தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று டென்மார்க்கில் உள்ள ஹிப் உல் தாகிர் அமைப்பு 370.000 பேருக்கு ஸ்ரெஸ் நோய் பாதிப்பு

07 Jun,2015
 

டென்மார்க்கில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்காது பகிஷ்கரிக்க வேண்டும் என்று டென்மார்க்கில் உள்ள ஹிப் உல் தாகிர் அமைப்பு இஸ்லாமிய மக்களிடம் கேட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

அல்லாவின் சட்டமே சட்டமல்லாது மற்றைய சட்டங்களை முஸ்லீம்கள் ஏற்றுக்கொண்டு வாக்களிக்கப் போகக்கூடாது என்றும் கேட்டுள்ளனர்.

இந்த விவகாரம் இன்று உச்சகட்டமடைந்து புறொண்ட் புய் நகரத்தில் உள்ள இஸ்லாமிய புதைகுழிகளில் உள்ள ஐம்பது புதைகுழிகள் சரித்து வீழ்த்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் டேனிஸ் அரசியல் வட்டகையில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஸ்லாமிய அமைப்பொன்றின் பேச்சாளர் டென்மார்க்கில் உள்ள 16.000 யெகோவாவின் சாட்சிகள் தேர்தலில் வாக்களிப்பதில்லை என்று கூறியுள்ளார்கள் அதுபோலவே தமது கடவுளாகிய அல்லாவின் கட்டளைப்படி மேலைத்தேய ஜனநாயகத் தேர்தலை ஏற்கவில்லை என்றுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித் ஒரு சர்வாதிகாரி என்றும், டென்மார்க் மற்றைய மதங்களை மதிக்காத சர்வாதிகார நாடென்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஹிப் உல் தாகிர் அமைப்பு வெளியிட்டுள்ள காணொளியில் பின் வரும் கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளது :

டெமக்கிரட்டி என்பது அல்லாவின் வழி அல்ல.. நீங்கள் வாக்களிக்கச் சென்றால் அல்லாவுக்கு எதிரானவர்களாவீர்கள்..

ஆளில்லா விமானக் குண்டு வீச்சு, தொலைபேசிகள் ஒற்றுக்கேட்பு, தாக்குதல் என்று விரிவடையும் செயல்கள் அல்லாவின் வழிகளுக்கு எதிரானவை என்றும் கூறியுள்ளது.

தேர்தலில் வாக்களித்தால் அமெரிக்காவின் கைக்கூலிகளாக இருந்து இஸ்லாமிய நாடுகளின் மீது குண்டு வீசுவோரை ஏற்றுக்கொள்வதாகவே அமையும் என்று தனது தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளது.

டென்மார்க்கில் வழங்கப்படும் கொன்ரன்ற் ஜெல்ப் எனப்படும் உழைக்காது பெறும் உதவியைப் பெற்றுக்கொண்டு அந்த உதவி வழங்கக் காரணமாக உள்ள ஜனநாயகத்தை புறக்கணிக்கலாமா என்ற கேள்விக்கு..

பேட்டியளித்தவர் தான் ஈராக்கை சேர்ந்தவன் என்றும் இன்று உலகில் உள்ள எந்த நாட்டில் நான் எனது குர்ரான் காட்டிய வழியில் வாழ அனுமதித்துள்ளீர்கள் என்று மறு கேள்வி எழுப்புகிறார்.

இதேவேளை இஸ்லாமிய புதைகுழிகளை சேதப்படுத்தியதை டென்மார்க்கில் உள்ள கட்சிகள் சில வன்மையாகக் கண்டித்துள்ளன.

இன்னொரு புறம் கடும்போக்கு மதவாதிகளின் கோரிக்கைகளை தாம் ஏற்கவில்லை என்று சாதாரண முஸ்லீம்கள் அமைப்புக்கள் கூறியுள்ளன.

டென்மார்க்கின் தேர்தல் களம் வைத்தியத்துறையை மேம்படுத்துவது குறித்து பேசிக் கொண்டிருக்க முற்றிலும் எதிர்பாராத திசையில் விவகாரம் திசை திரும்பியுள்ளது.

முஸ்லீம்கள் தேர்தலை பகிஷ்கரியுங்கள் என்ற கோரிக்கை அவர்களுக்கு எதிராகக் கருத்துரைக்கும் கட்சிகளுக்கு உழைக்காமலே வாக்குப் பெட்டிகளை நிறைக்கும் விசையாக அமைந்தாலும் ஆச்சரியப்பட இல்லை.

மனிதன் அறிவியல் விடுதலை பெறாதிருந்த மத்தியகாலத்தில் கேள்விப்பட்ட மதக் கருத்துக்களையும் மோதல்களையும் 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மறுபடியும் கேட்க வேண்டிய துர்ப்பாக்கியம் இன்றைய உலக மாந்தருக்கு ஏற்பட்டுள்ளது.

டென்மார்க்கில் புதை குழிகளை கிண்டி எறியும் ஏட்டிக்கு போட்டிகள் தொடர்ந்தபடி உள்ளன, நேற்று டென்மார்க் முஸ்லீம்களின் புதைகுழி மீது தாக்குதல் நடந்தது, இன்று டென்மார்க்கின் பிரபல படைப்பாளி எச்.சி.ஆனர்சன் புதை குழி சேதப்படுத்தப்பட்டது.

டென்மார்க் தலைநகர் நோபுரோவில் உள்ள மயானத்தில் இருக்கும் எச்.சி.ஆனர்சன் புதைகுழியில் உள்ள கல்லறையில் வெள்ளி நிறமான மையில் டென்மார்க்கை தரக்குறைவாக தூஷண வார்த்தையால் திட்டும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.

வாசகத்தின் கீழ் 69 என்ற இலக்கம் எழுதப்பட்டிருப்பதாகவும் போலீசார் கூறுகிறார்கள், வழிப்போக்கர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்த தகவல்களை தருவோர் தம்முடன் தொடர்பு கொள்ளும்படி போலீஸ் கேட்டுள்ளது.

நேற்று முஸ்லீம்களின் புதைகுழிகள் 50 சேதப்படுத்தப்பட்டிருந்தன, இன்று முறுகல் அடுத்த கட்டத்திற்கு போயுள்ளது, இது மிகவும் பாரதூரமான போக்கென போலீஸ் தெரிவித்துள்ளது.

காலஞ்சென்ற எச்.சி ஆனர்சன் டென்மார்க்கில் மட்டுமல்ல உலகப்புகழ் பெற்ற படைப்பாளியாகப் போற்றப்படுகிறார், கடற்கன்னி போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களைப் படைத்தவராகும்.

ஏட்டிக்குப் போட்டியான இந்த நகர்வு ஆரோக்கியமான சமுதாய வாழ்வை சிதைக்கும் தன்மை கொண்டதாக சமுதாய ஆர்வலர்கள் கலை கொண்டுள்ளார்கள்.

நவீன இஸ்லாமிய சிந்தனை அமைப்புக்கள் இத்தகைய செயல்களைக் கண்டித்துள்ளன.

370.000 பேருக்கு ஸ்ரெஸ் நோய் பாதிப்பு


ஸ்ரெஸ் என்று அழைக்கப்படும் மன அழுத்த வியாதியால் பாதிக்கப்படுவோர் தொகை டென்மார்க்கில் வேக வேகமாக அதிகரித்துச் செல்கிறது.

இன்று வெளியான தகவலின்படி மொத்தம் 370.000 பணியாளர்கள் ஸ்ரெஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்.எப்.ஏ, டென்மார்க் புள்ளிவிபரப்பிரிவு ஆகியன நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் செய்யப்பட்ட ஆய்வில் பின்வரும் தொழில்கள் மன அழுத்தத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தும் முன்னணித் தொழில்கள் என்றும் பட்டியலிட்டுள்ளனர்.

01. முடி திருத்துவோர், அலங்காரம் செய்வோர்

02. உளவியலாளர்

03. பல்கலைக்கழக விரிவுரையாளர், விஞ்ஞானிகள்

04. தொழிலுக்கு ஏற்ப உடலைப் பாவனைப்படுத்தும் வழிகாட்டும் ஊழியர்

05. ஊடகவியலாளர்

06. பாடசாலை ஆசிரியர்கள்

வேலைத்தல மன உளைச்சல், உடலை தப்பாக பாவிப்பதால் ஏற்படும் சேதம் வலி காரணமாக உருவாகும் விரக்தியானது டென்மார்க்கில் வருடந்தோறும் 14.000 பேரை கொன்றொழிக்கிறது.

டென்மார்க்கில் 2.5 மில்லியன் பேர் சம்பளம் உழைக்கும் ஊழியர்களாக இருக்கிறார்கள் இவர்களில் 14.55 வீதமான 370.000 பேர் ஸ்ரெஸ் நோயில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

Nலைத்தலத்தை மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கை மலரும் இடங்களாகவும் மாற்றாதவரை இதன் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும்.


டென்மார்க்கில் பெண்கள் வாக்குரிமை பெற்ற நூற்றாண்டு தினம்..


தலை நகரில் மகத்தான கொண்டாட்டம்ஸ

பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நூறாவது ஆண்டும், டென்மார்க் அடிப்படைச் சட்டங்கள் வரையப்பட்ட தினமும் இன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

டென்மார்க்கில் வாழ்வோர் மனித குலம் தேடிய அடிப்படை உரிமைகளை சட்டத்தின் வழி அனுபவிக்கவும், சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற உரிமையானது எழுத்தில் வரையப்பட்ட தினமாகவும் இன்றைய தினம் அமைந்திருக்கிறது.

ஒருவன் ஒருவனாகவே கருதப்படுவான் என்ற ஜனநாயகத்தின் அடிப்படை விதி மக்களுக்கு புரிய நூற்றாண்டு தாண்டிய வரலாறு தேவைப்பட்டுள்ளது, ஆனால் இன்றும் ஒருவனை ஒன்றுக்கு மேலாக கருதும் பண்பு உலக அரங்கில் நிலவுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

இந்த அடிப்படைச் சட்டத்தில் பெண்கள் வாக்குரிமை பெறும் சரத்து இணைக்கப்பட்டது 1915ம் ஆண்டு மே 5ம் திகதியாகும், அந்தவகையில் இன்றைய தினம் பெண்கள் வாக்குரிமை பெற்ற 100 வது ஆண்டு தினமாகும்.

benta

டென்மார்க்கில் ஆண்கள் வாக்குரிமை பெற்று 66 ஆண்டுகளுக்குப் பின்னரே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.

வாக்களிக்கும் உரிமையானது ஆண்களுக்கு முன்னதாகவே கிடைத்தாலும் கூட எல்லோருக்கும் வாக்களிக்க உரிமை வழங்கப்படவில்லை மிகவும் சிறிய தொகை ஆண்களே வாக்களித்து வந்தனர்.

1915ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வந்தாலும் கூட அன்றிலிருந்து சுமார் 25 வருடங்களாக 35 வயதுக்கு மேற்பட்டோருக்கே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது, அதற்குப் பிறகு செய்யப்பட்ட மாற்றம் காரணமாக 1961ம் ஆண்டு வரை 23 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க முடிந்தது, 1978 வரை 20 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தார்கள், 1978ற்கு பின்னரே 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள்.

பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரவேண்டும் என்ற பிரேரணையை 1886ம் ஆண்டு வென்ஸ்ர கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பிறட்றிக் பையர் என்பவர் முன்மொழிந்தார், இந்தப் பிரேரணை சுமார் 27 வருடங்களின் பின்னரே அடிப்படைச் சட்டத்தால் உள்வாங்கப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற போராட்டத்தை ஆரம்பித்தவர் யூற்றா பையர் என்ற பெண்மணியாகும், இவர் 1894 முதல் 1910 வரை நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாகவே பெண்களுக்கு இந்த வெற்றி கிடைத்ததால் இவர் வரலாற்றில் முக்கியமான ஒருவராகக் கருதப்படுகிறார், பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றதைக் கண்களால் கண்டு 1927ம் ஆண்டு மரணமடைந்தார், 1918ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள்.

nina

1924ம் ஆண்டு டென்மார்க்கின் முதலாவது பெண்ணாக நீனா பங் என்பவர் கல்வி அமைச்சராக பதவியேற்றார்.

முதலாவது பெண் நகர மேயராக றடிகல வென்ஸ்ர கட்சியைச் சேர்ந்த ஈவா மாட்சன் தேர்வானார், முதலாவது கட்சித் தலைவியாக சென்ரம் டெமக்கிரட் கட்சிக்கு மிமி ஜாக்கப்சன் தேர்வு செய்யப்பட்டார்.

முதலாவது பெண் வெளிநாட்டு அமைச்சர் லீனா எஸ்பர்சன் கொன்ஸ்சவேட்டிவ் கட்சியில் இருந்து தேர்வானார்.

முதலாவது டேனிஸ் பிரதமராக சோசல் டெமக்கிரட்டியில் இருந்து 2011ம் ஆண்டு இன்றைய பிரதமர் கெல தொனிங் சிமித் தேர்வானார்.

பெண்கள் வாக்குரிமை பெற்று சுமார் 96 ஆண்டுகள் காத்திருந்தே ஒரு பெண் பிரதமர் பதவியை எட்டித்தொட முடிந்திருக்கிறது, உலகத்தின் முதலாவது பெண் பிரதமர் சிறீலங்காவில் இருந்தே தேர்வானார் என்பதும் அவர் காலஞ்சென்ற சிறீமாவோ பண்டாரநாயக்கா என்ற சிங்கள பெண்மணி என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

eva

நியூசிலாந்தில் 1893ல் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள், சீனாவில் 1947லும், அமெரிக்காவில் 1920 லும், ரஸ்யாவில் 1917லும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.

டென்மார்க்கில் பெண்கள் வாக்குரிமை பெற்ற 100 வது ஆண்டு நிகழ்வுகள் இன்று தலைநகரில் கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த நூற்றாண்டு கால நிகழ்வை குறிவைத்து சோசல் டெமக்கிரட்டி பாராளுமன்றத் தேர்தலை வரும் 18ம் திகதி நடக்குமென அறிவித்திருந்தது இராஜதந்திரமான விடயமே.

இன்றைய தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் வென்ஸ்ர அணி 50.5 வீதமும் சோசல்டெமக்கிரட்டி அணி 49.5 வீதமும் பெற்ற நிலையில் நிற்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் சுகாதாரத்துறைக்கு டெனிஸ் பிரதமர் ஆறு பில்லியன் குறோணரை ஒதுக்குவதாக தெரிவிக்க இப்போது அவருக்கு போட்டியாக வென்ஸ்ர அணி ஏழு பில்லியன் என்று அறிவித்துள்ளது.

mimi

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நூற்றாண்டு வாக்குரிமையை பெறுமதி குலைய வைக்கும் புரி தேய்ந்த வேலையை இரு தரப்பும் செய்து மக்கள் காதில் பூ சுற்றும் வேலையில் இறங்கியிருப்பது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 ஆண்டுகள் ஆகியும் அரசியல்வாதிகள் திருந்தவில்லை என்பதன் அடையாளமாகவும் இருக்கிறது.

புரி தேயும் உலக ஜனநாயகம் மேலும் ஒரு மாற்றத்திற்காக காத்திருப்பதும் 21ம் நூற்றாண்டில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

பெரும்பான்மையால் ஆட்சி செய்யும் ஜனநாயகத்தின் தவறுகள் புதிய கோணத்தில் தீர்க்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது.Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies