உயிரே என் உலகம் நீதான்
08 Sep,2017
மென்மையின் தன்மையும்
பெண்மையின் மென்மையும் புரிந்து போனதடி.
பெண்மை உன் மென்மை
எனக்கே சொந்தமடி இல்லையேல்....
நான் உயிர் வாழ்தல் பாவமடி
எப்படி உன் வசம் நான்
களவு போனேனோ தெரியவில்லை
சத்தியமாய் நீ அருகின்றி இருக்க முடியவில்லை
பெற்றவள் தாய் நிலையாய்
உன் உருவமடி உன் மடியோடு சாய
என் மனதில் ஏக்கமடி
என் பிறப்பின் அர்த்தம் நான் கண்டு கொண்டதே
உன் வருகையில் தானேடி என் வாழ்வின் வசந்தமே
நின் புன்னகையில் தானேடி.
உயிருள்ளவரை - என் உலகம் நீ தான்.
உயிர் வரை - என்
உலகம் நீ தான்.
உலகத்தின் சுற்று நிற்கிலும்
என் உண்மை காதல் மூச்சு நிற்காது.
கதிரவன் அற்று போகினும்
என் காதல் பச்சையம் இழக்காது.
காற்றே நின்று
கீவராசிகள் அற்று போகினும் என் காதல் அழியாது.
உயிரே......
நீ என் அருகொடிருந்தால் துயர் கூட
அவைகள் எனக்கு துரும்பு எத்தனை இடர் வரினும்
அவை என் சவால்கள் விடி காலையில்
உன் புகைப்படத்தை
என் கண்ணுக்குள் வைத்தால்தான்
என் கண்கள் தெரியுமடி எனக்குள் இருக்கும் இருளது ஒழியும்
தொலைபேசி உரையாடலூடே
உன் கொஞ்சலும்,கெஞ்சலும் குழந்தையை
உன் சினுங்கலும் கேட்க கேட்க ஆயுள் பெருகுதடி
ஓர் சில நாள் உன் குரல் என் செவிகளில்
விழாமல் போனதிற்கே என்னுள்
நானே எத்தனையோ தடவைகள் மரணித்து போயிருக்கேன்
உண்ணவும் முடியாமல் உறங்கவும்
முடியாமல் தவித்து போயிருக்கேன். நாடு
நிசி தாண்டியும் நின் நினைவுகளோடு கடிகார கம்பியோடு
நானும் ஒருமித்து
அதன் நகர்வை நோக்கி விடிகாலை
உன் குரல் கேட்க தவித்து கிடந்திருப்பேன்
என்னடி செய்தாய் என்னை? எப்படி களவாடினாய்?
நானா இப்படி?
என் நிலையா இப்படி?
எத்தனை பேரை தாண்டி வந்திருப்பேன்
அப்போதெல்லாம் நான் இப்படி ஆனதில்லை
என் மனம் இப்படியாய் வலித்ததில்லை
இதயம் இப்படி வேகமாய் துடித்ததில்லை
எத்தனையோ பெண்கள் பார்த்திருப்பேன்
அப்போதெல்லாம் இப்படியாய் நான் களவு போனதில்லை.
மனதை பறிகொடுத்து பரிதவித்து போனதில்லை
வாழ்வில் வலிகள் எனக்கு தெரியாது
அவற்றை நான் தழுவி போனதில்லை நேற்று வரை
அதன் முகவரி எனக்கு தெரியவில்லை
ஆனால்...... இப்பொழுது வலிக்கிறது
நீ கொள்ளும் மௌனத்தால் வலி
நின் புன்னகையும் பார்வையும் மீண்டும் காணா வலி
அதுவும் ஒரு விதத்தில் உன்னை சார்ந்தபடியினால்
சுகமாய் இருக்கிறது காதலில்
வழியும் ஒரு விதத்தில் சுகம் தானே.
கண்ணுக்குள் நிலவாய் எனக்குள்
நீ இருந்தாலும் என் காதல்
நின் திடமான பதிலின்றி தினமும் எனக்குள்
பட்டினி போராட்டம் . உண்ணும்
உணவு கூட வெறுத்து போகிறது.
இனிக்கும் இனிப்பும் பாவற்காய்
கசப்பாய் கசந்து போகிறது.
வீட்டுக்குள் வந்தால் நாற்புற சுவரிடையில்
மூச்சு முட்டுவதாய் மனவெளிகள்
சிதறி பித்து பிடிக்கிறது.
ஒலி நாடா இசையில்
உனது நினைவுகளோடு
கண்கள் பல சமயம்
பனித்து போகிறது
உனக்காய்
என் காத்திருப்பில் வேரூன்றி.........
கிளைகள் பரப்பி....
விழுதுகள் தோன்றி.....
மண்ணில் ஊன்றும் அதுவரை கூட நீ எனை வதைத்தால்
அதுவரை கூட
நான் காத்திருப்பேன்.
நீ சொல்லல் அடித்தாலும் அவற்றை தாங்குவேன்......
கல்லால் அடித்தாலும் - அதை
என் காதல் சின்னமாய் காப்பாற்றி தொழுவேன்.
கற்கும் வயதில் கற்பவை கசடற
கண்ணியமாய் கற்று
நின் கனவுகள் மெய்ப்பிப்பாய்
அதுவரை நான் உனக்காய் காத்திருப்பேன். என்று
நின் சமாதானமோ அது நீண்டு போனாலும் அதுவரை
நான் உனக்காய் காத்திருப்பேன்.
எங்கு நான் போகினும் எப்போதும் எனக்குள் என்றும் நீஇருப்பாய் .
ஏனெனில்........ என் உயிருக்குள்
உயிராய் உறைந்து போனவள் நீ.
என்றும் எனை தொடரும்
எனது நிழல் போல்
நீக்கமற எனக்குள்
என்றும் நீ இருப்பாய். தனித்து விடப்பட்ட
நாடு நிசி காட்டிலாய் திக்கற்று முழிக்கிறேன்.
கடல் நடுவே தீவிலாய் தனிமையில்
சாவதாய் கரையேறும் எண்ணத்தை கைவிட்டு மரிக்கிறேன்.
நெஞ்சை குடைந்தபடி
உன் எண்ணங்கள்... படுக்கையில் முகடுகளை வெறித்தபடி
என் விழிகள்
கனவுகளை களித்தபடி என் இரவுகள்
கற்பனைகள் கடந்தபடி என் பொழுதுகள்
உணர்வுகளோடு ஒன்றி உயிரோடு உயிராய் உன் உறவாடி.
கடிகாரம் காட்டும் கணங்களெல்லாம்
உன் நினைவுகள் தானடி.
உயிர் வாழ ஆசை இல்லையடி
உனக்காய் வாழவே ஆசையடி.
தேனாய் உன் வார்த்தைகள் இல்லது போகினும்..
விடமாய் வீசாதே... மரிக்கும் வரை உண்மை காதலோடு
மௌனியாகி போகிறேன்.