தமிழ்நாடு - சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்க?

22 Sep,2017
 

 
 
சுற்றுலா  -1 ( ராமேஸ்வரம், ஊட்டி)
 
தமிழ்நாட்டில் சுற்றுலா போகிற ஒவ்வொருவருக்கும் ஏமாந்த அனுபவம் ஒன்றாவது இருக்கும். நிச்சயம் ஒருமுறையாவது ஏமாந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் ஒரேமாதிரியாக யாரும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டெக்னிக். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விஷயம் என இதில் ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. சம்மர் லீவில் சுற்றுலாவுக்கும் திட்டம்போட்டிருக்கிற உங்களிடம் ஆட்டையை போட காத்திருக்கும் இந்த கழுகுகளிடமிருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது.. அதற்குத்தான் இந்த அதிரடி தொடர். தினமும்  2 ஊர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.
 

1. ராமேஸ்வரம்
 
 ரயிலிலோ, பேருந்திலோ ராமேஸ்வரம் வருபவர்களை போட்டி போட்டு வரவேற்பவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். இந்த ஆட்டோவிற்கு நீங்கள் கொடுக்கும் கட்டணம் என்பது குறைந்த அளவில்தான் இருக்கும். ஆனால், உங்கள் மூலம் அவர்கள் அடையும் பலனோ அதிகமாக இருக்கும். உங்களை நல்ல லாட்ஜில் தங்க வைப்பதாக சொல்லி அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள், கோயிலுக்கு வெகு தொலைவிலோ அல்லது நல்ல வசதிகள் இல்லாத லாட்ஜ்களிலோ இறக்கி விடுவார்கள். அவர்கள் அழைத்தும் செல்லும் லாட்ஜில் நீங்கள் தங்கி விட்டால் அவர்களுக்கு லாட்ஜ் தரப்பில் குறைந்தது ரூ.100 முதல் ரூ.300 வரை கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷன் தொகையும் சேர்த்து ரூம் வாடகையாக அநியாய தொகை வாடகையும் உங்கள் தலையில் கட்டப்படும். அடுத்ததாக 'சைட் சீன்' என்ற பெயரில் ஆட்டோவில் செல்ல லோக்கல் மற்றும் அவுட்டர் (தனுஷ்கோடி, பாம்பன் பாலம்) என இரு வகையான கட்டணம் வசூலிப்பார்கள்.
 
 சைட் சீன் செல்லும் முன்னரே பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெளிவாக விசாரித்துக் கொள்ளாவிட்டால், கண்ட இடத்திற்கும் அழைத்து சென்றுவிட்டு இரண்டாயிரம் கொடு, மூவாயிரம் கொடு என பிடுங்குவார்கள். முழுமையாக விசாரித்துக் கொண்டு ஆட்டோவில் கால் வைக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய பர்ஸ் காலியாவது உறுதி.
 
 ராமேஸ்வரத்தில் ஷாப்பிங் பண்ணும்போது கவனமாக இருக்கவேண்டும். இங்கும் ஆட்டோ ஓட்டுநர் கூட்டி செல்லும் கடையில் நீங்கள் பொருள் வாங்க கூடாது. ஆட்டோ ஓட்டுனர்கள் கமிஷன் வாங்கிக்கொண்டு மொக்கையான கடைகளுக்கு நம்மை அழைத்து சென்றுவிடுவார்கள். நாமாகவே தேடிப் பிடித்து வாங்குவது நல்லது.
 
 ராமேஸ்வரத்தை பொருத்தமட்டில் ஆண்டு முழுக்க சீசன் காலம்தான். அதிலும் அமாவாசை போன்ற நாட்களில் பல மடங்கு பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், இங்குள்ள தங்கும் விடுதிகளில் ஒரு சிலவற்றை தவிர மற்ற தங்கும் விடுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கிடையாது. இதனால் உங்களின் நடை, உடைகளை கொண்டு கட்டணம் வசூலிக்கப்ப்படும். குறிப்பாக அமாவாசை தினங்களில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். அமாவாசைக்கு முந்தைய நாள் ரூம் கேட்டு போனால்,  ரூம் காலி இல்லை என்ற பதிலே வரும். அன்றைய தினம் நள்ளிரவுக்கு மேல் அதே தங்கும் விடுதியில் ரூம் கேட்டு சென்றால் உடனே கிடைக்கும். அதற்கு நீங்கள் அவர்கள் கேட்கும் கட்டணத்தை கொடுக்க சம்மதிக்க வேண்டும். இது போன்ற இன்னலை தவிர்க்க,  ராமேஸ்வரம் வரும் முன்பாகவே தங்குவதற்கான ஏற்பாடுகளை முடிந்த மட்டும் இணையத்தின் மூலம் செய்து கொண்டால் நலம். திடீர் பயணமாக வருபவர்கள், கோயிலுக்கு சொந்தமான விடுதிகளில் (நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இருக்காது) தங்குவதற்கு கோயில் அலுவலகத்தை நாடலாம். மலிவாகவும் இருக்கும்.
 
 முடிந்தவரை ராமேஸ்வரம் பயணத்தை முறையாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள். ஏற்கனவே போய் வந்தவர்களிடம் விசாரித்து எப்படி செல்வது , எங்கே தங்குவது, என்ன வாங்குவது என்பதை விசாரித்துக்கொள்ளுங்கள். முக்கியமாக ஆட்டோக்காரர்களை நம்பாதீர்கள். ராமேஸ்வரத்தில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதி அதுதான்.
 
 
 
பாவங்களை போக்கும் இடமாக மட்டுமல்ல, நல்ல சுற்றுலா தலமாகவும் விளங்கி வருவது ராமேஸ்வரம். ஆனால், இந்த எண்ணத்துடன் வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆட்டோவில் துவங்கி அர்ச்சகர் வரை எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை சற்று விவரமாக பார்க்கலாம்.
 
 ராமேஸ்வரம் கோயில் சாமி தரிசனம் செய்யும் முன் அக்னி தீர்த்த கடலிலும், அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராட செல்வது வழக்கம்.
 
 இதில், 22 தீர்த்தங்களில் நீராட கோயில் நிர்வாகம் சார்பில் நபர் ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.25 தான். ஆனால், உங்களை அணுகும் தனிநபர்கள் சிலர்,  உங்களை தனி வழியில் அழைத்து செல்வதாகவும், ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஒரு வாளி தண்ணீர் ஊற்றுவதாகவும் சொல்லி அழைப்பார்கள்.
 
 இதற்கு நீங்கள் உடன்பட்டால் நபர் ஒருவருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கொடுக்க வேண்டியிருக்கும். இதேபோல் கடற்கரை மற்றும் பிற இடங்களில் தோஷம் கழிக்க, முன்னோர்கள் நினைவாக வழிபாடு செய்ய என பல வகையான பூஜைகள் புரோகிதர்களால் சொல்லப்படும். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு ரேட் உண்டு.
 
 நம்பிக்கை அடிப்படையில் நாம் இதனை ஏற்றுக் கொண்டால் உங்களிடம் இருந்து பெரும் தொகை பூஜைக்காக பிடுங்கப்படும். எடுத்துக்காட்டாக திலகோமம் எனும் பரிகார பூஜை ஒன்று உள்ளது. இதனை ஆயிரம் ரூபாய்க்கும் செய்யலாம், 50 ஆயிரம் ரூபாய்க்கும் செய்யலாம். இதில் உங்களின் மனது மற்றும் பர்சை பொறுத்து ஏமாற்றப்படலாம்.
 
 அடுத்தது சாமி தரிசனம். கோயிலுக்குள் உள்ள சுவாமி சன்னிதியில் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் என பல வகை உண்டு.
 
 ஆண்டவனின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் இங்கு வார்த்தையாகத்தான் உள்ளது. இதில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களை வேக வேகமாக விரட்டிவிடும் கோயில் ஊழியர்கள்,  சிறப்பு தரிசனத்தில் கட்டணம் செலுத்தி வருபவர்களை சிறப்பாக கவனிப்பார்கள். கோயிலின் உண்டியலில் காணிக்கை செலுத்தாமல்,  பூஜை செய்யும் அர்ச்சகரின் கையில் காணிக்கையை திணித்தால் போதும்,  சிவலிங்கத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலை அடுத்த நிமிடம் உங்கள் கழுத்துக்கு மாறிவிடும். இதில் அதிகபட்சம் ஏமாற்றப்படுவது வடநாட்டு பக்தர்களே. அவர்கள்தான் எதிர் கேள்வி கேட்காமல், கையில் வரும் பணத்தை பக்தியின் பெயரால் தாரை வார்ப்பார்கள்.
 
 இது தவிர கடைகளில் வலம்புரி சங்கு வாங்க செல்லும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தச் சங்கை வீட்டில் வாங்கி வைத்தால் வளம் தடையில்லாமல் பெருகும் என்பதாக இருக்கும் நம்பிக்கையை பயன்படுத்திக்கொள்ளும் சிலர்,  இந்த சங்கிற்கு கிராம் கணக்கில் விலை சொல்வார்கள்.
 
 இவர்கள் பேசும் பேச்சில் மயங்கி சங்கை வாங்க நீங்கள் ஒத்துக் கொண்டால்,  அடுத்து உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். சதுரங்க வேட்டை படத்தில் கோயில் கலசத்தை வாங்க செல்லும் தொழில் அதிபரை போல் நீங்கள் மாற்றப்படுவீர்கள்.
 
 சங்கு கடையின் உள் அறைக்கு அழைத்து செல்லப்படும் உங்களுக்கு முன்,  அந்த வலம்புரி சங்கிற்கு சூடம் காட்டி சிறப்பு பூஜை செய்து,  பயங்கர பக்தியுடன் உங்களிடம் அளிக்கப்படும். நீங்கள் கொடுக்கும் காசு அந்த சங்கின் தரத்திற்கு அல்ல, கடைகாரர்கள் காட்டும் நடிப்பிற்குதான். எனவே, இதிலும் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.
 
 
 
2. ஊட்டி
 
 ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, முதுமலை என நீலகிரி மாவட்டம் முழுக்க சுற்றுலாவுக்கான ஏரியாக்கள்தான். உங்களை மகிழ்விக்க வேண்டிய இந்தச் சுற்றுலா தலங்கள், சில நேரங்களில் தவறான நபர்களால் உங்களை எரிச்சலடையவும் வைத்து விடும். கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் நீங்கள் ஏமாற்றப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு மிக அதிகம். வழக்கமான சுற்றுலா தலங்களில் உள்ள பிரச்னைதான் என்றாலும், குறைந்தபட்சம் இரு நாட்கள் தங்கி பார்க்க வேண்டிய நீலகிரி மாவட்ட சுற்றுலா பயணத்தில், நீங்கள் கவனமாய் இருக்க வேண்டிய விஷயங்கள் நிரம்ப இருக்கின்றன.
 
 முதலில் நீங்கள் கவனமாய் இருக்க வேண்டியது தங்கும் ஓட்டல் விஷயத்தில்தான். உங்களுக்கோ, உங்கள் நண்பருக்கோ தெரிந்த ஓட்டலில் தங்குவதுதான் உங்களுக்கு நல்லது. ஊட்டியை பொறுத்தவரை மதியம் 12 மணியில் இருந்து மறுநாள் மதியம் 12 மணி வரைதான் அறை வாடகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது நீங்கள் காலையில் 9 மணிக்கு அறைக்கு சென்றீர்கள் என்றால், முதல் 3 மணி நேரத்துக்கு ஒரு நாள் வாடகை தர வேண்டியிருக்கும். இதை பெரும்பாலும் விடுதியினர் சொல்ல மாட்டார்கள். அறையை விட்டு நீங்கள் காலி செய்யும் போதுதான் உங்களுக்கு இது தெரியவரும். எனவே, எந்த நேரத்தில் செக் அவுட் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாக கேட்டுக்கொள்வது நல்லது.
 
 ரூம் விஷயத்தை அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது வாடகை. ஊட்டி, குன்னூர், முதுமலை, கோத்தகிரியில் பெரும்பாலான ஓட்டல்களில் ரேட் கார்டு இருக்காது. அவர்கள் சொல்வதுதான் வாடகை. வழக்கமாக ரூ.500 முதல் 800 ரூபாய் வரை வாடகைக்கு விடும் அறையை, 2 ஆயிரம் ருபாய் எனக்கூட சொல்வார்கள். எனவே, ஒன்றுக்கு இருமுறை வாடகை விஷயத்தில் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.
 தெரிந்தவர்கள் மூலம் சென்றால், அவர்கள் கேட்கும் தொகையில் பாதி தொகையை மட்டுமே செலுத்த வேண்டி வரும். எனவே, ரூம் வாடகையில் உங்கள் தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் ஜாக்கிரதையாய் இருங்கள்.
 
 அறை எல்லாம் போட்டாச்சு. அடுத்து சாப்பாடு. சாப்பிட ஓட்டலுக்கு போன உடன் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு என்ன விலை, அதற்கான சைட் டிஷ் என்ன விலை என்பதையெல்லாம் தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் போய் அமர்ந்து 2 பரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட்டால், பரோட்டாவுக்கு 40 ரூபாயும், அதற்கான குருமாவுக்கு 100 ரூபாயும் பில் வரும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும்.
 
 
 
அடுத்து கைடு விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஊட்டிக்கு நீங்கள் செல்வது முதல் முறை என்றால், ஓரளவு பெரிய ஓட்டல்களில் தங்கினால் அங்கே கைடுகள் இருப்பார்கள். இல்லையெனில் தெரிந்த நபர்கள் மூலமாக எங்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை அறிந்து செல்வது நல்லது. இதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் உங்களை பர்ஸை பதம் பார்த்து விடுவார்கள். எனவே,  கவனமாக இருக்க வேண்டும்.
 
 அடுத்து வாகன விஷயத்தில் கவனம் தேவை. ஊட்டியில் சீசனின் போது நீங்கள் ஒரு காரை வாடகைக்கு அமர்த்துகிறீர்கள் என்றால் கடுமையான வாடகையைதான் சொல்வார்கள். வழக்கமாக தின வாடகை ஆயிரம் ரூபாய் என்றால், சீசனில் இது இரு மடங்காக இருக்கும்.
 
 தெரிந்தவர்கள் மூலம் புக் செய்வதன் மூலம் நியாயமான வாடகையில் செல்லலாம். அதேபோன்று முதுமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது தெரிந்த நபர்கள் மூலம் கார்களை புக் செய்து கொள்வது தான் வசதி.
 
 ஊட்டி குளிருக்கு ஸ்வெட்டர், குல்லா போன்றவை தேவைப்படும். ஸ்வெட்டர் விலையை கேட்டால் சில நூறுகளில்தான் ஆரம்பிப்பார்கள். ஒரு ஸ்வெட்டர் 700 ரூபாய் என்றால் 70 ரூபாய்க்கு கொடுப்பியா என நீங்கள் பேரத்தை துவக்கலாம். அந்த அளவு பல மடங்கு லாபம் வைத்துதான் விற்பார்கள். 700 ரூபாய் சொல்லும் ஸ்வெட்டரை 100 ரூபாய்க்கு கொடுத்து விடுவார்கள். எனவே, இது போன்ற பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். நீலகிரி தைலம், ஹோம் மேட் சாக்லேட், ஊட்டி வர்க்கி என நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கும் பொருட்களை வாங்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
 
 ஒரு படத்தில் வடிவேலுவிடம் மல்லிகை வாசனை காட்டி விட்டு, 'மல்லிகை பூவை முகர்ந்துட்டே... எனவே வாங்கித்தான் ஆக வேண்டும்'  என கட்டாயப்படுத்துபவரிடம் சிக்கிக்கொள்வாரே அதுமாதிரியும் இங்கு நடக்கும். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் தரமில்லாத டூப்ளிகேட் பொருட்களை உங்கள் தலையில் ஈசியாக கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை.
 
 டென்ஷனை குறைக்க ஜாலியா டூர் போறீங்க. டென்ஷனை குறைச்சு, ஜாலியா இருக்கணும்னா நீங்க இதுலயெல்லாம் ஜாக்கரதையா இருக்கணும் பாஸ். இல்லைனா கஷ்டம்தான்.
 
தொகுப்பு: சி.சரவணன்
 
 
 
 
 
‘மொட்டை’யடிக்கும் பழனி
 
 பழனி முருகன் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்துகிறவர்கள்தான் மொட்டைப் போட வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், போவோர் வருவோர் அனைவருக்கும் மொட்டைப் போட்டு விடுவார்கள்.
 
 பஸ் ஸ்டாண்ட்ல இருந்து இறங்கி, வெளியே வந்ததும் நாலஞ்சு பேர் தயாரா நிப்பாங்க. ‘‘கோவிலுக்கு போகணுமா... வாங்க கூட்டிட்டுப் போய் தரிசனம் பண்ணி கூட்டிட்டு வர்றேன். நீங்க கொடுக்கறதைக் கொடுங்க’’னு பல்லெல்லாம் பஞ்சாமிர்தம் ஒழுக கூப்பிடுவாங்க. இந்த இடத்துலதான் ரொம்ப கவனமாக இருக்கணும். ஒரு படத்துல வடிவேலுவை விசில் அடிச்சு கூப்பிடுவானே ஒரு சின்ன பையன். அதே போலத் தான் இதுவும்.
 
 ‘‘வாங்க வாங்க’’னு கையை பிடிச்சு இழுத்தாக் கூட அவங்க கூடப் போயிடக்கூடாது. இல்லை நான் பாத்துக்குறேன்னு விலக்கிட்டு போய்கிட்டே இருக்கணும். அதையும் மீறி கூப்பிடுறவங்களோட அன்பு(!)க்கு கட்டுப்பட்டு, போயிட்டா என்னவாகும்?
 
 நேரா ஒரு கடைக்குக் கூப்பிட்டுப் போவாங்க. ‘‘அண்ணே... நம்ம கடைதான். செருப்பை அவுத்து வெச்சிடுங்க’’னு சொல்லிட்டே, ‘‘அண்ணணுக்கு அர்ச்சனை செட் ஒன்னு கொடுப்பா’’ என கடைக்காரரிடம் ஆர்டர் கொடுப்பார்.
 
 பிளாஸ்டிக் கவர்களில் அர்ச்சனை செட் ஏற்கனவே தயாராக இருக்கும். அதுல ஒண்ணை எடுத்துக் கொடுத்துட்டு, கடைக்காரர் ஒரு லிஸ்ட் போடுவாரு பாருங்க. அதுதான் காமெடியின் உச்சம்.
 
 அர்ச்சனை செட்ல மொத்தமே அஞ்சாறு பொருட்கள்தான் இருக்கும். ஆனா, அவரு பட்டியல்ல பத்து பொருட்கள் இருக்கும். சந்தனம் 10 ரூபாய், திருமஞ்சனம் 10 ரூபாய், பூ 20 ரூபாய், புஷ்பம் 15 ரூபாய், கற்பூரம் 12 ரூபாய், வில்லை 10 ரூபாய் என எழுதி மின்னல் வேகத்தில் கூட்டி, ‘‘80 ரூபாய் கொடுங்கண்ணே’’ என வாங்கிவிடுவார்கள். பூவுன்னாலும், புஷ்பம்னாலும் ஒண்ணுதானே, கற்பூரம்னாலும் வில்லைன்னாலும் ஒண்ணுதானேன்னு நாம யோசிக்கறதுக்குள்ள, மொட்டை எடுக்குற இடத்துக்கு கூப்பிட்டுப் போயிடுவாங்க. அங்க இருக்க, கூட்டத்துல பழைய கணக்கை மறந்திடுவோம்.
 
 மொட்டையடிக்க கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செஞ்சிருக்காங்க. 30 ரூபாய் கொடுத்தால் ஒரு பிளேடும், டோக்கனும் கொடுப்பாங்க. இதை கொண்டுப்போய் கொடுத்தா, வாங்கி வெச்சுகிட்டு, காணிக்கையை கொடுங்கன்னு அதட்டுவாரு மொட்டை எடுக்குறவரு. அஞ்சோ, பத்தோ காணிக்கை வெச்சோம் அவ்வளவுதான், உங்க தலையில நாலஞ்சு, கூட்டல், கழித்தல் போட்டு, அரை குறையா வழிச்சு அனுப்பி வெச்சுடுவாங்க. 100 ரூபாய் எடுத்து வெச்சா ஓரளவு காயமில்லாம தப்பிக்கலாம்.
 
 மொட்டைப் போடுற இடத்துல, நம்மகிட்டயே பணத்தை வாங்கி, டோக்கன் எடுத்து, காணிக்கை கொடுத்துட்டு மேலே கூப்பிட்டுப் போற ‘கைடு’, சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கச் சொல்லுவாரு. நாம வாங்கினதும், வரிசையில கூப்பிட்டுப்போய் தரிசனம் முடிஞ்சதும், கோவிலுக்கு வெளிய வந்து அவரே தேங்காயை ஒடைச்சு, கையில கொடுத்துட்டு, வாங்க போலாம்னு ஆரம்பிச்ச இடத்துக்கே கூப்பிட்டு வந்திடுவாரு. அங்க வந்ததும், ‘‘இவ்வளவு நேரம் உங்க கூடவே இருந்திருக்கேன்.. பாத்துப் போட்டுக் கொடுங்க’’னு தலையை சொறிவாரு. குறைஞ்சது 200 ரூபாயாவது வாங்கிட்டுத்தான் நகருவாரு.
 
ஏமாற்று பேர்வழிகளிடம் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
 
 பழனிக்கு வரும் பக்தர்கள், நேரடியாக மலைக்கோவிலுக்கு சென்று விட வேண்டும். யார் அழைத்தாலும் போகக்கூடாது. காலணிகளை கோவில் சார்பாக அமைத்துள்ள, காலணி பாதுகாப்பு மையத்தில் மட்டுமே விட வேண்டும். அர்ச்சனை பொருட்கள், மலைமேல் உள்ள தேவஸ்தான கடைகளில் கிடைக்கிறது. அங்கு விலையும் குறைவு.
 
 அதேபோல, பஞ்சாமிர்தத்தில் பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. தரமான, சுத்தமான பஞ்சாமிர்தம் தேவஸ்தான கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளலாம். மொத்தத்தில் பழனியை பொருத்தவரை, கைடு என்ற பெயரில் அலையும் பணம் பறிக்கும் புரோக்கர்களை தவிர்த்தாலே போதும், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
 
 
 
தேக்கடி
 
 குடும்பத்துடன் தேக்கடிக்கு சுற்றுலா செல்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சென்னையில் இருந்தோ அல்லது வெளியூரில் இருந்தோ சுற்றுலா செல்லும் பொழுது ஒரு பட்ஜெட் போட்டு செல்கிறார்கள். ஆனால், டூர் சென்ற இடங்களில் பட்ஜெட், பர்சை பதம் பார்த்து விடுகிறது. தேக்கடியில் தங்கும் விடுதிகளில் இருந்து, வேடிக்கை பார்க்கும் இடங்கள், சாப்பாடு என்று அனைத்து இடங்களிலும் பணத்தையும் ஏமாற்றி விடுகிறார்கள். எப்படியெல்லாம் பணத்தை ஏமாற்றுகிறார்கள் என்று விசாரித்தோம்.
 
 " 24 மணி நேரம் தங்குவதற்குதான் ஒருநாள் வாடகை வாங்குகிறார்கள். ஆனால், 12 மணி நேரம் மட்டும் தங்குவதற்கான நேரத்திற்கு ரூ.1500 முதல் 3000 ரூபாய் வரை வாங்குகிறார்கள். அதோடு, ரூமில் தங்குவதே இல்லை. காலையில் ஏழு மணிக்கு ரூமை விட்டு வெளியே கிளம்பும் டூரிஸ்ட்கள், மாலை ஏழு மணிக்கு திரும்ப வருவதால் ரூமை பயன்படுத்துதே இல்லை. மின்சாரம், தண்ணீர், ஃபர்னிச்சர் என்று எதையும் பயன்படுத்துவதே இல்லை. மாலை ஏழு மணிக்கு மறுபடியும் ரூம் வாடகை கேட்பார்கள்.
 
 
 
டூரிஸ்ட் போகும் இடங்களில் தேன் முதல் ஏலக்காய், மிளகு, கிராம்பு, தேநீர் தூள் என்று பல்வேறு பொருட்களை விற்று வருகிறார்கள். அதில், அதிக விலை கொடுத்து வாங்கும் நிலமை இருக்கிறது. மார்க்கெட் விலையை விட 20 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள். இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
 
 தேக்கடி என்றால் யானை சவாரி என்று ஒன்று உண்டு. அதில் ஒரு நபருக்கு ஐந்து நிமிட சவாரிக்கு ரூ.300 வாங்கினால் அதில் ரூ.150-ஐ டூரிஸ்ட் கைடுகளுக்கும், டிரைவருக்கும் கொடுப்பது வாடிக்கையாக இருக்கிறது.
 
 அதேபோல டூரிட் ஸ்பாட்டில் விற்கும் தின்பண்டங்கள், உணவுப் பொருட்கள் அனைத்தும் கூடுதல் விலையில் இருக்கும். அசைவ உணவை உண்ண வேண்டாம். ஏனென்றால் பெரும்பாலும் சிக்கன், மட்டன் அனைத்தும் பழைய பொருட்களாக இருக்கும்" என்றார்கள்.
 
 
 
புரோக்கர்மாரை தடை செய்தாலே தமிழ்நாடு இந்தியாவில் வல்லரசு ஆகிவிடும்
 
 
 
 
 

சில வருடங்களுக்கு முன் மதுரையிலிருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி குடும்பத்தோடு சென்று வந்தேன்.. ராமேஸ்வரத்தில் தரமான தங்கும் வசதியுடன் சில ஓட்டல்கள்தான் உள்ளன. கட்டணமும் மிக அதிகம்.. ராமேஸ்வரம் கோயிலின் 22 தீர்த்தம், சிறப்பு தரிசனம் மற்றும் தனுஷ்கோடி சென்றுவர ரூ.3000 செலுத்திய ஞாபகம் உள்ளது.. வட இந்தியர்களின் இந்தி பேச்சு கோசம் மிக அதிகம்.. 'இது தமிழ்நாடுதானா..?' என பொறுத்துக்கொள்ள சகிப்புத்தன்மை வேண்டும்..
 
ஓட்டல் நிர்வகத்தின் ஆசீர்வாதத்துடனேயே தரகர்களின் வியாபாரம் நடக்கிறது.. ஓட்டல்களை இணையத்தில் விசாரித்து முன்பதிவு செய்ததால் பிரச்சனை ஏதும் இல்லை.. ஆனால் அங்கிருந்து கிளம்பும் நாள் காலையில், வரவேற்பு அலுவலரிடம் இன்று காலி செய்கிறோம்,(Checkout time 12 PM) காலை உணவை முடித்துவிட்டு வருகிறோம் என கூறிவிட்டு சென்றுவிட்டோம்.. திரும்பிவந்து அறைகளுக்கு சென்றால் எங்கள் பெட்டிகள் எதையும் காணவில்லை, ஓட்டல் பணியாளர்கள் அறைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.. வந்தது கோபம், வரவேற்பு அலுவலரை காய்ச்சியதில் மறுநிமிடமே அதே அறைகளில் பெட்டிகளை வைத்துவிட்டு தவறுக்கு மன்னிப்பும் கேட்டார்..அவர் சொன்ன காரணம், அறைகளுக்கு கிராக்கி மிக அதிகம்..  குறிப்பாக வட இந்திய யாத்திரியர்கள் அதிக விலை கொடுத்து அறையை பதிவு செய்வதில் தயங்குவதில்லையாம்.
 
 
 
 
 

 
 
 
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்ல இனி தனி ஆட்டோக்களையோ, சிறு வாகனங்களையோ நம்பியிருக்க தேவை இல்லை..
 
நம் சொந்த வாகனத்திலேயே தனுஷ்கோடி தாண்டி 'அரிச்சல்முனை' வரைக்கும் புதிய சாலை வசதி இப்பொழுது திறக்கப்பட்டுள்ளதால் சென்று வரலாம்..
 
ஆனால் கடலின் விளிம்போரம் சிறு வாகனத்தில் செல்லும் அந்த 'திரிலிங்'கான அனுபவம் இதில் கிட்டாது.
 
திருநெல்வேலி
 
 திருநெல்வேலி அல்வா உலக புகழ் பெற்றது. அதனை பயன்படுத்தி ஒரே பிராண்டில் பலர் வியாபாரம் செய்வதை கண் கூடாக பார்க்க முடியும். திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் அல்வாவுக்கு பிரசித்திபெற்ற கடையான சாந்தி ஸ்வீட்ஸ்  என்கிற பெயரில்,  புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கடைகள். பெயரில் சிறிய மாற்றம் இருக்கும். நியூ சாந்தி, புது சாந்தி, புதிய சாந்தி, ஶ்ரீசாந்தி என்கிற பெயரில் கடைகளை பார்க்கலாம். கடைகள் இப்படி என்றால் ரயில், பஸ்களில் நம்மை தேடி வந்து அல்வா விற்பவர்கள், ஒரிஜினல் இருட்டுக் கடை அல்லா என்று விற்று விடுகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் அல்வா பாக்கெட் கவரில் பெயர் எதுவும் இருக்காது. கிட்டத்தட்ட இருட்டுக் கடை அல்வா கடையில் வாங்கும் போது எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும, சுவையை தவிர. எனவே, சுற்றுலாவாசிகளே உஷார். இப்படிப்பட்ட அல்வாவை நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வாங்கி சென்று கொடுத்தால் உங்களுக்கு 'சிறந்த அல்வா கொடுத்தவர்' என்கிற பட்டம் கிடைக்க கூடும்.
 
 
 
புதுச்சேரி
 
 வெளியூர்காரர்கள், வெளிநாட்டுக்காரர்களை இங்குள்ள ஆட்டோக்காரர்கள் அதிகம் ஏமாற்றுகிறார்கள். பஸ் நிலையத்திலிருந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றால் 5 ரூபாய்தான். ஆட்டோவுக்கு வெளியூர்காரர்களிடம் 200 ரூபாய் கேட்பார்கள். வெளிநாட்டுக்காரர்களிடம் 350 முதல் 400 ரூபாய் கேட்பார்கள். அடுத்ததாக வாரக் கடைசியில், ஓட்டல்களில் அறை வாடகை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துவிடும். 500, 1000 ரூபாய் வாடகை என்பது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2000, 5000 என அதிகரித்து விடும். இதற்கு என தனியே டாரிஃப் அட்டை மற்றும் பில் புக் வைத்திருக்கிறார்களாம். ஆன்லைனில் ரிசார்ட்கள் புக் பண்ணும்போது என்னென்ன வசதி இருக்கிறது என்று முழுமையாக படித்துவிட்டு புக் பண்ண வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் ஏகப்பட்ட விஷயங்களை சொல்லி காசு கறந்துவிடுவார்கள்.
 
 
 
ஒகேனக்கல்
 
 இங்கே மசாஜ் செய்ய எண்ணெய் பாட்டிலுடன் பலரும் வலம் வந்து கொண்டிருப்பார்கள். எண்ணெய் மசாஜ் செய்தால் உடலில் உள்ள நோய் எல்லாம் போய்விடும் என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள். எண்ணெய் மசாஜ்க்கு அதிகபட்சம் என்றால் 150, 200 ரூபாய் கொடுக்கலாம். 500, 1000 ரூபாய் கூட வசூலிப்பது நடக்கிறது. எனவே, பேரம் பேசுங்கள். அவர்களாகவே இறங்கி வருவார்கள். அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். படகு சவாரி செய்யும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்களுக்கு யாருமே பார்க்காத இடம் காட்டுகிறேன் என அழைத்துபோய், யாருமற்ற இடத்தில் வைத்து பணத்தையெல்லாம் பிடுங்கிவிட்டு, விரட்டி விட்டுவிடுவார்கள் ஜாக்கிரதை.
 
 
 
முக்கொம்பு
 
 திருச்சி மாவட்டம், கல்லணை முக்கொம்பு செல்லும் தம்பதிகள் / இளம் ஆண், பெண் தனியாக போனால், அங்கு அவர்களை மிரட்டி காசு பறிக்கும் கும்பல் சுற்றுவதாக பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இப்போதும்கூட பல நேரங்களில் தம்பதிகள் தனியாக போக முடியாத நிலை இருக்கிறது. எனவே உஷாரக இருக்க வேண்டும்.
 
 
 
 
 
திருச்செந்தூர் முருகன் கோவில்
 
 இந்தக் கோவில் வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டு டிப்டாப் ஆக இருக்கும் ஆசாமிகள் பக்தர்களை அணுகி ''சாமியை பக்கத்தில் பார்க்கலாம். வரிசையில நிக்க தேவை இல்லை. ஆயிரம் ரூபாதான் செலவாகும்தான்" என்பார்கள்.
 
 குடும்பத் தலைவரும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குடும்பத்தில் இருக்கிற 5 பேரும் சாமியை பக்கத்தில் பார்க்கலாம் என்கிற சந்தோஷத்தில் சரி என்று, அந்த டிப்டாப் ஆசாமியுடன் போவார்.
 
 டிப்டாப் ஆசாமிக்கும், கோவில் பூஜாரிகளுக்கும் ஏற்கெனவே டைஅப் இருப்பதால், விறுவிறுவென கோவிலுக்குள் அழைத்து செல்வார். சிறப்பு அர்ச்சனை நடத்தி, மாலை அணிவித்து பத்து, பதினைந்து நிமிடத்துக்குள் சாமி தரிசனம் சிறப்பாக முடிந்து விடும். கோவில் வளாகத்துக்கு வந்த பிறகு டிப்டாப் ஆசாமியிடம் குடும்பத் தலைவர் ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டுவார். அங்கே தான் பிரச்னை ஆரம்பிக்கிறது.
 
 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்ட அந்த டிப்டாப் ஆசாமி, ''இன்னும் நாலாயிரம் ரூபாய் கொடுங்க சார்" என்பார். ''ஆயிரம் ரூபாய்தானே சொன்னீங்க?" என்று கேட்டால், ''ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கேட்டேன். ஐந்து பேர் ஐயாயிரம் ரூபாய் கொடுங்க" என்பார். அப்படி இப்படி என்று சண்டை சச்சரவாகி கூடுதலாக 4,000 ரூபாய் இழந்திருப்பார். அல்லது பேரம் பேசி கூடுதலாக 2000 ரூபாய் மட்டும் கொடுத்திருப்பார்.
 
 கூடுதலாக பத்து, பதினைந்து நிமிடங்கள் வரிசையில் நின்று காத்திருந்து சாமியை கும்பிட்டுவிட்டு வந்திருக்கலாமே என அந்தக் குடும்பத் தலைவர் ஊர் போய் சேரும் வரை நினைத்துக் கொண்டே இருப்பார். இது போன்ற நிகழ்வு உங்களுக்கு ஏற்படாமல் இருக்க உஷாராக இருங்கள்.
 
 
 
மதுரை
 
 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குங்குமம் பிரசித்தி பெற்றது. கோவில் அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்தது என்று சொல்லி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் 100, 200 ரூபாய்க்கு தரம் குறைவான குங்குமத்தை பலரும் விற்கிறார்கள். இந்த குங்குமம் விலை அதிகம் என்பதோடு, அலர்ஜியை ஏற்படுத்துவதாக இருக்கும். கோவில் வளாகத்தில் இருக்கும் கடைகளில் மட்டும் குங்குமம் வாங்குங்கள். அடுத்து கோவிலுக்கு வெளியே அம்மனுக்கு சாத்திய புடவை என்று கடைகளில் வாங்கிய சாதாரண புடவைகளை 1000, 2000 ரூபாய் என்று பக்தர்களிடம் விலை சொல்வார்கள். பூஜாரியிடமிருந்து வாங்கிக்கிட்டு வருகிறோம் என கதை வேறுவிடுவார்கள். இந்த பாலிஸ்டர் பட்டு புடவைகளை கடைகளில் 200 ரூபாய்க்கு வாங்கி இருப்பார்கள். எனவே, பக்தி என்கிற பெயரில் பணத்தை இழக்காதீர்கள்.
 
 மீனாட்சி திருக்கல்யாண நேரத்தில் மண்டபத்தில் உட்கார வைப்போம் என்று சிலர் டிக்கெட் விற்பார்கள், அதை நம்பி வாங்கி விடாதீர்கள். மதுரையிலுள்ள அனைத்து கோயில்களுக்கும் குறைந்த செலவில் வாகனத்தில் அழைத்து செல்கிறோமென்று கைடுகள் என்ற போர்வையில் சிலர் நம்மிடம் தூண்டில் போடுவார்கள். நம்பி சென்று விடாதீர்கள். நாலைந்து கோயில்களை மட்டும் காட்டி காசை கறப்பார்கள்.
 
 மதுரையில் காட்டன் சேலைகள், துணிமணிகள் விலை குறைவு. இக்கடைகள் வெங்கலக்கடைத்தெரு, கீழவாசல் சந்திப்பு, தெற்கு மாசி வீதிகளில் மட்டுமே உள்ளது. சில இடங்களில் புரோக்கர்கள் நின்று கொண்டு வாங்க வாங்க என்று அழைப்பார்கள். தரமில்லாத துணிகளை வாங்கி ஏமாந்து விட வேண்டாம். அதேபோல் சந்து பொந்தெல்லாம் ஜிகர்தண்டா கடைகள் இருக்கும். எல்லாக் கடைகளிலும் சாப்பிடாதீர்கள். இதற்கென்று சில பாரம்பர்ய கடைகள் உள்ளன, விசாரித்தால் சொல்வார்கள்.

 Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies