எச்.பி.வி தடுப்பூசி 500 பெண்கள் பாதிப்பு.. மேலும் செய்திகள்..

11 Jun,2015
 

              எச்.பி.வி தடுப்பூசி 500 பெண்கள் பாதிப்பு

கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்குமென நம்பி டென்மார்க்கில் உள்ள இளம் பெண்களுக்குப் போடப்பட்ட தடுப்பூசியின் பக்கவிளைவு காரணமாக சுமார் 500 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு எச்.வி.பி தடுப்பூசியே காரணமென சந்தேகிக்கப்படுவதாகவே ஊடகங்கள் எழுதுகின்றன.

கடந்த யூன் முதலாம் திகதியில் இருந்து இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான மேலதிக சிகிச்சை வழங்குவதற்காக ஐந்து சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளன, ஆனாலும் அங்கு வரும் யுவதிகளுக்கு சிகிச்சை வழங்க முடியாதளவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சுமார் ஐம்பது பேரை பரிசோதிக்கக் கூடிய ஒரு சென்டரில் 140 பேர் காத்துக்கிடக்கிறார்கள், விசேட வைத்தியர்கள் உட்பட பெரும் பற்றாக்குறை நிலவுவதால் பலருடைய காத்திருப்புக் காலம் ஒரு வருடமாக இருக்கிறது.

ஒல்போவில் உள்ள லோற்றா மாட்சன் என்ற 24 வயது யுவதி தனக்கு ஏற்பட்ட பக்க விளைவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார், இப்போது தினசரி பல தடவைகள் மயக்கம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எச்.வி.பி ஊசிதான் காரணமா என்ற கேள்விக்கு வைத்தியர்கள் நேரடியாக பதில் தரப்படாவிட்டாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்தப் பக்க விளைவு நோய்கள் ஏற்படுவது அவதானிக்கத்தக்கது.

தலைநகரில் உள்ள சென்டரில் 250 பேரும், மத்திய யூலன்டில் 140 பேரும், வடக்கு யூலன்டில் 76 பேரும், தெற்கு டென்மார்க், ஊதின்ச பல்கலைக்கழக வைத்தியசாலையில் 60 பேரும் வைத்தியம் செய்ய இடமில்லாமல் காத்துக்கிடக்கிறார்கள்.

இந்தத் தடுப்பூசியை போடுவதால் கர்ப்பப்பை புற்றுநோய் வராது என்பதற்கு யாதொரு உத்தரவாதமும் கிடையாது என்று கூறி டென்மார்க் முழுவதிலும் ஒரேயொரு வைத்தியர் மட்டும் தடுப்பூசியை தன்னை நம்பி வரும் நோயாளருக்கு போட மறுத்துள்ளார்.

யாரை நம்பி, எந்த மருந்து நிறுவனத்திற்காக, அல்லது எந்த நாட்டின் வழிகாட்டலை நம்பி இந்த ஊசிகள் போடப்பட்டன என்பதற்கு இதுவரை போதிய விளக்கங்கள் இல்லை

பாடசாலைகளில் கல்வித்தரம் வீழ்ந்துவிட்டது ஆசிரியர் கவலை


டென்மார்க் பாடசாலைகளில் கற்பித்தல் நேரம் நீடிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு பாட நேரத்திற்குமான தரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை ஆசிரியர்களில் சுமார் அரைப்பங்கினர் கல்வித்தரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

மொத்தம் 3000 பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து இந்தக் கருத்து திரட்டப்பட்டுள்ளது, 46.2 வீதமான ஆசிரியர்கள் பாடங்களின் தரம் வீழ்ந்துவிட்டதாகக் கூற, 1.7 வீதமானவர்களே தரம் கூடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாடசாலை ஆசிரியர்கள் 30 மணி நேரம் கற்பிப்பதற்கு தயாராவதற்காக வெறும் ஐந்து மணி நேரமே பாடத் தயாரிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது, இது போதியதல்ல என்று ஆசிரியர் சங்கத் தலைவர் ஆனர்ஸ் பொண்டோ கூறுகிறார்.

பாடசாலை மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளதா என்பதை ஊர்ஜிதம் செய்வதற்கு கல்வி அமைச்சரிடம் சரியான புள்ளி விபரங்கள் இல்லை என்றும் ஆய்வுக்கு பொறுப்பான தொலைக்காட்சி சேவை 2 கூறுகிறது.

2014ம் ஆண்டில் பெற்றோரிடையே காணப்பட்ட அதிருப்தி 23 வீதமாகவும் 2015ல் அது 37 வீதமாகவும் உயர்வு கண்டுள்ளது.

மாணவர்களைப் பொறுத்தவரை இதே காலப்பகுதியில் 16ல் இருந்து 30 வீதமாக உயர்வு கண்டுள்ளது.

ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகிய முத்தரப்பிலும் இந்தத்திட்டம் ஆதரவு பெறவில்லை என்பதை ஆய்வு தெளிவாக விளக்குகிறது, இது அரசுக்கு அடியாக இறங்கியுள்ளது.

பாடசாலை நேர நீடிப்பானது பிள்ளைகளின் தேகப்பயிற்சி நேரத்தை குறைத்து, மாணவர்களை வெறும் படிப்பு இயந்திரங்கள் ஆக்கியுள்ளதென்ற குறைபாடும், வேலை நேரம் நீடிப்பதால் சம்பள உயர்வு வேண்டுமென்ன ஆசிரியர் போராட்டமும் ஏற்கெனவே நடந்துள்ளன.

ஆசிரியர்களின் போராட்டத்தை சோசல் டெமக்கிரட்டி அரசு இரும்பு உலக்கை அடி போட்டு அடக்கியிருந்தது, இப்போது தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் இந்த ஆய்வு வெளிவருவதால் ஆசிரியர் சங்கம் சமயம் பார்த்து அரசின் முதுகில் ஓங்கிக் குத்த ஆய்வு வழி செய்துள்ளது.

அரசுக்கு எதிரான கருத்து எங்கிருந்து வரும் என்பதைக் குறிவைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அரசு செய்தது தவறு ஆனால் இந்த ஆய்வு சம்மந்தா சம்மந்தம் இல்லாத இந்த நேரம் வெளிவருவது அதைவிட பெரிய தவறு என்பதை சாதாரண மக்களாலும் உணர முடிகிறது.


டென்மார்க்கில் உள்ள ஈஸ்கொய் நகரத்தில் உள்ள வைலோ கிறீத்தவ தேவாலயம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக டென்மார்க்கில் இடம் பெறும் மத முரண்பாட்டு மோதல்களின் தொடர்கதையாக இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைதாகவில்லை.

அதேவேளை டென்மார்க் புறொண்ட் புய் நகரத்தில் இடம் பெற்ற இஸ்லாமிய புதைகுழி மீதான தாக்குதலிலும் இதுவரை யாரும் கைதாகவில்லை.

மறுபுறம் இஸ்லாமிய புதைகுழி இருக்குமிடத்தில் தாக்குதல் நடப்பது இதுதான் முதற்தடவையல்ல என்றும் இதற்கு முன்னர் ஒரு தடவை பன்றிகளின் தலைகள் வெட்டப்பட்டு இப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தற்போது இந்த புதைகுழிகள் இருக்கும் பகுதிக்கு பகல் நேரம் மட்டுமே காவல் போடப்பட்டுள்ளது, இதை 24 மணி நேரங்களும் அதிகரிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புக்கள் கேட்டுள்ளன.

மறுபுறம் நேற்று முன்தினம் டென்மார்க்கின் புகழ் பெற்ற எழுத்தாளர் எச்.சி. ஆனர்சனின் புதைகுழியில் உள்ள கல் வெட்டில் தூஷண வார்த்தைகள் எழுதப்பட்டு கீழே 69 என்றும் எழுதப்பட்டிருந்த விவகாரம் சூடு பிடித்திருந்தது தெரிந்ததே.

ஆனால் புறொண்ட்புய் பகுதியில் இஸ்லாமிய புதைகுழிகள் சேதப்படுத்தப்பட முன்னரே இது எழுதப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது.

இந்த புதைகுழி இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த 69 என்ற இலக்கமுள்ள கட்டிடம் தொடர்பான சிக்கல் ஒன்றுக்கும் இடையே தொடர்பிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்குள் மோட்டார் சைக்கிளை களவு கொடுத்த நபர் ஒருவர் அது களவு போன இடத்திற்கு சிறிது தொலைவில் நிறுத்தியிருப்பது கண்டு இன்னொருவருடன் சென்று மீட்டுள்ளார்.

அத்தருணம் ஐந்து முதல் ஆறு பேர்வரையான குழுவினர் வந்து இருவர் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார்கள், ஒருவருக்கு சுத்தியலால் மண்டை ஓட்டில் அடித்துள்ளார்கள், இன்னொருவருக்கு பல தடவைகள் கத்தியால் குத்திவிட்டு ஓடியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய கூட்டத்தை போலீஸ் தேடுகிறது, தாக்குதலுக்குள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், உயிராபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது.

இன்று வெளியான இன்னொரு ஆய்வின்படி டென்மார்க் வடக்கு யூலன்ட் பகுதியில் கார்களை ஓடும் ஒவ்வொரு 16 பேருக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் மது போதையில் கார்களை ஓடுவதாகக் கூறியுள்ளனர்.

இப்பகுதியில் வாழும் சுமார் 4000 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் நெஞ்சார்ந்த உண்மையை தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

மறுபுறம் டென்மார்க்கில் உள்ள உயர்வகுப்புக்கான பரீட்சைகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் பரீட்சையை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேர்லேவ் நகரத்தில் உள்ள கிம்நாசியம் – கோ.எப் பரீட்சைகளில் பங்கேற்ற மாணவர்களில் 56 பேர் பரீட்சை மண்டபத்தில் வழங்கப்பட்ட இணையத்தை பயன்படுத்தி பேஸ்புக், ட்றொப் பொக்ஸ் மூலமாக பரீட்சைக்கான விடைகளை பெற்றுள்ளார்கள் என்று கணித ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

முற்காலத்தில் கடதாசி துண்டின் மூலம் காப்பியடித்தவர்கள் இப்போது இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


தேர்தல் களம் சிவப்பு அணி முன்னேற்றம்


டென்மார்க் தேர்தல்களத்தில் வெற்றிக்காக தலைவர்கள் பல்வேறு திட்டங்களைப் போட இடையில் இஸ்லாமிய ஹிப் உல் தாகிர் அமைப்பின் தேர்தல் பகிஸ்கரிப்பு அறிவிப்பால் நிலமையில் மாற்றம் ஏற்பட்டது.

தமது புதைகுழிகள் தாக்கப்பட்டதற்கு அரசியல்வாதிகள் வெளிப்படையாக கருத்துரைக்கவில்லை என்றும் இஸ்லாமிய அமைப்பு கவலை தெரிவித்திருந்தது.

கொள்கைகளை கோட்டை விட்டுவிட்டு விவகாரம் இடுகாட்டில் பிணங்களை பிடுங்கும் இடத்திற்கு போனதால் தேர்தல் எப்படி மாறப்போகிறது என்பதை யாராலும் எதிர்வு கூறமுடியவில்லை.

இதற்குள் வொக்ஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் ஆளும் சோசல்டெமக்கிரட்டி அணி 51.9 வீதமான ஆதரவையும் வென்ஸ்ர தலைமையிலான எதிரணி 48.2 வீதமான ஆதரவையும் பெற்றுள்ளதாகக் கூறுகிறது.

திங்கள் இடம் பெற்ற கருத்துக்கணிப்பில் லிபரல் அலையன்ச, டேனிஸ் மக்கள்கட்சி இரண்டும் பின்தள்ளப்பட்டதால் எதிரணி பின்னடைவை சந்தித்துள்ளதாக வொக்ஸ் மீட்டர் கூறுகிறது.

புதைகுழி பிரட்டலுக்குப் பிறகு டேனிஸ் மக்கள் கட்சி 18.3 வீதத்தில் இருந்து 16.5 வீதமாக பின்தள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை அரசுக்கு மாறான இன்னொரு கருத்துக்கணிப்பு எதிரணிக்கு 89 ஆசனங்களும் ஆளும் கட்சிக்கு 86 ஆசனங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது, இவ்வாறு நாளுக்கு நாள் அலைபோல ஏறி இறங்கி வருகின்றன கருத்துக்கள்.

மறுபுறம் இன்னொரு தேர்தல் செய்தியின்படி டென்மார்க்கின் பாராளுமன்றத்தில் இடம் பெறும் வயது குறைந்தோர் தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கூறியுள்ளது.

1953ம் ஆண்டுக் கணிப்புக்களின்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 51.8 ஆக இருந்தது, கடந்த தேர்தலில் இது 44 வயதாக இறங்கியுள்ளது, இந்தத் தடவை மேலும் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டேனிஸ் மக்கள் கட்சியில் போட்டியிட்ட கரீனா சோன்சன் என்ற யுவதி 19 வயது 7 மாதங்கள் 12 நாட்கள் வயது இருக்கும்போது பாராளுமன்றுக்கு தேர்வாகி வயது குறைந்த பா.உ அக தேர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.


tks.s.durai



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies