மாற்றம்- அறிவு கதைகள்

03 Feb,2015
 

ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.


அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து, `ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ` என்றார்.


வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள். அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே?

இனி இந்த கதையில் நீதியை மட்டும் பார்ப்போம். நம் நாட்டில் மக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது, அவர்கள் தரமானவர்களாக இருந்தால்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் தரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் உண்மை. எனவே மக்களிடமும் தரம் வேண்டும்தான். ஆனால் அதைவிட வேகமான மாற்றத்தை தலைவர்கள்தான் தரமுடியும்.

எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால் அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு குப்பனோ, ராமனோ சிகெரெட் பிடிப்பதை, அல்லது அவர்கள் தரும காரியங்கள் செய்வதை பார்த்து மற்றவர்கள் பின் தொடரும் வாய்ப்பு குறைவு. ஆனால் அதே செயலை ஒரு தலைவரோ அல்லது நடிகரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே மாற்றம் இருபக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
நன்றியுள்ள காக்கை


மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா

 முற்றத்தில் சோறு ஊட்டுவதை மரத்தில் நின்று பார்த்த ஏராளமான காகங்கள் கூடிவிட்டன.காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் மேகலா. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை.

அப்போது அடுப்பில் விசில்... சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் மேகலா.

அர்ச்சனாவின்  தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி தான்.

அம்மா உள்ளே போனதும், அர்ச்சனா கண்ணால் சிரித்தபடி தளிர்நடை நடந்தபடி, சோற்றை அள்ளி காக்காவை நோக்கி நீட்டினாள். காகங்கள் அவளை நெருங்கி வர, “காக்கா இந்த... காக்கா இந்தா...” என்று சோறு போட்டாள். 

உள்ளே சென்ற மேகலா  திரும்பி வர, அர்ச்சனாவை திட்டி விட்டு,

“அரிசி விக்கிற விலைக்கு இதுகளுக்கு வேற  சோறு போடணுமாக்கும். உன் சாப்பாட்டை காக்காவுக்கு தியானம் பண்றியா?” காக்கைகளை விரட்டினாள்

 அர்ச்சனாவுக்கு நாய், பூனை, காக்கா, எறும்பு எல்லோருமே நண்பர்கள்தான். கையில் என்ன பண்டம் வைத்திருந்தாலும் போட்டு விடுவாள். அவளுக்கு என்ன தெரியும்...!?


அதட்டிக் கொண்டே சோறூட்டிய மேகலா , விளையாட்டுச் சாமான்களை அர்சனாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்க வீட்டுற்குள் சென்றுவிட்டாள்.

அர்ச்சனா முற்றத்தில் விளையாட்டு சாமான்களை பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென அர்ச்சனாவின் கூச்சலும், காக்காக்கள் கத்தும் சத்தமும் கேட்டு வெளியே ஓடி வந்தாள் மேகலா.

அங்கே குரங்கு ஒன்றை காக்கை கூட்டம் விரட்டி விரட்டி கொத்திக் கொண்டு இருந்தது.

“அம்மா என் டப்பா...” என்று அழுத அர்ச்சனா, அம்மாவை கட்டிக் கொண்டாள்.

ஒரு நொடியில் நடந்ததை புரிந்து கொண்டாள் மேகலா.

தன் மகள் விளையாடிய பாத்திரத்தில் ‘சாப்பிட ஏதேனும் இருக்குமோ?’ என எண்ணி குரங்கு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. இதைப் பார்த்த காகங்கள் குரங்கினை விரட்டி கொத்துகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள்.

மகள் மற்ற ஜீவன்களுடன் நட்பாக இருந்தது, அவளுக்கு ஒரு இடையூறு நேர்ந்தபோது உதவியாக அமைந்ததை எண்ணி ஆச்சிரியப்பட்டாள் மேகலா.

அன்று முதல் மகளுக்கு சோறூட்ட வரும்  மேகலா  முதலில் காகங்களை ‘க்கா...க்கா...’ எனக் கூப்பிட்டு சாதம் வைத்த பின்னரே மகளுக்கு உணவூட்டினாள்!

நாய் மட்டுமல்ல நாம் பாசம் காட்டும் எல்லா உயிரினங்களும் நன்றியுள்ளவையே.

 "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
 தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.  "

  என்கின்ற குறள்  ஞாபகம் வருகிறது

குறள் விளக்கம்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.


ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.

 'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள்  சிலை ஒன்றை உருவாக்கினார்.


அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.

முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.


அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'ஸ என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.

கடைக்காரர் வியந்தார்.

ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை  பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.
தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து  காண்பிக்கலாம்


ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன்  குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அதில் சோமு, சிண்டு  என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது

 ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம் என்றான், என்கிட்டேயே சவால் விடறியா  இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து "ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்." அவன் குரலை நீ கேட்டிருகிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும்  குளத்துக்குள் வேகமாகச் சென்றன.

அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்ற போது  "பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது

 கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு ? அதான்...


ஓ....! காகமா, அதால நமக்கு எந்த ஆபத்தும் இல்லே. உருவத்தை மட்டுமே வெச்சு ஒருத்தரைப் பற்றி தப்பா நினைக்கக் கூடாது என்று  அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் " இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம்." என கூறி சென்றது

 அடுத்த நாள் வந்தது;  குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது; அதை பார்த்த மீன் குஞ்சுகள், " ஏய் அங்கே பாரு வெள்ளையா... " அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா கச்சிதமா இருக்கு.

அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள்; அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?

கொக்குக்கு ஒரே கொண்டாட்டம் ;  ஓ! தொட்டுப் பாரேன்.

ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டினியா? என்றது.  மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன.


அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.

மற்ற மீன் குஞ்சுகள் ; அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்!  ஆமாம்! என்று உறுதியடுத்து கொண்டன.

அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோசமாக வாழ்ந்தன.ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்த்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்

 

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். 


அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,


அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொன்னார், வீரர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர்.அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள்.யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.

 

 


குழந்தைகள் என்றும் குழந்தைகளே! |


ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.

குழந்தைகள் என்றும் குழந்தைகளே!

 


உச்சியை தொட செவிடாய் இரு |


சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.


போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்


 கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.

மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன

“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
                          
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.

எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது

 சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது

 அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்

 அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.

“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
 உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.


சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies