திருப்பதி மலைப் பாதையில் பக்தர்களை விரட்டிய சிறுத்தை!
09 Feb,2011
திருப்பதி மலைப் பாதையில் பக்தர்களை விரட்டிய சிறுத்தை!
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி பக்தர்களை விரட்டியதால் பீதி ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மலை பாதை வழியாக கால்நடையாக நடந்து செல்வது வழக்கம்.
இப்பாதையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தைப் புலி ஒன்று சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்த பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் கால் நடைப்பாதையில் உள்ள மோகாலி மெட்டு என்ற பகுதியில் நேற்று பக்தர்கள் சிலர் நடந்து சென்றனர்.
அப்போது ஒரு சிறுத்தைப்புலி பாய்ந்து வந்து அவர்களை விரட்டியது. இதனால் பயந்து போன பக்தர்கள் கடும் கூச்சல் போட்டனர்.
இதனால் அவர்களை நோக்கி சீறி வந்த சிறுத்தைப் புலி திசை மாறி ஓடியது. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.
அவர்கள் இது பற்றி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் பக்தர்கள் புகார் கூறினர்.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள், “திருப்பதி மலைப் பாதையில் பக்தர்கள் யாரும் தனியாக வரக் கூடாது கூட்டமாகத் தான் வரவேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.Share 0