நீர்க்குமிழி
16 Aug,2016

இப்படித்தான்
தொடங்கி வைக்கிறாய்
எப்போதும்
என் குருதிநாளங்கள் உடைந்து
சிதறும் அளவு
மீச்சினத்தை
அழுகைகளாலே
ஆற்றிக் கொள்கிறேன்...
என்மீதான
உன்
வெறுப்பைத்தீர்க்க புளிக்காரச்சொற்களால்
உமிழ்ந்து கடக்கிறாய்...
விழுப்புண்களுக்கு நான் ஒத்தடமிட
வேறு எவரைத் தேடுவதாம்??
குறைகளால் நிரம்பியது இவ்வுடல்
பெருங்கடலாய் நுரைத்துச் சிதறி
சிறு நீர்க்குமிழியாய் நீர்த்துப் போகிறது என் அன்பு...
வற்றிய ஆற்றங்கரையில்
மணல் திருடத்தான் முடியும்
வேட்கை தீர்க்க இயலாதே!!!