டென்மார்க்கில் உள்ள ஊழியர் ஒருவர் 65 வயதில் வேலை இழந்தால் அவருக்கு 67 வயதில் ஓய்வூதியம் பெறும்வரை டவ்பெங்க என்னும் கொடுப்பனவை வழங்குவது நஷ்டமான காரியம், ஆகவே 65 பிளசில் ஒருவர் வேலை இழந்தால் நேரடியாக ஓய்வூதியத்திற்கு அனுப்புவதே இலாபகரமானது என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
ஆனால் டவ்பெங்க பெறும் உரிமை வயோதிபம் காரணமாக பறிக்கப்படும் அவலம் இதில் இருக்கிறது, இது வயோதிபத்தின் மீது நாம் காட்டும் துவேஷமாக அமைந்துள்ளது என்று றடிகல வென்ஸ்ர தெரிவித்துள்ளது.
டவ்பெங்கவைவிட ஓய்வூதிய பணம் மிகமிக குறைவாக இருப்பதால் மட்டுமே இந்த முடிவுக்கு வருவது தவறு, அதற்கான வலுவான வேறு காரணங்கள் இன்மையால் இந்த விவகாரத்தை அக்கட்சி எதிர்க்கிறது.
ஆனால் றடிகல வென்ஸ்ர என்பது சிறிய கட்சி அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்பது அவதானிக்கத்தக்கது, டவ்பெங்கவை நான்கு வருடங்களில் இருந்து இரண்டு வருடங்களாகக் குறைக்க பிரதான காரணமாக இருந்த கட்சிகளில் இதுவும் ஒன்று என்பதால் இவர்களுக்கு இந்த விடயத்தில் நேர்மையான தகுதி இருப்பதாக கருத முடியாது.
போர்க்குற்ற விசாரணை கோரும் டெனிஸ் தமிழ் அமைப்புக்கள் ஒன்றியம்
ஆட்சி மாற்றத்தின் பிரயோசனம் சர்வதேச விசாரணை மூலமே சாத்தியமாகும் – டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தின்அடிப்படையிலும் சிங்கள ஜனாதிபதித்தேர்தலின் மூலம் மேற்குலகிற்கு விரும்பியவொரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதாலும் இவ்விடயங்களை தமிழ்மக்கள் எப்படிக் கருதுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்வதற்காக கடந்த வியாழக்கிழமை டென்மார்க் பாராளுமன்றத்தில் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பின் போது ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களிற்கேற்பட்டுள்ள சவால்கள் பற்றியும், சர்வதேச சமூகம் கவனித்துக்கொள்ளவேண்டிய விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டதுடன் ஜ.நா மனிதவுரிமை ஆணையகம் சிங்களதேசத்திற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தினூடாக நடாத்தவுள்ள போர்க்குற்ற விசாரணையை நடாத்திமுடிப்பதற்கான அழுத்தத்தினை தொடர்ந்து கொடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ் மக்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட அல்லது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகளிற்கு தீர்வு வந்துவிடாதெனவும் அதற்கு நல்லுதாரணமாக சிங்கள தேசத்தின் புதிய ஜனாதிபதி சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாதென்று அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இலங்கையில் பேச்சுச்சுதந்திரத்தினைத் தடைசெய்யும் சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு முழுமையான பேச்சுச்சுதந்திரம் உறுதிப்படுத்தவேண்டுமென்றும் தாயகத்தின் பல பாகங்களிலும் நிறுவப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டு நாட்டில் அகதிகளாக வாழும் தமிழ் மக்களை சொந்த இடங்களில் வாழ அனுமதிக்க வழிகோரவேண்டுமென்பதும் கலந்துரையாடப்பட்டது.
சிங்கள சிறைகளில் வாடும் தமிழ் மக்கள் விடுதலைசெய்யப்பட்டு அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டுமென்றும், ஜ.நா. நிறுவனங்கள் தமிழர் பிரதேசங்களில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டுமென்பதும் எடுத்துக்கூறப்பட்டது.
இச்சந்திப்புக்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இத்தாலியில் டேனிஸ் பெண்மணி பாலியல் பலாத்காரம்
21 வயதுடைய டேனிஸ் பெண்மணி ஒருவர் இத்தாலியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் வடமேற்கு பகுதியில் உள்ள ரெரினோ நகரில் உள்ள பாரவண்டிகள் தரிப்பிடத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
பெண்மணியை இலவசமாக லிப்ட் கொடுப்பதாக ஏமாற்றி ஆசைவார்த்தை காட்டி பலாத்காரம் செய்தவர் ருமேனிய நாட்டு பாரவண்டி சாரதி என்று கூறப்படுகிறது.
இவரிடமிருந்து தப்பி ஓடிய பெண்மணி அருகில் உள்ள அயோஸ்ரா நகர போலீசாரிடம் முறையிட்டுள்ளார், அதைத் தொடர்ந்து சாரதி மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
மறுபுறம் ஓர் ஈரானியரையும், இரண்டு ஈராக்கியரையும் கடத்திவந்த இரண்டு பிரிட்டன் பிரஜைகள் டென்மார்க் போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர், இருவர் மீதும் ஆட்கடத்தல் குற்றம் பதிவாகியுள்ளது.
சுமார் 30, 33 வயதுடைய இருவரையும் வரும் 23ம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கும்படி நீதிபதி பணித்துள்ளார்.
இவர்கள் வந்த அவுடி வாகனத்தின் பின்புறமாக இருந்த மூவரும் போதிய பணய பத்திரங்கள் எதுவுமே இல்லாது பயணித்துள்ளதால் இவர்கள் ஆட்களை கடத்திய குற்றத்தில் மடக்கப்பட்டுள்ளார்கள்.
டென்மார்க்கிற்குள் பல்லாயிரக்கணக்கில் அகதிகள் கடத்தி வரப்படுவதால் இவர்கள் ஆட்களை கடத்துவது இதுதான் முதற்தடவையாக இல்லை இதற்கு முன்னரும் இவர்கள் கடத்தியுள்ளார்களா என்பது முக்கிய கேள்வியாகும்.
குறுஞ் செய்திகள் பலதும் பத்தும்ஸ
டென்மார்க்கில் உள்ள றணாஸ் – லைலை நகரங்களுக்கிடையே உள்ள விரைவுச்சாலையில் வண்டிகள் நிறைந்து கிடக்கின்றன.
வாகன நெரிசல் காரணமாக அட்டை போல ஊர்ந்து போக நேரிடுவதால் இதை விரைவுச்சாலை என்று சொல்வது கடினமாகி வருகிறது.
இதன் காரணமாக இந்த வழியின் இரண்டு பக்கங்களிலும் மேலதிகமாக ஒவ்வொரு தடங்களைப் போட்டு ஆறு தடங்கள் கொண்ட வழியாக மாற்றியமைக்க வேண்டுமென டென்மார்க் தொழிற்சாலைப் பிரிவினர் கேட்டுள்ளனர்.
இது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளனர், அவர்கள் இணங்கியுள்ளனர், பணத்திற்கு எங்கே போவது..?
———————————————————————————–
செய்தி 02
டென்மார்க் வெளிநாட்டு அமைச்சர் வரும் வியாழன் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டமைச்சர்களை சந்திக்க புறப்பட இருக்கிறார்.
உக்கிரேனிய விவகாரம் தொடர்ந்து முறுகலடைந்து வருகிறது, ரஸ்ய ஆதரவு போராளிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்ட பின்னர் விவகாரம் பெரும் சூடேறியுள்ளது.
ரஸ்யா என்ற நாடு பிரச்சனைகளை தீர்க்கும் நாடல்ல அது பிரச்சனைகளை உருவாக்கும் நாடாக இருக்கிறது என்ற கோபம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு.
சிலவேளைகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக மேலும் தடைகள் வர வாய்ப்புள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
———————————————————————————–
செய்தி 03
வேலைத்தலங்களில் திருடுவது டென்மார்க்கில் பரவலாக அதிகரித்து வருவதாக யாகோவ் நடத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
மொத்த ஊழியர்களில் சுமார் 85 வீதமானவர்கள் கழிப்பேனா, பிளாஸ்டிக் ரேப், கடதாசி, போட்டோ பிரதி என்று பல வழிகளில் திருட்டை செய்கிறார்கள்.
ஆனால் இவர்களில் 51 வீதமானவர்கள் தாம் செய்வது திருட்டு என்று உணர மறந்திருப்பதுதான் வேடிக்கையாகும்.
———————————————————————————–
செய்தி 04
எரித்தியாநாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்படுவது டென்மார்க்கில் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 122 விண்ணப்பங்கள் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளன.
எரிற்றியா நாட்டில் பிரச்சனை இல்லை ஆகவே அங்கிருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டிய தேவை இல்லை என்று முன்னர் டென்மார்க்கில் வெளியான அறிக்கை தவறானது என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் இப்போது புதிய அணுகுமுறை வெளியாகியுள்ளது.
எரித்தியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது சுற்றில் உள்ள நாடென்பதால் அகதி அடைக்கலம் கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
———————————————————————————–
செய்தி 05
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊதின்ச நகரில் உள்ள பில்கா சூப்ப மாக்கற்றுக்குள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது தெரிந்ததே.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, பணியாளர் வெளியேற்றப்பட்டு, பாதை தடுக்கப்பட்டு தேடுதல் அமர்க்களப்படுத்தியது.
இந்தக் குண்டுப் புரளியை கிளப்பியவர் ஒரு 15 வயது சிறுவன் என்று போலீசார் கூறியுள்ளனர்.
———————————————————————————–
செய்தி 06
நோர்வேயின் மேற்குப் பகுதியில் உள்ள சுனமோர என்ற இடத்தில் மாணவி ஒருவரை 40 வயது ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியருக்கு ஐந்து வருடங்கள் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
———————————————————————————–
செய்தி 07
பாரிய விண்கல் ஒன்று புவிக்கு சுமார் 1.2 மில்லியன் கி.மீ தொலைவில் புவியை கடந்து சென்றுள்ளதாக நாஸா கூறுகிறது.
2004ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட இந்த விண் கல்லுக்கு பிஎல்.86 என்று பெயரிடப்பட்டுள்ளது, புவிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைத்தூரத்தைப் போல மேலும் மூன்று மடங்கு தொலைவில் செல்வதால் புவிக்கு ஆபத்தில்லை என்று முன்னரே நாஸா தெரிவித்திருந்தது.
———————————————————————————–
செய்தி 08
கிரேக்க நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் ஆர்ரிமியோஸ் டெமிஸ் வென்ரேரியஸ் றோசஸ் தனது 68 வது வயதில் கிரேக்கத் தலைநகர் எதென்சில் மரணமடைந்துள்ளார்.
கிரேக்கப் பெற்றோருக்கு எகிப்து நாட்டில் பிறந்த இவர் 1960, 70 களில் வெளியிட்ட பாடல்கள் சுமார் 60 மில்லியன் இசைத்தட்டுக்கள்வரை விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
இவருடைய மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
———————————————————————————–
செய்தி 09
இரண்டு ஈராக்கியரையும், ஒரு ஈரானியரையும் சட்ட முரணாக டென்மார்க்கிற்குள் கடத்தி வந்த குற்றத்தில் இரண்டு இங்கிலாந்துப் பிரஜைகளை டேனிஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரயாண அனுமதியற்று வந்த இவர்களை கடத்திய குற்றத்தில் சிக்கிய இங்கிலாந்து பிரஜைகள் வரும் மாசி 23 வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டுமென நீதிபதி அறிவித்துள்ளார்.
அவுடிக்கார் ஒன்றில் கடத்தி வந்துள்ளனர்.
———————————————————————————–
செய்தி 10
கடந்த ஞாயிறு பி.ப. 13.30 மணிக்கு இங்கிலாந்து ஹரோ நகரத்தில் உள்ள சப்பாரி சினிமாவில் உயிர்வரை இனித்தாய் காண்பிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்தை பல தடவைகள் தொடர்ந்து பார்த்த தமிழிதழ் ஆசிரியர் கஜி அவர்கள் இன்று பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தும் இன்னொரு கருத்தும் இடம் பெறுகிறது.
உயிர்வரை இனித்தாய் லண்டன் வாழ் கலை ரசிகர்களின் உயிர்வரை இனித்திருந்தது.
ஒரு படைப்பில் ரசிகளின் கருத்துக்களை கேட்டு அவர்களது ரசனைக்கு ஏற்ப அடுத்த படைப்புகள் தருவோம் என கூறும் படைப்பளிகள் மத்தியில், வெளியான படைப்பை ரசிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மீள் வடிவமைத்து செய்து வெற்றி கண்டிருக்கின்றனர் உயிர்வரை இனித்தாய் குழுவினர்.
விமர்சனங்களுக்கு அப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது என்பதே நிதர்சனம்.
உயிர்வரை இனித்தாய் நிச்சயமாக புலம்பெயர் படைப்பாளிகளுக்கு ஒரு உத்வேகத்தையும் ரசிகர்களுக்கு நம்மவர் படைப்புகள் மேல் ஒரு நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
மாற்றங்களை நோக்கிய எமது கலைப்பயணத்தில் மாற்றத்தை கொடுத்த உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்..
tks.s.durai