மது
23 Dec,2016

மது
எத்தனை
இரவுகளில்
தன்னந்தனியே
உருவமற்ற
திரவமாய் நீ -என்
தீவிரக்தகாதலியாய்
கண் காது மூக்கு வாய்
என்று உனக்கேதுமில்லை
இருந்தாலும்
உன்னோடு நான்
பேசாமல் இருந்ததுமில்லை
என்னை -நீ
பேசவைக்காமல்
இருந்ததுமில்லை
எனக்குள் -நீ
நிரம்பி இருந்த
பொழுதுகளில் தான்
என்
பால்ய நினைவுகள்
மீள் உருப்பெறுகின்றன
வார்த்தைகள்
தடுமாறும்
பாக்கியம் பெறுகின்றன
நிசம்
தவிர்ந்த
நிழலுலகம்
நிறைவேறுகின்றன
அழவைப்பதும்
எழவைப்பதும் -பின்
விழவைப்பதும் -உன்
குறும்புக்குணங்கள்
பெண்கள்
கண்டால் ஒதுங்குவதும்
பெரியோர் முன்
தலை பணிவதும் -உன்
பயனே
யார் யாரோ
சொல்கிறார்கள் -நீ
சூனியக்காரி
சூத்திரக்காரி
குடிகெடுப்பவள் என்று
இருந்தாலும்
என் கண்ணுக்கு -நீ
என்னை மயக்கும்
மந்திரக்காரி
இன்றோ
என்றோ ஒருநாள்
நீயும் நானும்
பிரிந்தாகவேண்டும்
இல்லையேல் -நீ
என்னைக்கொல்ல
விருந்தாக வேண்டும்