புலிகளுக்கு போலிக் கடவுச்சீட்டு: பாக் பிரஜை ஸ்பெய்னில் கைது
30 Jan,2011
புலிகளுக்கு போலிக் கடவுச்சீட்டு: பாக் பிரஜை ஸ்பெய்னில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு போலிக் கடவுச் சீட்டுக்களை விநியோகித்து வந்தார் என்கிற குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை ஸ்பெய்ன் நாட்டு பொலிஸார் கைது செய்து உள்ளார்கள்.
கைதானவரின் பெயர் Malik Sarwar. 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பாக். தீவிரவாத அமைப்புகளுக்கும் போலிக் கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்து இருக்கின்றார் என்றும் கடந்த டிசம்பர் மாதம் ஸ்பெய்னின் கம்பாய் நகரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பாய் குண்டுவெடிப்பை அடுத்து இவர் தலைமறைவாகி இருந்தார். ஸ்பெய்ன் நாட்டு நீதிமன்றம் ஒன்று இவரை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பித்து இருந்தது.Share 0