குழந்தைகளுக்கு சிறுகதைகள் 1...

27 Oct,2014
 

பாடுபட்டுத் தேடி...


அன்றைய பாட்டி கதை தொடங்கியது:
"துறையூர் என்ற ஊரில் வசித்த மனோகர் ஒரு பெரிய பணக்காரர். செல்வம் சேர்ப்பதுதான் அவர் குறிக்கோள். தர்ம காரியங்களைப் பெரிய அளவில் செய்து புகழ் வாங்க ஆசை மட்டும் இருந்தது. ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் வரும்போது செலவை நினைத்து ஒதுங்கி விடுவார். வங்கிகள் அதிகம் இல்லாத காலம். நகைகளையும் பணத்தையும் அதற்காக தயார் செய்யப்பட்ட இரும்புப் பெட்டிகளில் வைத்துப் பூட்டி, அவைகளைத் தனி அறைகளில் வைத்திருப்பார்கள்.

மனோகரிடம் இரண்டு பெட்டிகள் இருந்தன. ஒன்றில் ரூபாய்க் கட்டுகளையும் அடுத்ததில் நகைகளையும் வைத்திருந்தார். அந்தப் பூட்டிய அறைக்குள் யாரையும் விட மாட்டார். வாரம் இருமுறை அறையைத் தானே கழுவிச் சுத்தம் செய்து பெட்டிகளுக்குப் பூஜை செய்வார். படுக்கப் போகுமுன் திறந்து பார்த்து மகிழ்ச்சி அடைவார். உடனே, 'இது போதாது' என்ற நினைப்பு வந்து விடும். அந்த எண்ணம் அவருடைய மகிழ்ச்சியைக் கெடுத்து நிம்மதி இல்லாமல் ஆக்கி விடும்.

ஆண்டுகள் உருண்டோட மனோகர் முதுமை அடைந்தார். அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. இரத்தக் கொதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் சொல்ல, மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வர வேண்டியதாயிற்று. எதையும் அதிகமாகச் சிந்திக்காமல் மகிழ்ச்சியாக இருக்க அறிவுறுத்தப் பட்டது. ஆனால் பண விஷயத்தில் அப்படி அவரால் இருக்க முடியவில்லை. அவரை விட பணக்காரர்களாக இருப்பவர்களிடம் தன்னை ஒப்பிடுவார். அப்பொழுது தாழ்வு மனப்பான்மை வந்து விடும். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வார்.

கதாகாலட்சேபங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. தனக்காக மட்டும் வாழாமல் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வது பற்றிய மகத்துவத்தைக் கேட்க அவருக்கு நன்றாக இருக்கும். சமூக சேவை செய்து புகழ் பெற எண்ணம் வரும். ஆனால், வீடு திரும்புவதற்குள் பண ஆசை அவர் மனதை மாற்றிவிடும்.

தயாளன், மனோகரின் நெருங்கிய நண்பர். மனோகர் போல் செல்வந்தர் இல்லை. ஆனால் அவருடைய வருமானம் தேவைக்கு மேல் இருந்தது. செல்வம் சேர்க்கும் ஆசை இல்லாமல் நல்ல காரியங்களுக்குச் செலவழித்தார். அதிலும் படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்வதில் தனி ஆனந்தம் அடைவார். ஏழை மாணவர்களுக்குப் பள்ளிக் கட்டணம் முதல் படிக்கத் தேவையான அத்தனை பொருள்களையும் வாங்கித் தருவார். கோடை விடுமுறை நாட்களை இனிமையாகக் கழிக்கத் தனது சொந்த இடத்தில் விளையாட்டு அரங்கம் கட்டித் தந்திருந்தார். சொந்த வீடு ஒன்றை விற்று அந்தப் பணத்தில் இன்னொருவர் கொடுத்த இடத்தில் நீச்சல் குளம் கட்டினார். 'நல்ல மாணவர்கள் நாட்டுக்குத் தேவை. அதற்காகச் செலவு செய்வது தர்மம் இல்லை, கடமை' என்பது அவர் கொள்கை. புகழ் அவரைத் தேடி வந்தது.

செல்வந்தராக மனோகர் இருந்தாலும் யாரும் அவரைக் கண்டு கொள்வதில்லை. அதுவும் அவர் மனதை உறுத்தி அமைதியைக் கெடுத்தது. நண்பனை விட பெரிய சேவை செய்து புகழ் பெற வேண்டுமென்ற போட்டி மனப்பான்மை தலையெடுக்கும். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் வந்து விடும். முடிவில் தயாளனிடமே யோசனை கேட்டார்.

அந்த ஊர் சிவன் கோவிலுக்குக் குடமுழுக்குச் செய்ய ஊரில் வசூல் செய்தார்கள். பற்றாக்குறை ஏற்பட வேலைகள் தடைபட்டுக் கொண்டிருந்தன. துண்டு விழும் ரூபாய் ஒரு லட்சத்தைத் தந்து கடவுளின் ஆசியையும், புகழையும் பெறச் சொன்னார். வாழ்நாளில் மனமொத்து ஒரு ரூபாய் கூடத் தர்மத்துக்காக மனோகர் தந்ததில்லை. இவ்வளவு பெரிய தொகையை கேட்க அதிர்ச்சி உண்டானது. அதைக் காட்டிக் கொள்ளாமல் அடுத்த நாள் முடிவைச் சொல்வதாகச் சொல்லி நண்பனை அனுப்பி வைத்தார். மனம் அலை பாய்ந்தது. மதில் மேல் இருக்கும் பூனை போல், 'கொடுக்கலாமா வேண்டாமா' என்ற தடுமாற்றத்தால் தவித்தார்.

வழக்கம் போல் அன்று இரவும் பெட்டிகளைத் திறந்தார். எப்பொழுதும் இருக்கும் உற்சாகம் இல்லை. பெட்டிகளை மூடினார். பிறகு திறந்தார். பலமுறை இவ்வாறு செய்த பின் பெட்டியைத் திறந்து கீழே உட்கார்ந்தார். அதிலிருந்த பத்து ரூபாய்க் கட்டுகளை எடுத்து அருகில் வைக்க ஆரம்பித்தார். அவரைச் சுற்றிலும் பணக் கட்டுகள் நிரம்பி விட்டன. அவைகளை எண்ணிப் பார்க்க அரை லட்சம் கூடத் தேரவில்லை. அதற்குள் பெட்டியின் இரண்டு அறைகள் காலியாகி விட்டன. இன்னும் ஐம்பது கட்டுகளுக்கு மேல் எடுக்க வேண்டுமென்ற நினைப்பே அவர் முடிவை மாற்றி விட்டது. எடுத்த கட்டுகளை வேகமாக உள்ளே வைத்துப் பெட்டியைப் பூட்டிய போது ஏதோ தவறு செய்து விட்டது போல உணர்ந்தார்

அடுத்த நாள் மனோகர் நண்பனைக் கூப்பிடவில்லை. சாக்குப் போக்குச் சொல்லக் காரணங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருந்தார். அவருடைய மனம் இரண்டாகப் பிரிந்து வழக்குக்கு வாதாடும் இரு தரப்பு வக்கீல்கள் போல் ஆனது. கடைசியில் தருவதில்லை என்று வாதாடிய மனமே வெற்றி பெற்றது.

நண்பர் கூப்பிடாதது தயாளனுக்கு ஆச்சரியம் தரவில்லை. இது போல அவரிடம் பலமுறை அனுபவப் பட்டிருந்தார். அந்த ஊர் ஜமீன்தார் தயாள குணமுள்ளவர். குடமுழுக்குப் பற்றித் தயாளன் அவரிடம் பேசிய போது பணப்பிரச்சனையை எடுத்துச் சொன்னார். நல்ல காரியம் நடத்துவதில் தாமதம் கூடாது என்று சொல்லி பணத்தை உடனே கொடுத்திருந்தார் ஜம்புலிங்கம்.

இந்தச் சமயத்தில் மனோகருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. சாதாரணக் காய்ச்சல், விஷக் காய்ச்சலா ஆகி விட்டது. எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. அந்த நிலையிலும் மனைவியின் துணையோடு பெட்டிகளுக்குப் பூஜை செய்து வந்தார். அப்படி ஒருநாள் பூஜை செய்யும் போது காய்ச்சல் அதிகமாகி மூளையைப் பாதித்து விட்டது. பக்கவாதம் ஏற்பட்டு கால், கை விளங்காமல் போனதுடன், நாக்கும் உள்பக்கம் இழுத்துக் கொண்டது. கை,கால்களை அசைக்கவும், பேசவும் முடியாமல் போய்விட்டது. படுத்த படுக்கையாக இருக்கும் பரிதாப நிலை உண்டாகி அவதிப்பட்டார்.

கண் கெட்டவுடன் சூரிய நமஸ்காரம் என்பார்கள். முடியாத நிலை வந்த பொழுது செல்வத்தின் மேல் உள்ள ஆசை உண்மையாகவே போய்விட்டது. தர்மம் செய்ய வேண்டும் என்று துடித்தார். நகை, பணம் அனைத்தையும் தர நினைத்தார். ஆனால், இப்பொழுது அதைச் சொல்ல முடியாமல் கூடப் போய் விட்டது. அவர் நினைத்ததை சைகையால் கூட சொல்ல முடியாத நிலை. ஊரில் எல்லோரும் வந்து பார்த்துப் போனார்கள். தயாளன் வந்து பார்க்கும் பொழுது 'நகையையும், பணத்தையும் எடுத்துத் தர்ம காரியங்கள் செய்' என்று மனம் சொல்லும். ஆனால் பேச முடியாமல் நண்பனைப் பார்த்து அழுவார். கண்களில் கண்ணீர் தாரையாக வழியும். நண்பர் வேதனையால் அவதிப்படுகிறார் என்று நினைத்து ஆறுதல் சொல்வார் தயாளன். ஆரோக்கியமாக இருந்த பொழுது தர்ம காரியங்கள் செய்யத் தவறி விட்டார். அந்த வேதனை உடல் தரும் வேதனையை விட அதிகமாக இருந்தது. உடல் நலம் குன்றி இறந்தே போனார். நகையும் பணமும் பத்திரமாகப் பூட்டிய பெட்டிகளில் எதற்கும் உதவாமல் இருந்தன.

"பாட்டி! பணத்தைப் பூட்டி வைத்து நல்ல காரியங்கள் செய்யாமல் இருப்பவர்களைப் பற்றிய பாட்டை பாடட்டுமா?" கேட்டாள் புவனா

"பரவாயில்லையே! கதையைக் கேட்டுப் பாட்டும் வந்து விட்டதே! பாடுடா என் செல்லம்".

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்

அக்காவின் பாட்டைக் கேட்ட சந்தர் உற்சாகமாகப் பேசினான்,

"பாட்டி, நானும் இனி என்னால் முடிந்த உதவிகளை உடனுக்குடன் செய்யப் போறேன்."

பாட்டிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இருவரையும் அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பினால் கட்டுண்ட மூன்று ஜீவன்களும் சிறிது நேரத்தில் உறங்கிப் போனார்கள்.

1.ஏன் சிரிக்கிறாய் ?

2.அந்தக் குழந்தை

3.பேராசை பெரு நஷ்டம் 

4.ரொட்டித் துண்டு ! 

5.கோபக்கார முனிவர்

6.ரகசியத்தை சொல்லுங்க !

7.சின்னப் பையன் !

8.வல்லவனுக்கு வல்லவன்

9.மந்திரம்

10.உதவும் வாய்ப்பு

11.பிரார்த்தனையும் மனிதனும்!

12.பிறந்த நாள் பரிசு

13.அரசியின் கொட்டாவி

14.இராஜாங்க விருந்து

15.கோடாலிக் கஞ்சி

16.வெள்ளை யானையும் வேட்டைக்காரனும்

17.குயிலின் குரல் ரகசியம்

18.நான்தான் பெஸ்ட்

19.மூன்றாவது ஆள் !

20.என் வீடு !

21.மாம்பழம் வேணும்

22.ஏன் வந்தாய் ?

23.உண்மை விளம்பி

24.கஜனி முகமது

25.புத்தரும் மேய்ப்பனும் 

26.பணம் காய்க்கும் மரம்

27.அவரவர் விதி !

28.தேவதையும், மயிலும்

29.பண்ணையார்

30.தப்பு

31.ஆசையிலே ஆபத்து
 




 



 

 












 

 



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies