அமெரிக்கன் விமானமொன்றின் சுவர்களில் விரிசல் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.video
15 Oct,2014
நடுவானில் பறந்த அமெரிக்கன் எயார் லைன்ஸ் விமானமொன்றின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு அது மோசமாக குலுங்க ஆரம்பித்ததையடுத்து அந்த விமானம் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
சான்பிரான்சிஸ்கோவிலிருந்து டலஸை நோக்கிப்புறப்பட்ட போயிங் 757 விமானத்தில் திடீரென பாரிய சத்தம் ஏற்பட்டு அதுகுலுங்க ஆரம்பித்ததுடன் விமான உட்சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பீதியடைந்து கூச்சலிட்டுள்ளனர். எனினும் அந்த விமானம் அவசர கால நிலையின் கீழ் சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் பாதுகாப்பாக தலையிறக்கப்பட்டுள்ளது.
விரிசல் ஏற்பட்ட விமானத்தின் சுவர்கள் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியல்ல எனவும் அதனால் விமானத்தின் உட்புறத்திலான அமுக்கத்தில் மாறுபாடு எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தின் அமுக்கம் மாறுபடுவது விமானம் வெடித்துச்சிதறக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.