ஜேர்மனிக்கு நுழைய வீதிக்குக் கட்டணம்..
ஜேர்மனியின் ஓட்டோபான் எனப்படும் விரைவுச்சாலையில் பயணிப்போர் சுவிற்சலாந்து பாதைகளுக்கு பணம் கட்டுவதைப் போல இனி ஜேர்மனிய விரைவுச்சாலைகளுக்கும் கட்ட வேண்டும்.
இரண்டு தினங்களுக்கான வீதி பாஸ் பெற வேண்டுமானால் 10 யூரோ இரண்டு மாதங்களானால் 22 யூரோ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2016ம் ஆண்டில் இருந்து இது அமலுக்கு வரப்போகிறது.
————-
உலகத்தின் சிறந்த வர்த்தக நாடுகள் எவை என்ற கணிப்பில் 2008 – 2010ம் ஆண்டுகளுக்கு பின்னர் 2014ம் ஆண்டிலும் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.
இது குறித்து சர்வதேச வர்த்த பக்கமான போபோஸ் நடத்திய ஆய்வில் டென்மார்க் 11 விடயங்களில் முன்னணி வகித்து ஐந்து விடயங்களில் முதலிடம் பிடித்துள்ளது.
குறைவான ஊழல், போதிய சுதந்திரம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற ஐந்து விடயங்களில் டென்மார்க் முதலிடத்தில் இருப்பதால் அந்த நாட்டு பிரஜைகள் சர்வதேச அளவில் வெற்றிபெற வழி பிறந்துள்ளது.
————-
டென்மார்க்கில் உள்ள வேலைத்தலங்களில் பெண்கள் மட்டும் பாலியல் சிக்கல்களுக்குள் சிக்குப்படுவதாகக் கூற முடியாது ஆண்களும் அத்தகைய நெருக்கடிகளை பெண்கள் தரப்பில் இருந்து சந்திக்கிறார்கள் ஆனால் பலர் வெளியே சொல்வதில்லை என்றும் மெற்றோ எக்ஸ்பிரஸ் ஆய்வு கூறுகிறது.
அதேவேளை 3 எப் நடத்திய ஆய்வில் சுமார் ஐந்து வீதமான ஆண்கள் பெண்களின் பாலியல் சீண்டல்களை சந்திப்பதாகக் கூறுகிறது.
————-
சுவீடனில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் டென்மார்க்கின் பன்றி இறைச்சி விற்பனை வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது, அங்குள்ள பிரதான டேனிஸ் பன்றி இறைச்சி விற்கும் நிறுவனம் தனது விற்பனையை 70 முதல் 90 வீதம் குறைத்துள்ளது.
டேனிஸ் பன்றி இறைச்சியில் எம்.ஆர்.எஸ்.ஏ என்ற பக்டீரியா இருப்பதாகக் கருதப்படுகிறது, பன்றிகளுக்கு நோய்த்தடுப்புக்காக கொடுக்கப்படும் அன்ரிபயோரிக்கா மருந்துகள் மார்சா பக்டீரியாக்களை உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது.
————-
டென்மார்க் வரும் சிரிய அகதிகள் இங்கு நீண்ட காலம் தங்க வைக்கப்படுவர் என்று டேனிஸ் இணைவாக்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கருத்து வரவேற்கப்படக் கூடியது என்றாலும் அகதிகளின் குடும்பங்களை இணைக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படமாட்டாது என்று தடை போடுவது ஏன் என்று என்கில்ஸ் லிஸ்ற் கேட்டுள்ளது.
சிரியாவில் விரைவில் பிரச்சனை முடியும், அகதிகளாக வந்தோர் திரும்பி செல்ல நேரிடும் ஆகவே குடும்பங்களை அவசரப்பட்டு அழைப்பதில் அர்த்தமில்லை என்கிறது அரசு.
நீண்ட காலம் இருக்கலாம் என்று கூறிவிட்டு விரைவில் பிரச்சனை முடியும் என்ற எதிர்பார்ப்பு செய்தியையும் கூறுவது இரட்டைப் போக்கு என்கிறார் யொகானா ஸ்கிமிற்.
குடும்பங்களையும் வரவழைத்தால் டேனிஸ் பொருளாதாரம் தாங்காது என்ற உண்மையை யாரும் பேசவில்லை.
மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் கலைநிகழ்வு 2014
கலைநிகழ்வு 2014, டென்மார்க்
டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் அனைத்தும் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு 13-12-2014 அன்று மிகவும் சிறப்பாக டீடைடரனெ நகரில் நடைபெற்றது.
இக்கலைநிகழ்வில் இரண்டாம் லெப். மாலதி அவர்களுக்கும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இவ்வணக்க நிகழ்வில் 300 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது வீரவணக்கத்தைச் செலுத்தினார்கள்.
இக்கலைநிழ்வில் கவிதைகள், நாடகங்கள், பரதநாட்டியங்கள், எழுச்சி நடனங்கள், காட்சியும் கானமும், இசைப்பாடல்கள், எழுச்சிப்பாடல்கள், உரைகள், உரையாடல்கள் போன்ற பல நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிகழ்வுகள் அனைத்தையும் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் மிகமிக ஆர்வமாகவும் சிறப்பாகவும் வழங்கியிருந்தார்கள்.
2014 ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் வளர்தமிழ் 12 ஐ நிறைவுசெய்த மாணவர்களுக்கு மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் பரிசு வழங்கப்பட்டு, மதிப்பளிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வில் நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டதுடன், கலைநிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
டென்மார்க்கில் இருந்து நோர்வே போன இலங்கையர் கொலை செய்தார்
டென்மார்க்கில் இருந்து நோர்வே சென்ற இலங்கையைச் சேர்ந்த ஐம்பது வயது நபர் ஒருவர் மேற்கு நோர்வேயில் பெண்மணி ஒருவரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட நபர் டென்மார்க்கில் வாழும் காலத்தில் டென்மார்க் குடியுரிமை பெற்று நோர்வே சென்றிருந்தார் என்றும் அங்கு 35 வயதுடைய அயல் வீட்டு பெண்மணியை கத்தியால் குத்தி கொன்றார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் பொதுவான குசினியை பாவித்ததாகக் கூறப்படுகிறது, சம்பவம் நடைபெற்ற இடம் பல வீடுகளை உள்ளடக்கியுள்ளது, பேர்கனில் இருக்கிறது.
மேற்கண்ட நபர் கைது செய்யப்பட்டு நான்கு வாரங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எக்ஸ்ரா பிலதற் தெரிவிக்கிறது, நீண்ட காலம் டென்மார்க்கில் வாழ்ந்த இவர் இரண்டு வருடங்களின் முன்பு நோர்வே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட நபர் தொடர்பாக கடந்த செப்டெம்பர் மாதம் பெண்மணி போலீசில் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும் மேலதிக தகவலை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.
சிறு நீர் கழிக்க மறப்பதால் வியாதி
டென்மார்க்கில் உள்ள பணியாளர்கள் பலர் அவசர அவசரமான வேலைகளில் ஈடுபடுகின்ற காரணத்தினால் சிறு நீர் கழிக்க மறந்துவிடுகிறார்கள்.
இதன் காரணமாக சலக்குழாய் வழியில் இன்பெக்சன் ஏற்படுவது, ஒரு கட்டத்தில் சலப்பை பெருப்பது, அடி வயிற்றில் ஒருவித குத்து இயலாமை போன்றவற்றால் அவஸ்த்தைப் படுகிறார்கள்.
ஆகவே வேலைப் பரபரப்பில் சிறு நீர் கழிக்க மறந்தால் அதற்கான பரிசை ஒரு கட்டத்தில் அதிகமாகவே கொடுக்க நேரிடும் என்கிறார் ஒல்போ பல்கலைக்கழக மருத்துவத்துறை பேராசிரியர் தோமஸ் லாசன்.
—————–
டென்மார்க்கில் நத்தார் கால போக்குவரத்து பரபரப்புக்கள் இன்று ஆரம்பித்துவிட்டன, பொதுத்துறை போக்குவரத்துக்களில் சுமார் அரை மில்லியன் மக்கள் இன்று நாட்டை ஊடறுத்துக் கடப்பர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் திங்கள் நத்தாருக்காக பாடசாலைகள் மூடப்படுவதால் செவ்வாயும் இதுபோல போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
அதேவேளை கடைகளில் நத்தார் கால பொருட்களை வேண்டச் சென்றோரின் வாகனங்கள் நிறைந்திருப்பதால் கார்களின் தரிப்பிடங்களிலும் பலத்த நெருக்குவாரம் காணப்படுகிறது.
—————–
டென்மார்க்கில் உள்ள வெளிநாட்டுப் பின்னணி கொண்ட பிள்ளைகள் டேனிஸ்காரருடன் ஒப்பிட்டால் கல்வி கற்று சான்றிதழ் எடுப்பதில் பின்னடைந்து காணப்படுகிறார்கள்.
30 வயதுக்குட்பட்ட வெளிநாட்டு பிள்ளைகளில் அரைப்பங்கினரே தொழிற்கல்வியை முடித்த ஒரு சான்றிதழுடன் இருக்கிறார்கள், ஆனால் இவர்களுடன் ஒப்பிட்டால் டேனிஸ் பிள்ளைகளில் 70 வீதமானவர்கள் சான்றிதழுடன் இருக்கிறார்கள்.
—————–
பொதுவாக டென்மார்க்கிற்கு யாராவது வெளிநாட்டவர் வந்தால் அவர் முஸ்லீமேதான் என்று மக்கள் கருதக்கூடியவாறு டேனிஸ் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் ஒரு மாயையை வளர்த்து வைத்துள்ளன.
ஆனால் கோப்பன்கேகன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வொன்று சமீப காலமாக டென்மார்க் வந்த வெளிநாட்டவர்களில் முஸ்லீம்கள் 2.46.000 பேர் என்றும் கிறீத்தவர்கள் 251.000 என்றும் nதிரிவித்துள்ளது.
வெளிநாட்டவர் என்ற சொற்பதம் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரும் தொழிலாளரையும் உள்ளடக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
டென்மார்க் வந்தவர்களில் அதிகமானவர் கிறீத்தவர்களே என்ற செய்தியை கட்சிகள் திரும்பியும் பார்க்காது என்பது தெரிந்ததே.
—————–
டென்மார்க்கில் உள்ள கிம்நாசியம் என்னும் உயர்நிலை பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் தமது இறுதிப் பாPட்சைக்கான றிப்போட் எனப்படும் ஆய்வுக் கட்டுரையை எழுதுவதற்கு பணம் கட்டி தனியார் உதவியை பெறுவதாகக் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்தத் தொகை பூம் என்று உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன, பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களுக்கு நேரம் போதாமல் இருப்பதால் இந்த வழியை கடைப்பிடிப்பதாக மாணவர் சங்கம் கூறுகிறது.
—————–
டென்மார்க்கில் உள்ள வெளிநாட்டு பின்னணி கொண்ட சுமார் 5000 மாணவர்கள் தமது சொந்த நாடுகளுக்கு சென்று நத்தார் கொண்டாட்டங்களை கொண்டாடவில்லை என்று கணிப்புக்கள் கூறுகின்றன.
ஜேர்மனியை சேர்ந்த மாணவர் ஒருவர் கூறும்போது நத்தாருக்கு போவது தமக்கு பலத்த செலவை ஏற்படுத்துகிறது என்பதால் இங்கேயே கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக நத்தாருக்காக தாய்நாடு செல்ல இயலாதவர்களுக்கான விசேட நத்தார் கொண்டாட்ட ஏற்பாடுகள் பல்கலைக்கழகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
tks.s.durai