குடியரசு தினத்தன்று சென்னையில் பயங்கரம் 5 துப்பாக்கி, தோட்டாக்களுடன் 2 பேர் அதிரடி கைது

27 Jan,2018
 

 
 
 
 
 
 
சென்னையில் நேற்று குடியரசு தினத்தன்று 5 துப்பாக்கிகள், 25 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ரூ.4 லட்சம் கள்ள நோட்டுகளுடன் ரெயிலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
 அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை சென்டிரல் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் துப்பாக்கி மற்றும் கள்ள நோட்டுகளுடன் மர்ம கும்பல் சென்னைக்கு வருகிறது என்று மாநில உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
 நேற்று அதிகாலை அந்த ரெயில் சென்னை சென்டிரல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த ரெயிலில் சோதனைபோட்டு துப்பாக்கி மற்றும் கள்ள நோட்டுகளுடன் வரும் மர்மநபர்களை மடக்கிப்பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.
 
 துப்பாக்கி மற்றும் கள்ள நோட்டு கும்பலை பிடிப்பதற்காக சென்னை வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 10 போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.
 
 சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கவுகாத்தி ரெயிலின் வருகைக்காக நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் காத்திருந்தனர். ஆனால் அந்த ரெயில் 5 மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல் கிடைத்தது.
 
 உடனே தனிப்படை போலீசார் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் வைத்து துப்பாக்கி மற்றும் கள்ளநோட்டு ஆசாமிகளை மடக்கிப்பிடிக்க முடிவு செய்தனர். திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தனர். நேற்று காலை 9.30 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவொற்றியூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
 
 திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் ரெயிலை மெதுவாக ஓட்டிச் செல்லும்படி, டிரைவருக்கு ரெயில்வே அதிகாரிகள் மூலம் தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துவிட்டனர். இதனால் திருவொற்றியூர் ரெயில் நிலையம் வந்ததும், டிரைவர் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை மெதுவாக ஓட்டினார்.
 
 ரெயிலைச்சுற்றி தனிப்படை போலீசார் முற்றுகையிட்டனர். 3 போலீசார் ரெயிலில் ஏறி சோதனை போட்டார்கள். மற்ற போலீஸ்காரர்கள் அனைவரும் ரெயிலைச்சுற்றி இரண்டு பகுதிகளிலும் முற்றுகையிட்டபடி சென்றனர்.
 
 அப்போது ரெயிலை விட்டு இறங்கிய 2 மர்மநபர்கள் மட்டும் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர் களை தனிப்படை போலீசார் விரட்டிச் சென்றனர். திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் வைத்து தப்பி ஓடிய மர்மநபர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனர்.
 
 அவர்கள் வைத்திருந்த பையை சோதனை போட்டனர். அந்த பைக்குள் 5 நவீன ரக கைத்துப்பாக்கிகளும், 25 துப்பாக்கி தோட்டாக்களும், ரூ.4 லட்சம் ரொக்கப்பணமும் இருந்தது. அவர்கள் 3 செல்போன்களும் வைத்திருந்தார்கள். ரொக்கப்பணம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தது. துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள், ரொக்கப்பணம் மற்றும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கொண்டுவந்த 2 மர்மநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
 
 அவர்கள் இருவரும் வேப்பேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்களில் ஒருவர் பெயர் பிரதீப் (வயது 27) என்பதும், இன்னொருவரது பெயர் கமல் (28) என்பதும் தெரிய வந்தது.
 
 பிரதீப் சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர். கமல் சென்னை திருமங்கலத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.
 
 பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை மேற்கு வங்காள மாநிலம் மால்டா என்ற ஊரில் வாங்கியதாகவும், அதற்கு ரூ.1ண லட்சம் பணம் கொடுத்து வாங்கியதாகவும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சம் ரொக்கப்பணமும் கள்ளநோட்டு என்று விசாரணையில் கண்டறியப்பட்டது. ரூ.1 லட்சம் உண்மையான நோட்டுகள் கொடுத்து ரூ.4 லட்சம் கள்ள நோட்டுகளை வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
 
 துப்பாக்கிகளை சென்னையில் சதீஷ் என்பவர் மூலமாக விற்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதுபோல கள்ள நோட்டுகளை சென்னையில் புழக்கத்தில் விட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. கைதான இருவரிடமும் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
 
 கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமன் கைதானவர்களிடம் விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு ஒழிப்பு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். பறிமுதல் செய்யப்பட்ட 5 துப்பாக்கிகளும், 9 எம்.எம்., பிஸ்டல் ரக கைத்துப்பாக்கி வகையைச் சேர்ந்தது. இதுபோன்ற துப்பாக்கிகள் போலீஸ் துறையில்தான் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக 4 சட்டப்பிரிவின் கீழ் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
 கைதான இரண்டு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்போம் என்றும், அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் வேப்பேரி போலீசார் தெரிவித்தனர்.
 
 சதீஷ் உள்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கள்ள நோட்டுகளையும், துப்பாக்கிகளையும் சப்ளை செய்த மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
 குடியரசு தினமான நேற்று துப்பாக்கிகள் மற்றும் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies