உன் .....
காதலுக்கு.....
நன்றி......
நீ சென்றபின்னும்....
என்னோடு வாழ்கிறது......
உன் நினைவுகள்.....
புண் பட்ட இதயத்துக்கு.....
புனித நீராய் சுகம்.....
தருகிறது.........!
காதலில் தோற்ற இதயம்.....
சஹாரா பாலவனம்.....
புரிந்துகொண்டேன்......
உன் காரணமில்லாத.....
பிரிவால் - உன் பிரிவு.....
காயமாக இருந்தாலும்.....
உன் வலிகளில் சுகமும்.....
இருக்கத்தான் செய்கிறது.....
நான் எப்படியோ போகிறேன்....
நீ மட்டும் இதயத்தில்.....
பத்திரமாய் இருக்கிறாய்.....!
சேர்ந்து .......
வாழும் காதலில்.....
சுகம் உண்டு.....
பிரிந்து வாழும் காதலிலும்.....
சுகமிருக்கும் ........
பிரிந்து வாழும் காதலில்....
இதயம் ஒரு சுமைதாங்கி.....!
தாங்க முடியாமல் .....
துடிக்கிறது இதயம்.....
உன் இதயத்தையும்.....
வாடகையாய் கொடு....
வலியை சுமக்க கூலி.....
தருகிறேன்.........
இல்லையேல் மரணத்தை....
பரிசாக தருகிறேன்.......!
உன்னை ......
பார்க்கமுன்னர்.....
நான்கு வார்த்தை திட்டனும்.....
நாக்கு புடுங்கும் வகையில்....
கேள்வி கேட்கனும்......
என்றெல்லாம் ஜோசிப்பேன்......
உன்னை கண்ட நொடியில்....
இரக்கத்தோடு பார்க்கும்.....
கண்களாளும்......
படபடக்கும் இதயத்தாலும்....
தோற்றுவிடுகிறேன்.....!
இன்னும்
தேடிக்கொண்டு இருக்கிறேன்.......
உன் இதயத்தை கவரும்.....
கவிதை எழுத்தும் வார்தைகளை....
முடியாமல் தவிக்கிறேன்....
உன் காதலுக்காய்.....!
உன் நிவைவுகளை......
தொகுத்து ஒரு அகராதி......
எழுத முடியும் ஆனால்........
உனக்கு என் கவிதை
பிடிக்கவேண்டுமே..........
தவிக்கிறேன் உனக்காக.....
ஒரு கவிதை எழுத உயிரே....!
தமிழ் முதல் மொழி ....
சீனத்திலும் உண்டு ....
சீமையெல்லாம் உண்டு.....
உன் விழிகள் பேசும் ....
வார்த்தை மட்டும் ......
என்னிடம் தான் உண்டு ...!
போதும் போதும் .......
நீ விழியால் பேசியது.....
வலிமேல் வலி தந்து......
விளையாடுவது போதும்....!
நீ ஒன்றுமே .....
செய்ய வேண்டாம்...
காதலிக்கிறேன் என்று.....
மட்டும்சொல்..........
அந்த வார்த்தையை......
வைத்துக்கொண்டே..........
அகராதி எழுதிவிடுகிறேன்...!
நீ
கலைந்தே போனாலும்
கலையவில்லை....
உன் கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்
விலகவில்லை
உன் நினைவுகள்...!
நீ
மறந்தே போனாலும்.....
மறக்க வைக்கவில்லை.....
உன் நினைவு பரிசுகள்....!
நீ
சேர்ந்தே போனாலும்....
சேதமாகவில்லை....
என் காதல்.......!
பொல்லாதவன்.....
ஆக்கியவளே.............
உன் ஒவ்வொரு அசைவையும்......
திருட மனசை தூண்டியவளே......
உன் கொலுசைகூட........
திருடவைத்துவிட்டாய்.........
இத்தனை தவறுகளையும்......
செய்யவைத்துவிட்டு.......
எதுவுமே செய்யாதவள்........
போல் உன்னால் எப்படி.......
இருக்க முடிகிறது....................?
இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது