எனக்கு இதயம் உண்டு! அதில் என்றும் உனக்கு இடம் உண்டு
01 Feb,2018
நீ விரும்பும் நட்பு உன்னிடம் நிறைய எதிர் பார்க்கும்.
ஆனால் உன்னை விரும்பும் நட்பு உன்னை மட்டுமே எதிர் பார்க்கும்!...
விரும்பும் நெஞ்சம் அருகில் இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள் உள்ளவரை தொலைவும் வெகு அருகில் தான்.
எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட,எப்போது சந்திப்போம் என்று “இதயம் துடி
த்ததே”உண்மை,, வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம் முன்னே உன்முகம் என்னாளும் உயிர் வாழும்
அன்பை சுமக்க இதயம் உண்டு,
கண்ணீரை வடிக்க கண்கள் உண்டு,
கடமை முடிக்க கைகள் உண்டு,
என்றும் உன்னை நினைக்க நான் உண்டு
ரோஜாக்கு நிறம் உண்டு!
முல்லைக்கு மணம் உண்டு!
எனக்கு இதயம் உண்டு!
அதில் என்றும் உனக்கு இடம் உண்டு!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கும்
உன் அன்பு அப்பா.