கண்காணிப்பதற்காக கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த கணவன் – பெண் காதலனுடன் ஓட்டம்!
20 Sep,2017
தனது மனைவியின் கள்ளத் தொடர்பை கண்காணிப்பதற்காக சில நாட்களாக கணவன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தமையினால் கோபமடைந்த பெண்ணொருவர், கணவனின் செயற்பாட்டினால் அதிருப்தியடைந்து கள்ளக்காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவமொன்று கண்டியை அண்மித்த பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு அழைப்புவிடுத்த பெண்ணொருவர், தனது படுக்கையறை கட்டிலுக்கு அடியில் இனந்தெரியாத நபரொருவர் ஒளிந்துகொண்டிருப்பதாகவும், தனது கணவன் அண்மையில் வெளிநாடு சென்றிருப்பதால் தனக்கு பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் தனது தந்தையுடன் வீட்டில் வசித்துவருவதாகவும், இரவு நேரத்தில் விளக்கேற்றுவதற்காக வீட்டின் மேல் மாடிக்கு சென்றபோதே கட்டிலுக்கடியில் நபரொருவர் பதுங்கியிருப்பதை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவ்வீட்டுக்கு விரைந்த பொலிஸார் சோதனையை ஆரம்பித்து கட்டிலுக்கு கீழாக பதுங்கியிருந்த நபரை வெளியே கொண்டுவந்துள்ளனர்.
அதன்போது வெளிநாடு சென்றதாக கூறிய கணவன் கட்டிலுக்கு கீழிருந்த வந்ததைக் கண்ட பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, தனது மனைவியின் கள்ளத்தொடர்பினை கண்காணிப்பதற்காகவே தான் இரவு நேரங்களில்வந்து சில நாட்களாக இவ்வாறு மறைந்திருந்து உளவு பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது கணவனின் இந்த செயற்பாட்டினால் கோபமடைந்த குறித்த மனைவி தனது கணவனுடன் வாழ முடியாது என தெரிவித்து முச்சக்கரவண்டியொன்றினூடாக தனது கள்ளக்காதலனை தேடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார்