அந்த 7 நிமிடங்கள் – நடந்தது என்ன‍?ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை மீண்டும் தள்ளிப்போக பின்னணி காரணம் இதுதான்

01 Oct,2014
 

     

         ஜெயலலிதா Vs. நீதிபதி மைக்கேல் டி குன்ஹா – அந்த 7 நிமிடங்கள் – நடந்தது என்ன‍?


பெங்களூர் சிறப்பு நீதிபதி மைக் கேல் டி குன்ஹாவிடம் கடைசி முயற்சியாக  என்னு டைய 48 வயதில் வழக்குத்தொடர்ந்தனர். இன்று எனக்கு 66 வய தாகிறது. எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று  கோரிக் கை வைத்து ள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா. ஆனால் அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கக் கூட இல் லையாம் நீதிபதி குன்ஹா. 18 வருடமாக

நீடித்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை கிட்டத்தட்ட 7 நிமிடங்களில் முடித்துள்ளார் குன்ஹா. இந்த ஏழு நிமிடத்தில் ஜெய லலிதாவின் உருக்கமான கோரிக்கையும் இடம் பெற்றுள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

பல மணி தவிப்பில் மக்கள் ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பை அறிய செப்டம்பர் 27ம் தேதி காலை முதல் பல மணி நேரமாக மக் களும், மீடியாக்களும், அரசியல் கட்சியினரும் தவிப்புடன் காத்திரு ந்தனர். அந்த 7 நிமிடங்கள்..! ஆனால் கோர்ட்டுக்கு உள்ளே வெறும் 7 நிமிடங்களில் எல்லாம் முடிந்து போயிருக்கிறது. ஜெயலலிதா வின் தலையெழுத்தை அந்த 7 நிமிடத்திற்குள்ளாகவே மாஜிஸ்தி ரேட் குன்ஹா எழுதி முடித்துள்ளார்.

இத்தனை பேர்தான் உள்ளே தீர்ப்பின்போது மாஜிஸ்திரேட் குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர், 13 எதிர்த் தரப்பு வக்கீல்கள், 2 அரசுத் தரப்புவக்கீல்கள், திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் வக்கீல்கள் இருவர் மற்றும் கோர்ட் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.

கோர்ட் கூண்டில் ஜெயலலிதா குற்றம்சாட்டப்பட்டோர் நிற்க வைக் கப்படும் கூண்டில் ஜெயலலிதா இருந்துள்ளார். ஆனால் அவர் உட் கார்ந்தபடி தீர்ப்பைக் கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடதுபுறம் மற்ற மூவரும் அமர்ந்துள்ளனர்.

11.07க்கு தீர்ப்பு சரியாக 11.07 மணிக்கு தீர்ப்பை அறிவித்துள்ளார் மாஜிஸ்திரேட் குன்ஹா. பின்னர் 1 மணிக்கு தண்டனை தொடர்பான வாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.

ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி சொன்னதுமே அதிர்ச்சியில் உறைந்துள்ளார் ஜெயலலிதா. மற்ற மூவரின் நிலையும் அதேதான். இவர்களில் இளவரசி மட்டுமே அழுதுள்ளார். தீர்ப்பைச் சொன்னது ம், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் அருகில் உள்ள அறையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

ஏதாவது பேச விரும்புறீங்களாஸ! 1 மணிக்கு மீண்டும் கோர்ட் கூடிய போது ஜெயலலிதாவிடம், ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என் று மாஜிஸ்திரேட் குன்ஹா கேட்டுள்ளார்.

இதையடுத்து பேசிய ஜெயலலிதா, இது திமுகவினரால் போடப்பட்ட அரசியல் பழிவாங்கல் வழக்கு. இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடி யது.

எனது 48வது வயதில் இந்த வழக்கைப் போட்டனர். இப்போது எனக் கு 66 வயதாகிறது. எனது உடல் நிலை மோசமாக உள்ளது. எனக்கு கருணை காட்டுங்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஆனால் மாஜிஸ்திரேட் குன்ஹா இரக்கம் காட்டும் மன நிலையில் இல்லை. நான்கு பேருக்கும் தலா 4 வருட தண்டனையை அறிவித்து அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டு விட்டார்.

ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் தள்ளி வைக்கப்பட காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி அவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளார். மேலும், இம்மூவருக்கும் கூட்டு சதி பிரிவிலும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆயினும் அதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.மூன்றாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் ஜாமீன் பெற முடியாது என்பது விதிமுறை. எனவே ஜெயலலிதா சார்பில் ஜாமீன் கேட்டு நேற்று பெங்களூர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல மற்ற மூவர் தரப்பிலும் ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், தசரா விடுமுறையால் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதிகள் விடுப்பில் சென்றுள்ளதால், விடுமுறைக்கால நீதிபதி ரத்தினகலா நேற்று விசாரணை நடத்தினார். அப்போது அரசு தரப்பு வக்கீலாக யாரையும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கவில்லை என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.ஆனால் மீண்டும் அரசு வக்கீல் இல்லாமலே கூட வழக்கை விசாரிக்கலாம் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்று இன்று மீண்டும் நீதிபதி ரத்தினகலா இதை விசாரணைக்கு எடுத்தார். அப்போது அரசு தரப்பு வக்கீலாக ஆஜராகிய பவானிசிங், ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில், ரத்தினகலா விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார். இதற்கான காரணம், பவானிசிங்கின் எதிர்ப்பு மட்டுமல்ல. அதைவிட முக்கியமான காரணமும் ஒன்று உள்ளது. நாடே எதிர்பார்த்திருக்கும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்க விடுமுறை அமர்வு தயாராக இல்லை என்பதுதான் அந்த காரணம்.நாடே உற்று கவனிக்கும் ஒரு வழக்கில், தலையிட்டு, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதையோ, அல்லது தீர்ப்பை சஸ்பெண்ட் செய்வதையோ விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் விரும்பமாட்டார்கள் என்றே சட்ட வல்லுநர்கள் தெரிவித்துவந்தார்கள், அதற்காகவே ரத்தினகலாவும் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். ரெகுலர் பெஞ்ச் இதை விசாரிப்பதே உசிதமாக இருக்கும் என்று ரத்தினகலாவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.அடுத்தவாரம் திங்கள்கிழமை பக்ரித் விடுமுறை. செவ்வாய்க்கிழமை விடுமுறைக்காலம் முடிந்து ரெகுலர் ஹைகோர்ட் பெஞ்ச்சுகள் செயல்பட ஆரம்பிக்கும். அதன்பிறகு, ரெகுலர் பெஞ்சில் ஒன்று இந்த வழக்கை விசாரிக்கும். முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால்தான் விடுமுறைக்கால பெஞ்ச் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை என்பது முக்கியமானது. விடுமுறைக்கால பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க வாய்ப்பு குறைவு என்று செப்டம்பர் 29ம்தேதியே, ஒன்இந்தியா தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்த்த பவானி சிங்... ஜெ. மனு விசாரணை அக். 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சிறப்புஅரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை மேலும் விசாரிக்க மறுத்து, 2 நிமிடங்களுக்குள் ஒத்தி வைத்து விட்டார் கர்நாடக உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ரத்னகலா. வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மற்றும் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நேற்று இரவு அரசு சிறப்பு வழக்கறிஞராக அவசரம் அவசரமாக நியமிக்கப்பட்ட பவானி சிங் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு செய்தார்.அவரது மனுவையும், ஜெயலலிதா தரப்பு வாதத்தையும் கூட நீதிபதி கேட்கவில்லை. மாறாக, இரண்டே நிமிடத்தில் வழக்கை ரெகுலர் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டு விட்டு போய் விட்டார்.





Share this:

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies