கரடிக்கு நடந்த வினோத சிகிச்சை 3 கிலோ நாக்கு !!
28 Oct,2017
இதனையடுத்து கடந்த 2016ம் ஆண்டு அதன் நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தும், வாய்க்கு வெளியே வந்த நுனி நாக்கு தடித்துக்கொண்டே சென்றது. நாக்கின் எடை மீண்டும் கூடியதால் அதனால் உணவு உண்ண முடியவில்லை. இதனால் குழாய் மூலமாக அதற்கு உணவு செலுத்தப்பட்டு வந்தது. மரங்களில் ஏற முயன்றால் கிளைகளில் நாக்கு இடித்து காயமேற்பட்டு சிரமத்திற்கு ஆளானது. தலையை சாய்த்து படுக்கவும் முடியாமல் அவதிக்குள்ளானது.மியான்மரில் வினோதமான நோயால் அவதிப்பட்டு வந்த கரடிக்கு கால்நடை மருத்துவர்கள் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அபாயகரத்தில் இருந்த அதன் உடல்நிலையில் இருந்து கரடியை மீட்டுள்ளனர்.
சீனாவில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட இருந்த 2 ஆசிய கருப்பு கரடி குட்டிகள் மீட்கப்பட்டு மியான்மரில் உள்ள மடாலயத்தில் வளர்க்கப்பட்டு வந்தன. மடாலயத்தில் வளர்க்கப்பட்டு வந்த இந்த கரடிகளில் நியான் ஹூட்டு என்ற கரடி குட்டியின் நாக்கின் வளர்ச்சி அனைவரையும் வியக்க வைத்தது. காரணம் அதன் நுனிநாக்கு வெளியே நீண்ட நிலையில் தடிமனாகிக் கொண்டே வந்தது. நாக்கின் எடை அதிகரித்துக் கொண்டே வந்ததால் நியான் ஹூட்டு சிறிது சிறிதாக சிரமப்பட தொடங்கியது.
இந்நிலையில் நியானின் நிலையை பார்த்த அதன் பராமரிப்பாளர் அதனை காப்பாற்றி சகஜ நிலைக்கு கொண்டுவர விரும்பினார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஸ்காட்லாந்து எடின்பார்க் ராயல் கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹீத்தர் பாகான் தலைமையிலான கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் குழு மியான்மர் வந்தது. இந்த குழுவினர் 18 மாதமான நியான் ஹூட்டுவின் தடித்த நாக்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் சுமார் நியானின் நாக்கில் இருந்து 3 கிலோ சதை அகற்றப்பட்டது. நியானுக்கு ஏற்பட்டது யானைக்கால் வகை நோயாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மனிதர்களுக்கு யானைக்கால் நோய் தாக்கினால் கால்கள் பாதிப்படைவது போல. மிருகங்களுக்கு தாக்கினால் உடல் பாகங்கள் பெரிதாகும்.