சம்பந்தன் தாளத்தில் ஏலத்திற்கு வரப்போகும் ஈழ தமிழர்கள்! எங்கே பிரபாகரன்???

11 Nov,2016
 


சம்பந்தன் தாளத்தில் ஏலத்திற்கு வரப்போகும் ஈழ தமிழர்கள்! எங்கே பிரபாகரன்???


தமிழ் மக்களின் உரிமைக்காண தீர்வை பெற்றுக்கொள்ள நமது தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் போராட்டங்களுக்கு இவ் வருடத்துடன் 68 ஆகிவிட்டது.

இந்த காலப்பகுதியில் இந் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தையில்  தொடர்ந்து ஈடு பட்டவர்களில் ஏமாற்றத்துடன்  மறைந்த தலைவர்களே அதிகம்.

ஈழத்தமிழர்களின் இறுதி எதிர்பார்ப்பு பிரபாகரன் மட்டுமே என்பதனை தற்போதைய தமிழ் தலைவர்கள் அழகாகவும், ஆணித்தரமாகவும்  நிரூபித்த வண்ணம் உள்ளனர்.

சிலர்  தற்போதைய தமிழ் தலைவர்களை நம்பி பயனில்லை எங்கே பிரபாகரன் ? என கேள்வி தொடுத்த வண்ணம் உள்ளனர்.


சம்பந்தன் ஐயாவினை நம்பிய மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே..

தற்போதைய நிலையில் இலங்கையில்  பேச்சுவார்த்தையோ அல்லது சாத்வீக போராட்டங்களோ இல்லை. ஆயுதப்போராட்டங்களோ சிங்களத்தை அணுவும் அசைக்கவில்லை. அவ்வாறான போராட்டங்களையும், பேச்சுவார்த்தைகளையும் எப்படி சமாளிக்கலாம் என்பதையும் சிங்களத்திற்கு சிறப்பாக கூறுவதும் காட்டி கொடுத்து காரியத்தை சாதித்துக்கொண்டுவரும் சில நமது  சுய நல தலைவர்களே என்பதும் உண்மையே.

அதே பாணியிலேயே தமிழ் சமூகம் தொடர்ந்து துயரங்களை இன்றுவரை அனுபவித்துக்கொண்டு வருகின்றது. இந்த சமூகத்தின் துயரை நீக்கபோவதாக வீர வசனத்துடன் வந்த அனைத்து தமிழ் தலைமைகளும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும்வரை கூறும் விடயங்களை பாராளுமன்றத்திற்குள் சென்றவுடன் மறப்பதற்கு காரணம் என்ன ?.

அதே நேரம் தமிழ் மக்களை மீண்டும் சந்திக்கும்போது மறு சீரமைக்கப்பட்டவர்களைப்போல் மீண்டும் சீறிப்பாய்வதும்,  அப்பாவி தமிழ் மக்கள் முன்னேயன்றி  பாராளுமன்ற எல்லைக்குள் இவர்கள் சென்றுவிட்டால் வீரவசனங்களும் தீர்விற்கான அழுத்தங்களும் அப்படியே  மறந்துவிடுவதும் வழமையாகவே நடைபெற்று வரும் செயலாகும்.

இவைகள் ஏன் என்பதே தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் சந்தேகங்களாகும். அந்த சந்தேகத்தையே எத்தனை நாட்களுக்கு வருடங்களுக்கு  தமிழ் மக்கள் நினைத்துக்கொண்டு மீண்டும் அதே தலைவர்களை அல்லது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துக்கொண்டிருப்பது ?  அதற்கு மாற்று சிந்தனைகள் வரவேண்டுமல்லவா ? .

அந்த புதிய சிந்தனை என்ன எப்படி மக்கள் முன் எடுத்து செல்வது யாரால் எடுக்கப்படல் வேண்டும் என்பதையெல்லாம்,  சிந்தனை செய்து திட்டங்களை தீட்டி செயல்பட முன்வருபவர்கள் யாராக எப்படி பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இன்றைய பிரச்சினையாகும்.

இதுவரை  இருந்த தமிழ் தலைவர்களையெல்லாம் நாம் சற்று ஞாபகப்படுத்தி பார்த்தால், நாம் ஏற்றுக்கொண்ட அத்தனை தலைவர்களும் கல்வியிலும் அரசியலிலும் செல்வத்திலும்  சட்டத்துறையிலும் வசதியானவர்களாகவே இருந்தார்கள். இ்ன்றும் இருக்கின்றார்கள்.

ஆனால் இவர்களின் திறமைகளை முழுமையாக பயன்படுத்தியவர்கள் சிங்களவர்களேயாகும். இந்த தலைவர்கள் யாவரும் தங்களின் வாதத்திறமைகளில் நிபுணத்துவத்தை சிங்களம் தம்மை போற்றி புகழ்பாடவுமே பயன்படுத்தியுள்ளார்கள். இன்றும் பயன்பட்டுக்கொண்டு தமிழர்களை ஏமாற்றும் வழிவகைகளையே செய்கின்றார்கள்.



இன்று அரசுக்கு தேவை அவர்களை புகழ்பாடும் எதிர் கட்சி. அதற்காக அரசியல் நிபுணத்துவத்தைகொண்ட இரா.சம்பந்தன் அவர்களை அரசு தங்களுக்கான செயல்பாட்டிற்கு தாளம்போடும் காரியத்திற்காக நன்கு பயன்படுத்திக்கொண்டு வருகின்றது.

அதனால் தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளைக்கூட தீர்த்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் வாழ்கின்றார்கள். கடந்த 68 வருடங்களாக சிங்கள அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏதோ காரணம்காட்டி ஏமாற்றிக்கொண்டே வந்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் வயது 68 ஆகிவிட்டது. அப்படியாயின் தற்போதைய எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் அவர்களின் வயது 83 ஆகிவிட்டது. இவர் பிறந்து 15 வயதான சிறுவனாக இருந்த போதே நாடு சுதந்திரம் பெற்றதோடு தமிழ் மக்களின் பிரச்சினைகளும் ஆரம்பித்துவிட்டது.

இவர் 18 வயதடைந்த காலம் முதல் இன்றுவரை பார்த்தாலும் 65 வருடங்களாக தொடரும் மக்களின் பிரச்சினையை தீர்க்க சற்று பொருங்கோ நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்ற வார்த்தையையே நமது மக்களுக்கு சம்பந்தர் கூறுவதையே கேட்டுக்கொண்டு இன்றுவரை இருக்கும் நிலைமையே தொடர்கின்றது.

தமிழ் மக்கள் இருப்பிடங்களை இழந்தார்கள். உறவுகளை இழந்தார்கள்.  உரிமைகளுடன் வாழ்ந்த நிலங்களை இழந்தார்கள்.   உலக முழுவதிலும் அகதிகளாக உயிருக்கு பயந்து குடி பெயர்ந்தார்கள் ஏன் நம் நாட்டிலும் அகதிகளாக இன்றும் வாழும் அவலநிலை தொடர்க்கின்றது.

இந்த சூழ்நிலையிலும் எந்த வித பாதிப்பும் இன்றி நம் நாட்டில்  தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்றால் அது நமது தலைவர்களும் நாம் தெரிவு செய்த பாராளுமன்ற பிரதிநிதிகளுமே என்பதை உறுதிபடக்கூறலாம்.

நமது தலைவர்கள் எல்லாம் தங்களின் சுய நலங்களுக்காக,  அப்பாவி பொது மக்களை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்துகின்ற, இந் நிலையில் சிங்களமோ நாளுக்கு நாள் தமிழர்களை வெறுத்து ஒதுக்கும் நிலையே தொடர்கின்றது.

தென் இலங்கையில் தமிழர்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதே போல் இன்று வட கிழக்கு பகுதியிலும், இந் நிலை தொடரும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இருந்தும் இப்பொழுது த.தே.கூ தலைவர் வடகிழக்கு மாகாண மக்களின் முழு ஆதரவுடன் இருந்தும் அதிகாரம் கைக்குள் வரவேண்டும் என்ற புரியாத புதிய கதையொன்றை கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளார்.



இந்த சட்டவாத கருத்தை பொது மக்கள் எந்தவகையில் எடுத்துக்கொள்வது என்று புரியாது தவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் சாதாரண பொது மக்கள் குறிப்பிடுவதோ எமது பாராளுமன்ற பிரதிநிதிகள் பாராளுமன்ற எல்லைக்குள் நுளைந்தவுடன் ஏதோ ஒருவகையில் மயக்கும் மந்திர கட்டுக்கு கட்டுப்பட்டு விடுகின்றார்களோ என்ற ஐயம் தோன்றிவிட்டதாக.

இந்த கருத்தும் சரியாகத்தான் இருக்கின்றது. இந்த நிலையில் சிங்கள இனவாத கோட்டையை தகர்த்து தமிழ் மக்களுக்கு சம உரிமையை பெற்று கொடுக்க ஊசி என்ற ஆயுதத்தை கொண்டு இனவாத கோட்டையை தகர்க்க தமிழ்  தேசிய கூட்டமைப்பு இப்பொழுது தயாராகிவிட்டதோ என்ற சந்தேகமே தொடர்கின்றது.  காரணம் தமிழ் மக்கள் முன் உணர்ச்சிபொங்க வசனமும் பாராளுமன்றில் தமக்குரிய வசதிகளை பெற்று வருவதுமே இவர்களின் நாளாந்த செயல்பாடாக இருக்கின்றது. அதன் பயன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்  தவிர மக்களுக்கு இல்லை.

இவர்களின் செயல்பாடுகள் இன்றுவரை தமிழ் மக்களுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை.  இப்போதைக்கு சிங்களம் அபிவிருத்தி திட்டங்கள் என்ற திரைமறைவில் சிங்கள மக்களை சிறிது சிறிதாக குடியேற்றத்தொடங்கிவிட்டது. அதன் அறிகுறியே ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைக்கும் திட்டமாகவும் இருக்கலாம்.

இது போன்ற திட்டங்களின் பின் விளைவுகளைப்பற்றி எதிர் கட்சி தலைவர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.  காரணம் அவரின் காலத்தில் அரசு வழங்கும் வசதிகளுடன் வாழ்ந்துவிட்டு போக நினைக்கும் மனநிலையே தற்பொழுதுள்ள வயதின் எதிர்ப்பார்ப்பாகும்.

ஆகவே ஊசியை கையிலெடுத்து இனவாத கோட்டையை தகர்க்க முயல்வது வெறும் ஏமாற்றுவித்தையாகவே இருக்கும் என தமிழ் கல்விமான்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.  

 சம்பந்தன் தாளத்தில் விரைவில் ஏலத்திற்கு வரப்போகும் ஈழ தமிழர்களை காக்க இனி யார் வருவார் என பொருத்திருந்து பார்ப்போம்.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies