே இல்லை
இருந்தும்
ஏகாந்தத்தை ரசிப்பதுவும்
நேசிப்பை ருசிப்பதுவும்
எமக்குப் பழக்கமானவை
பொத்தி வைத்த தருணங்கள்
பூக்களாய் இதழ் விரிக்க
மயிலிறகாய் வருடும்
உன் நினைவுகளால் சிலிர்க்கிறேன்
கரை தொடும் அலையென
என் கனவில் மட்டும்
வாஞ்சையுடன் வருடும்
உன் பிரிவினில் உணர்கிறேன்
வாழ்வின் அர்த்தத்தை.
Kavallur Kanmani