சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட 14 வயதுச் சிறுமி-தவறான நோக்கில் சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்றவர்

01 Jun,2015
 

              


ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சிறுமியின் தாய் தந்தையர் வீட்டில் இல்லாத நேரம், தனிமையில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதென, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்குச் சென்றிருந்த சிறுமியின் சகோதரி பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து மூடியிருந்த கதவைத் திறந்தபோது தனது சகோதரி சுருக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் தெரிவித்த தகவலையடுத்து அயலவர்கள் ஒன்று கூடியிருந்த போதே தாய் தந்தையர் வீட்டுக்கு வந்து நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தந்தையாருடனும், ஒரு சகோதரன் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்த இந்தச் சிறுமி நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாதிருந்த இந்தச் சிறுமியே, தனது தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிந்தபோது வீட்டுச் சமையல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார். இந்தச் சம்பவம் பற்றி அறிந்த ஓமந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி அமிர்தலிங்கம் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு விசாரணைகள் நடத்தியதன் பின்னர் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும், புதிய வேலர் சின்னக்குளத்திற்குச் சென்று விடயம் குறித்து கேட்டறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சம்பவ இடத்தில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சிறுமியின் சடலத்தைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தவறான நோக்கில் சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்றவர் மீது ஊர் மக்கள் ஒன்று திரண்டு தாக்குதல் Video, 

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.

குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பிடிக்க முடிந்ததாக புத்தளம் காவற்துறையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுமி புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இரட்டை பிள்ளைகளில் ஒருவர் எனவும் மற்றைய பிள்ளை ஆண் பிள்ளை எனவும் கூறப்படுகிறது.

சிறுமி தினமும் தனது சகோதரனுடன் முச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வீட்டிற்கு திரும்புவது வழமை. எனினும் இன்றைய தினம் சந்தேக நபர் சிறுமியை தந்திரமாக ஏமாற்றி தில்லையடி வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பிரதேசவாசிகளும் புத்தளம் தலைமையக காவற்துறையின் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

தேடுதல் ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி காட்டிற்குள் இருந்து அழும் சத்தம் கேட்டுள்ளது. அழுகை சத்தம் கேட்ட திசையை நோக்கி பிரதேச வாசிகள் சென்ற போது சிறுமி அவர்களை நோக்கி ஓடி வந்துள்ளார்.

பிரதேசவாசிகளுடன் சென்ற சிறுமியின் தந்தை சிறுமி தூக்கி கொண்டு அருகில் உள்ள ரயில் பாதைக்கு ஒடி வந்ததுடன் அங்கு கூடியிருந்த சுமார் 2 ஆயிரம் பிரதேசவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


சிறுமியை தாயுடன் காவற்துறை நிலையத்திற்கு அனுப்பி விட்டு, பிரதேசவாசிகளும் காவற்துறையினரும் இணைந்து மீண்டும் காட்டில் தேடுதலை மேற்கொண்டனர். கடும் முயற்சிக்கு பின்னர் சிறுமியை கடத்திச் சென்ற நபரை பிடித்தனர்.

பிரதேசவாசிகள் ஆத்திரமடைந்து செயற்பட்டதன் காரணமாக பிடித்த நபரை காவற்துறை நிலையத்திற்கு கொண்டு செல்ல மேலும் ஒரு மணிநேரம் தாமதமானது. பிரதேசவாசிகள் சந்தேக நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி வேலாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் இருந்து ரயில் கடவை வரை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் பாலாவி பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.


மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் பளை – செம்பியன்பற்று பகுதியில் நடந்துள்ளது. நேற்றிரவு 10 மணியவில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மனைவியின் கழுத்தை வெட்டிக் கொன்ற கணவர், பின்னர், தனது கழுத்தையும் அறுத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இருவரது சடலங்களும் தற்பொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப்பரிசோதனைகளின் பின்னர் உறவிகர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன



Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies