
போட்டோ வாகனங்களை பக்கத்தில் நிறுத்துங்கள்
வேகமாக ஓடும் வாகனங்களை புகைப்படம் எடுத்து தண்டம் விதிக்கும் வேகத்தடை தண்ட வாகனங்களை கார்களை ஓடுவோர் விரும்பமாட்டார்கள் என்பது தெரிந்ததே.
ஆனால் சில பகுதிகளில் வாழும் மக்கள் அந்த வாகனங்களை பெரிதும் வரவேற்று தமது பகுதிகளில் நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதாக போக்குவரத்து பிரிவு தெரிவிக்கிறது.
சிறு வீதிகளில் பிள்ளைகள், செல்லப்பிராணிகள் உலாவரும் இடங்களில் பொறுப்பற்று வேகமாக வாகனங்களை ஓடுவோர் குறித்து மக்கள் அச்சமும், கோபமும் அடைந்துள்ளார்கள்.
இத்தகையவர்களை தண்டம் போட்டு தட்டி நிமிர்த்த வேண்டுமானால் இப்பகுதியில் போட்டோ வாகனங்களை நிறுத்த வேண்டும், அப்போதுதான் இவர்கள் நிதானமாக நடப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.
தென்கு சுன யூலன்ட் பகுதிகளில் இருந்து இந்த அழைப்புக்கள் அதிகம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
———————————————————
செய்தி 02
இணையத்தில் ஹேக்கர் தாக்குதல்களை நடத்துவேரால் வரும் இழப்புக்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக காப்புறுதி செய்யும் தொழில் நிறுவனங்களின் தொகை என்றுமில்லாதளவுக்கு பெருகிவிட்டதாக ரொப் டென்மார்க் காப்புறுதி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தத் தொகை மூன்றில் இரண்டு மடங்கு உயர்வு கண்டுள்ள காரணத்தினால் ருக்- கோடன் காப்புறுதி நிறுவனங்களும் இந்த விடயத்தில் காப்புறுதி ஏற்பாடுகளை செய்ய விரும்புவதாக பலத்த ஆவலை வெளிப்படுத்தியுள்ளன.
ஆனால் காப்புறுதி செய்தவர்களுக்கு வழங்கப்படும் நஷ்ட ஈட்டின் தொகை எந்தளவு அமையும் என்ற கேள்வி பலத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, உதாரணமாக கோக்கோ கோலா தயாரிக்கும் இரகசியத்தை சீன ஹேக்கர்கள் களவாடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு என்ன நஷ்ஈடுஸ? அது வர்ணிக்க முடியாத தொகையாக அமையும், காப்புறுதி நிறுவனங்களால் தாங்க முடியாத தொகையாகவும் இருக்கும்.
ஆகவேதான் இணையத் தாக்குதல்களால் இயந்திரங்கள் கணினிகள் பழுதடைந்தால் அவற்றை மட்டும் புதிதாக வாங்கிக் கொடுக்கலாம் என்றளவில் இந்த இழப்பீடுகள் வரையறை செய்யப்பட வேண்டுமென கொம்பியூற்றர் வேள்ட் கூறுகிறது.
———————————————————
செய்தி 03
கெல்சிங்குய மோட்டார்வையில் 48 வயதுடைய பெண்மணி ஒருவர் நேற்றிரவு இடம் பெற்ற சாலை விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
காரை ஓட்டி வந்த சாரதி தனது ஸ்டியரிங் கட்டுப்பாட்டை தவறவிட்ட காரணத்தினால் காரில் பயணித்த இப்பெண்மணி உயிரை இழக்க நேர்ந்துள்ளது, இந்த விபத்தில் காரில் வந்த மேலும் மூவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தனியாவர்த்தன விபத்தில் சிக்கிய கார் பல சுற்றுக்கள் சுழன்று உருண்டு போயுள்ளது, சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது, மரணித்த பெண்மணி கார் சுழன்றபோது தூக்கி வெளியில் வீசப்பட்டிருந்தார்.
டென்மார்க்கின் ரயில் பயணிகளுக்கு சிறந்த முறையில் இணையத்தை பாவிப்பதற்கும் தடையற்ற முறையில் கைத்தொலைபேசியை பாவிப்பதற்கும் ஏற்ற வழிமுறைகள் செய்யப்படவுள்ளன.
ரயில் வண்டிகளில் வேலைக்கு செல்வோர் தமது மடி கணினிகளின் வழியாக தமது வேலைகளை செய்தபடியே பயணிக்கும்படியான சீரான இணையச் சேவையை வழங்கவுள்ளார்கள்.
இதுபோல ரயில் வண்டிக்குள் கைத்தொலைபேசிகளை பாவிப்பதும் இனி சிறப்பாக இருக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்காக ரயில்வே பிரிவினர் 100 மில்லியன் குறோணர்களை ஒதுக்கவுள்ளனர்.
இது இவ்விதமிருக்க டென்மார்க்கில் உள்ள அரசதுறை ஊழியர்கள் 184.000 பேருக்கும் வரும் மூன்று ஆண்டுகளில் 4.44 வீதமான சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
பொருட்களின் விலை 3.80 வீதம் உயர்வு கண்டுள்ளதால் இந்த உயர்வு வழங்கப்படவுள்ளது, இது தொடர்பாக அரசு முடிவுக்கு வந்தாலும், தொழிற்சங்கங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
அதற்கிடையில் டென்மார்க் மந்திரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியப் பணத்தை குறைத்து, ஓய்வூதியம் பெறும் காலத்தை சாதாரண ஊழியர்களின் வயதை ஒத்த காலத்திற்கு உயர்த்த வேண்டும் என்று டேனிஸ் மக்கள் கட்சி, லிபரல் அலையன்ச, என்கில்லிஸ்ற் கட்சிகள் கேட்டுள்ளன.
தற்போது ஒரு வருடம் மந்திரியாக இருந்து பதவி விலகினாலே மந்திரிக்குரிய ஓய்வூதியம் கிடைக்கும் இதை இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்த வேண்டும், அதுபோல ஓய்வூதிய பணத்தையும் குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இந்த மூன்று கட்சிகளும் மந்திரிப்பதவி வகிக்காத கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது, அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும் உயர்வாக இருக்கிறது அதையும் குறைக்க இவர்கள் நடவடிக்கை எடுத்தால் இவர்களுடைய எண்ணத்தில் சுயநலமின்மை தெரியும் என்பது கவனிக்கத்தக்கது.
இது இவ்விதமிருக்க தலைநகரில் உள்ள மெற்றோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு பின்னணி கொண்ட கட்டிடத் தொழிலாளருக்கு பணி வழங்கிய கட்டிடக் கொந்தராத்து நிறுவனம் சம்பள மோசடி செய்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 ஊழியர்களுக்கு அடிமாட்டுச் சம்பளம் கொடுத்து ஏமாற்றியுள்ளனர், இது டேனிஸ் சம்பள ஒழுங்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியப் பின்னணி கொண்ட சீபா என்ற கட்டிட நிறுவனம் 48 மில்லியன் குறோணர் சம்பள மோசடி செய்துள்ளதால் ஊழியர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
கட்டுவேலை செய்து பிழைக்க வந்த 38 வெளிநாட்டு ஊழியர்களிடம் மாதம் 20.000 குறோணர் வீதம் ஏப்பம் விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலை வழங்கும் தலைமைக் கொந்தராத்து நிறுவனமே இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டுமென தெரிவிக்கப்படுகிறது
.
தலைநகரில் துப்பாக்கிச் சூடு இருவருக்குக் காயம்
டென்மார்க் தலைநகர் கோப்பன்கேகன் பகுதியில் உள்ள ரைன்ஸ்வை பகுதியில் உள்ள கியூ 8 எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அண்டி சனி இரவு இரண்டு பேருக்கு துப்பாக்கிச் சூடு விழுந்துள்ளது.
நீல நிறமான ஸ்கோடா காரில் வந்தவர்கள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு மறைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கால்களில் துப்பாக்கிச் சூடு விழுந்த காரணத்தினால் உயிராபத்தின்றி தப்பியுள்ளனர், ஆனால் இதில் 23 வயது நபர் ஒருவரை கொல்வதற்கு நான்கு முதல் ஐந்து தடவைகள் முயற்சிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கூறுகிறது.
இதன் காரணமாக சம்மந்தப்பட்ட இருவருக்கும் வைத்தியசாலையில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது, அப்பகுதியில் உள்ள வெளிநாட்டு பின்னணி கொண்ட வன்முறைக் குழுக்களிடையே வெடித்துள்ள மோதலினால் இந்த துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணைகள் தொடர்கின்றன.
இது இவ்விதமிருக்க வாட நகரத்தில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன 76 வயதுடைய பெண்மணி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது.
மறுபுறம் :
ஸ்லேகல்ச பகுதியில் யெம்மஜெல்ப் ஊழியர்கள் முதியோர்களின் இல்லங்களுக்கு ஓடிச் சென்று உதவி புரியும் இரண்டு கார்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன.
தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது தீயிடப்பட்டுள்ளன, இத்தகைய கார்கள் தீயிடப்படுவது இதுதான் முதற்தடவையல்ல 2013ம் ஆண்டிலும் ஒரு தடவை நடந்துள்ளது.
ts.s.durai