கடவுள் என்னோடு கனவில் பேசினார்: அதிரடியை கிளப்பிய ஜனாதிபதி
30 Oct,2016
கடவுள் என்னோடு கனவில் பேசினார்: அதிரடியை கிளப்பிய ஜனாதிபதி

தகாத வார்த்தைகள் கொண்டு பேசுவதை நிறுத்திக்கொள் இல்லை என்றால் விமானத்தை கீழே விழ செய்துவிடுவேன் என்று கடவுள் மிரட்டியதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டோ, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் ஆகியோரை தகாத வார்த்தைகள் கொண்டு விமர்சித்து பல சர்ச்சைகளில் சிக்கினார்.
தற்போது ஜப்பான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி ரோட்ரிகோ, ஜப்பானில் இருந்து பிலிப்பைன்ஸ் வரும் வழியில் விமானத்தில் பயணிக்கும்போது கடவுள் அவரிடம் பேசியதாக கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடவுள் தன்னிடம், தகாத வார்த்தைகள் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்; இல்லையென்றால் விமானத்தை கீழே விழ செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறினார்.
இதனால் அச்சத்தில் ஆடிப்போனதாகவும், இனி தகாத வார்த்தைகள் பேச மாட்டேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ரோட்ரிகோ பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் போதை மருந்து ஆசாமிகளை ஒழிக்கிறேன் என்று ஆயிரக்கணக்கில் குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதற்கு மனித உரிமைகள் அமைப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.