கள்ளக் காதல் ஜோடிக்கு தலிபான்கள் கல்லால் எறிந்து தண்டனை
27 Jan,2011
கள்ளக் காதல் ஜோடிக்கு தலிபான்கள் கல்லால் எறிந்து தண்டனை
ஆப்கானில் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முரணாக கள்ளத்தொடர்பைப் பேணிய ஜோடியினை தலிபான் கிளர்ச்சியாளர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்யும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவத்தின் காணொளியே தற்போது வெளியாகியுள்ளது.
நூற்றிற்கும் மேற்பட்ட கிராமத்தவர்கள் சூழ்ந்து நிற்க இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் தீர்ப்பை வழங்கிய பின்னரே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலில் 25 வயதான பெண் கற்களால் தாக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழக்காத காரணத்தினால் தலிபான் ஒருவர் அவரின் தலையில் சுட்டுக் கொன்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அழைத்து வரப்பட்ட ஆணும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட இப்பிரதேசத்தில் தலிபான்களின் ஆட்சி ஓங்கியுள்ள போதிலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தலிபான் பேச்சாளர் சபியுல்லா முஜாஹிட், இது இஸ்லாமிய சட்டதிட்டமெனவும் குர்ஆனில் கல்லெறிதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.