அமெரிக்காவில் இந்திய தாய், மகன் மரணம்: வீட்டில் பிணமாக கிடந்தனர்
01 Feb,2018
அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள விர்ஜினியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தியாவை சேர்ந்த மாலா மன்வானி (65) மற்றும் அவரது மகன் ரிஷி மன்வானி (32) இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ரிஷி கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு வரவில்லை என அவருடன் வேலை செய்து வருபவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, போலீசார் ரிஷியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் ரிஷியும், அவரது தாயும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். இது தொடர் கொலையாக தெரியவில்லை, இதனால் பொதுமக்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்