டென்மார்க்கில் உள்ள கொன்ரன்ற் ஜெல்ப் பெறுவோரில் ஒவ்வொரு நான்கு பேருக்கும் மூன்று பேர் வெளிநாட்டவரே..

01 Jun,2015
 



இன்று காலை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வென்ஸ்ர கட்சித் தலைவர் லாஸ் லொக்க ராஸ்முசன் கூறிய பொன்னான கருத்துக்கள் சில :

டென்மார்க்கில் உள்ள கொன்ரன்ற் ஜெல்ப் பெறுவோரில் ஒவ்வொரு நான்கு பேருக்கும் மூன்று பேர் வெளிநாட்டவரே..

ஆகவே கொன்ரன்ற் ஜெல்ப் எனப்படும் உதவியை எஸ்.யு என்ற உயர் கல்வி கற்கும் மாணவருக்கு வழங்கப்படும் அடிமட்டத் தொகைக்கு இறக்க வேண்டும், வேலை செய்தால் 1100 குறோணர் மேலதிகமாகக் கொடுக்க வேண்டும்.

மருத்துவத்துறை எனது இதயம் போன்றது, முன்னர் நான் சுகாதார அமைச்சராக இருந்துள்ளேன்.. அதை மேம்படுத்த உதவ இருக்கிறேன், ஆனால் எங்கே என்று சொல்ல மாட்டேன் ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தையும் ஒரு நாற்சதுரமாகக் கருதினீர்களானால் அதற்குள் உள்ள அனைத்து இடங்களுக்கும் அது சுவறும்.

வாழ்க்கைச் செலவு உயர்கிறது, ஓய்வூதியம் பெறுவோருக்கு அதற்கேற்ப உயர்வு வழங்கப்படவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தேர்தலில் வென்றதும் இதைக் கவனத்தில் எடுப்பதாகக் கூறியுள்ளார்.

முதலாளிகளையும், சிறு முதலாளிகளையும் காப்பாற்றக்கூடியவாறு தந்திரமான முறையில் அவர் பதில் இருந்தது.

இரு அணிகளுக்கும் கையில் உள்ள பணத்தின் அளவு தெரியும், அதை வைத்து என்ன செய்யலாம் என்பதும் தெரியும், ஆனால் ஆளாளுக்கு ஊதிப் பெருப்பிக்கிறார்கள், எதையும் உருப்படியாக செய்ய இயலாது என்ற உண்மை உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும் என்ற கோணத்தில் இவர்களுடைய விழிகள் மோதும் போது அருவமான உண்மை ஒன்று தெறிப்பதை அவரவர் உடல் மொழியால் அடையாளம் காண முடிகிறது.

இதுதான் உலக ஜனநாயகம், இதுவும் இல்லாவிட்டால் சிறீலங்கா போல சீரழிய வேண்டியதுதான் ஆகவே குறைகள் இருந்தாலும் அதைவிட இது சிறந்தது என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

லாஸ் லொக்கவின் தவில் கச்சேரி அமோகமாக இருக்கிறது, சுருதி பிசகாமல் அதற்கேற்ப லிபரல் அலையன்ச போடும் தாளம், கொன்ஸ்சவேட்டிவின் ஏற்ற இறக்கமற்ற ஊமைக்குழல், கிறிஸ்டியான் ருலிசன்டாலின் நாதஸ்வரம் சகிதம் கச்சேரி அமோகமாக இருக்கிறது.

இவர்களை வீழ்த்தி ரசிகர்களை வெல்ல சின்னமேளம் இறக்க வேண்டியளவுக்கு வாசிக்கிறார்கள்..

சோசல் டெமக்கிரட்டி வென்ஸ்ரவின் நாதஸ்வரத்திற்கு தில்லானா மோனாம்பாள் ஆடியது போல ஆடாமல் ஜெகானா ஸ்கிமிற்றுடன் சேர்ந்து தனியான சின்ன மேள ஆட்டத்தை களமிறக்கினால் ஆட்டம் அமோகமாக இருக்கும்.


டவ்பெங்க என்று கூறப்படும் வேலையிழந்தோர் மாதாந்தப் பணக் கொடுப்பனவு விவகாரத்தில் நடந்த தவறை திருத்த வேண்டும், இதற்கு ஒழுங்கான பதில் சொல்லாது பற்றைக்குப் பின்னால் மறைந்திருக்கும் டேனிஸ் பிரதமர் இனியாவது வெளியில் தலை காட்ட வேண்டுமென எஸ்.எப் கட்சி கேட்டுள்ளது.

டவ்பெங்க பெறும் உரிமைக் காலத்தை நான்கு வருடங்களில் இருந்து இரண்டு வருடங்களாக குறைத்தது வென்ஸ்ர ஆட்சி.. ஆனால் முதலாளி வர்க்கத்திற்கு இருக்கும் சுரண்டல் புத்திபோல மறுபடியும் டவ்பெங்க உழைக்கும் காலத்தை மட்டும் அரைப்பங்காகக் குறைக்கவில்லை.

உதாரணம் எளிமையாகஸ

முன்னர் 10 குறோணர் கொடுத்தால் 2 கிலோ அரிசி கொடுத்தார்கள், இப்போது ஒரு கிலோதான் தருவார்கள்.. அப்படியானால் நீங்கள் ஐந்து குறோணர்தானே கொடுக்க வேண்டும்ஸ இல்லை இப்போதும் 10 குறோணர்தான் கொடுக்க வேண்டும்.

இதுதான் கணக்குஸ ஆகவேதான் கணக்கு கதைகளை தாம் பேச விரும்பவில்லை என்கிறாரோ வென்ஸ்ர தலைவர் லாஸ்லொக்க ராஸ்முசன் என்பது ஒரு கேள்வி.

சரி நீல நிற வென்ஸ்ர அப்படிச் சொன்னதென்றால் மக்களுக்கான சிவப்பு நிற சோசல் டெமக்கிரட்டி ஆட்சியில் இருந்த நாலு வருடங்களில் அதை குறைத்திருக்க வேண்டியதுதானேஸ இல்லை அவர்களும் ஏமாற்றிவிட்டார்கள்.

ஆகவேதான் எஸ்.எப். கட்சியும் டேனிஸ் மக்கள் கட்சியும் ஒன்றாக இணைந்து இந்த விவகாரத்தை யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் பேச இருப்பதாக அறிவித்துள்ளன.

அதில் ஒரு நாடகமே டேனிஸ் பிரதமரை பற்றைக்குள்ளால் இழுக்கும் எஸ்.எப்பின் கோஷம் நாலு வருடங்கள் ஒழித்திருந்தவர் வரும் 17 தினங்களிலா வெளியே வரப்போகிறார் என்பது சிறீமான் பொது சனத்தின் கேள்வியாகும்.

மக்கள் டிமன்சியா நோயில் இருப்பதாக எஸ்.எப் கருதுகிறதா என்பது அடுத்த கேள்வி அரசுடன் இணைந்திருந்து மந்திரிப்பதவி பெற்று தேனிலவு கொண்டாடிய போது எஸ்.எப் அதை ஏற்படுத்தியிருக்கலாமே.. ஏன் செய்யவில்லை..

இருந்தாலும் ராகுவும் கேதுவும் இணைந்தது போல எஸ்.எப்பும், டேனிஸ் மக்கள் கட்சியும் இணைந்ததும் ஒரு வேடிக்கைதான்.தேர்தல் வந்தால் என்னதான் நடக்காது..


டென்மார்க் தேர்தல் களம் நீலம் 51.2 சிவப்பு 48.2


தேர்தல் அறிவித்தவுடன் எந்தக்கட்சி கருத்துக்கணிப்பில் முன்னணி வகிக்கிறதோ அந்தக்கட்சி அடுத்து வரும் நாட்களில் பின்னடைவு கண்டு, பின் தேர்தலின் போது வெற்றி பெறுவது டென்மார்க்கின் கடந்தகால நிகழ்வாக இருக்கிறது.

அந்தவகையில் இன்றுவரை வென்ஸ்ர கட்சி அணிக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன, பிரதமர் கனவுகளுடன் லாஸ் லொக்க ராஸ்முசன் எஞ்சியிருக்கும் முடியையும் வெக்கை பிடித்து சுருட்டி பாத்திரத்தை சிறப்பாக நடித்து வருகிறார்.

வழமையாக கேள்விகளை முன்னரே பெற்றுக்கொண்டு தீர்வுக்கு வழி சொல்லத் தெரியாது.. தீர்வு வருகிறது வருகிறது என்று சொல்லியபடியே காலம் ஓட்டிவிட்டதாக ஆங்காங்கு கூறப்படும் கெல தொனிங் சிமித் அம்மையார் திடீர் திடீரென வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது திகைப்பதையும் அவ்வப்போது காண முடிகிறது.

பொதுவாக மக்களில் பெரும்பான்மையோர் கேள்விகளுக்கு பதில் கூறப்போனால் திகைக்கும் போக்குடையவர்களாக இருப்பதால் கெல தொனிங் வெற்றிபெற அதிக வாய்ப்புண்டு.

அதேவேளை இன்று தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த லாஸ்லொக்க ராஸ்முசன் பணத்தை ஒதுக்கும் விடயத்தில் தொகை தொடர்பான கூட்டல் கழித்தல்களுக்குள் தாம் வரவில்லை என்று கூறியுள்ளார்.

இரண்டு அணிகளுமே கணக்கில் எவ்வளவு வீக் என்பதை இந்த வரி எடுத்துரைத்தது.

அதேவேளை சுகாதாரத்துறை தொடர்பாக டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித்திற்கும், லாஸ் லொக்க ராஸ்முசனுக்கும் நேற்று விவாதம் நடைபெற்றது.

சூப்ப சுய்கூஸ் என்று தொடங்கிவிட்டு, இப்போது கட்டியிருக்கும் கட்டிடங்களை பார்த்தால் இருந்ததையும் கெடுத்த கதையாகவே தெரிகிறது, இந்தத் திட்டம் ஏறத்தாழ தோல்வியாக வாய்ப்புள்ளது.

மேலும் இரண்டு தலைவர்களுமே சுகாதாரத்துறை தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்கவில்லை இருவரிடமும் நாட்டின் பிரதான பிரச்சனையான வைத்தியசாலைகள் தொடர்பாக தீர்க்கமான பதில் இல்லை என்று செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

போட்ட திட்டங்களில் எதையாவது உருப்படியாக செய்தோமென காட்டாது தேர்தலுக்கு பின் செய்வோம் என்று இருதரப்பும் கூறுகிறது.

இதனால் கருத்துக் கணிப்பும் மிக பக்கம் பக்கமாக நிற்கிறது.. நாளை என்ன நடக்குமெனத் தெரியாது அன்றாடம் உழைத்து அன்றாடம் காய்ச்சும் நிலைக்கு மேல் ஒருவராலும் தூரத்து வெளிச்சம் போட முடியவில்லை.

அடுத்து வரும் 17 தினங்களுக்குள் யாராவது சரியான வெளிச்சம் போட்டு, தெளிவாக பேசினால் வெற்றியை திசை திருப்ப வாய்ப்புள்ளது.


tks.s.durai



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies