இந்தியாவை அதிரவைத்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் .

21 Sep,2014
 

             


 .

அண்மைய நாட்களாக இந்திய ஊடகங்களில் மிகப் பரபரப்பான செய்தியாக மாறியிருப்பவர் அருண் செல்வராஜன் என்ற இலங்கை இளைஞர்.

 

சென்னையில் வைத்து என்ஐஏ எனப்படும் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தினால் கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் பற்றியும், இவரது தொடர்புகள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும், இவர் அளித்ததாகக் கூறப்படும் தகவல்கள் குறித்தும் நாளுக்குநாள் புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

28 வயதான அருண் செல்வராஜன் என்ற இந்த இளைஞரை இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருப்பதற்குக் காரணம், அவர் பாகிஸ்தானின் உளவாளியாகச் செயற்பட்டவர் என்பதே.

சென்னையில் உள்ள சாலிக் கிராமத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வைத்து கடந்த 10ம் திகதி இரவு கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜன் இந்தியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் பல தகவல்களை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான பாதுகாப்பு, சுற்றுலா கேந்திர நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை இவர் பாகிஸ்தானுக்கு வழங்கியிருப்பதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மூலமே இந்த தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டது, இந்தியப் புலனாய்வு அமைப்புகளை கடுமையாக அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது. ஏனென்றால், அவரால், மிகவும் இறுக்கமான பாதுகாப்பு கடைப்பிடிக்கப்படும் இடங்களுக்குள் கூட இலகுவாக நுழைய முடிந்துள்ளது. தகவல்களையும் படங்களையும் திரட்டி பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிந்துள்ளது.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான தூதரகத்தினால், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் இவர் மூன்றாமவர்.

முதலாவதாக 2012ம் ஆண்டு தமீம் அன்சாரி என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்காய வியாபாரி கைது செய்யப்பட்டார். அதையடுத்து சில மாதங்களுக்கு முன்னதாக கண்டியைச் சேர்ந்த ஸகீர் உசேன் என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டார்.

இப்போது அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருண் செல்வராஜன் ஒரு இலங்கையர் என்றும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் குறிப்பாக எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றியோ, அவரது குடும்பத்தினர் பற்றியோ, தெளிவான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

இதுவரை அவர் பற்றி வெளியான தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் குழப்பம் நிறைந்தவையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் இருந்து இவரது குடும்பத்தினர் சென்னைக்குச் சென்றதாகவும், 10ம் வகுப்பு வரை அங்கேயே கல்வி கற்றதாகவும் செய்திகள் வெளியாகின.

2008ல் மீண்டும் கொழும்புக்குத் திரும்பியதாகவும், லைபீரியாவில் ஹோட்டல் ஒன்று ஆரம்பித்து அதில் நஷ்டப்பட்டு கொழும்பு திரும்பிய போது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மூலம் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, இவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களிடம் பயிற்சி பெற்றதாகவும் கூட செய்திகள் வெளியிடப்பட்டன.

இவர் இலங்கையில் சிறிது காலமே தங்கியிருப்பதாகத் தெரிகிறது.

அந்தக் காலகட்டத்தில் தான் இவர் பாகிஸ்தான் உளவாளியாக மாற்றப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தூதரகத்தில் வீசா அதிகாரியாகப் பணியாற்றிய அமீர் சுபைர் சித்திக் என்பவரே இவரை உளவுப் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமீழ் அன்சாரி, ஸகீர் உசேன் ஆகியோரையும், பாகிஸ்தானுக்காக உளவாளியாகச் செயற்பட வைத்ததாக இவர் மீதே குற்றச்சாட்டு இருந்தது.

புதுடில்லியில் இருந்து கொழும்புக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து அமீர் சுபைர் சித்திக் கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்குத் திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் ஹாஜி எனப்படும் சிராஜ் அலி என்ற இன்னொரு பாகிஸ்தான அதிகாரியே அருண் செல்வராஜனை கையாண்டிருக்கிறார்.

அருண் செல்வராஜன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் உள்ள பாதுகாப்பு நிலைகள் பற்றி தகவல்கள் பாகிஸ்தானுக்குத் தொடர்ச்சியாக கடைத்து வந்திருக்கின்றன.

கடற்படைத் தளங்கள், விமானப்படைத்தளங்கள், இராணுவப் பயிற்சித் தளங்கள் என்பன குறித்து மட்டுமன்றி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கரையோரப் பகுதிகள், அணுமின் நிலையங்கள், முக்கிய ஆலயங்கள் என்று மிக விரிவான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தரையில் இருந்து மட்டுமன்றி, வானில் சிறிய விமானத்தில் இருந்து கூட முக்கியமான இடங்களை படம் எடுத்து அனுப்பியிருக்கிறார். அவ்வாறு விமானம் மூலம் படம் எடுப்பதற்கு இவருக்கு மாவட்ட நிர்வாகங்களே அனுமதி கொடுத்திருக்கின்றன.

பாகிஸ்தானிடம் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொண்டு ஐஸ் இவன்ட மனோஜ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி, தனது உளவு வலையமைப்பை பரவலாக்கியிருக்கிறார் அருண் செல்வராஜன்.

இந்த நிறுவனத்துக்கு ஹைதராபாத், பெங்களுர் நகரங்களிலும் கிளைகள் இருக்கின்றன. நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்துக் கொடுக்கும் இந்த நிறுவனத்தின் மூலம் முக்கிய பிரமுகர்களை வளைத்துப் போடவும், அதனைக் கொண்டு கேந்திர நிலைகளுக்குள் ஊடுருவவும் இவரால் முடிந்திருக்கிறது.

அருண் செல்வராஜன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் விமானம் ஓட்டும் பயிற்சியைப் பெற்றுள்ளதாகவும் கூட தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இவையெல்லாம் உண்மையானால், அருண் செல்வராஜன் மூலம் தமிழ்நாடு மற்றும் அயல் மாநிலங்கள் குறித்து மிகத் துல்லியமான தகவல்களை பாகிஸ்தான் பெற்றுவந்துள்ளது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

இதைவிட பாகிஸ்தான் எதிர்ப்பு, இலங்கை எதிர்ப்பு போராட்டங்கள் பற்றிய தகவல்கள் படங்களையும் கூட இவர், பாகிஸ்தான உளவுத்துறை அதிகாரிகளிடம் திரட்டிக் கொடுத்திருக்கிறார்.

தமது நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு நிறுவனத்தின் மூலம், மேல்மட்டப் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் போன்றோரின் தொடர்புகளை பெற்று, அவர்களுடன் அருண் நெருக்கமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஊடகவியலாளர் என்ற போர்வையில் கடலோரக் காவல்படையின் நிகழ்வுகளுக்குச் சென்று படம் எடுத்துள்ளதும், இராணுவ அதிகாரிகளின் விருந்துபசார நிகழ்வு ஒன்றுக்குச் சென்று படம் பிடித்துள்ளதும் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற ஏராளமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இவையனைத்தும் உண்மையா அல்லது ஊகங்களா என்பது விசாரணைகளின் முடிவில் தான் தெரியவரும்.

எவ்வாறாயினும், இவரை ஒரு தீவிரவாத தாக்குதலுக்காக பயன்படுத்த பாகிஸ்தான் எண்ணியிருக்கவில்லை என்றே தெரிகிறது.

சென்னையை நன்கறிந்தவராகவும், பேச்சு மொழி நடையால் சந்தேகம் எழாது என்பதாலும், தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கு பாகிஸ்தான் இவரை மிக நன்றாகவே பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

இந்தளவுக்கு எல்லா மட்டங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்தி தனியொருவரால் தகவல் திரட்ட முடியாது.

இதனால் தான் இவருடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை குடையத் தொடங்கியிருக்கிறது தேசிய புலனாய்வுப் பிரிவு. இதற்கிடையே இவரிடம் விசாரணை நடத்த ஐ.பி. எனப்படும் உள்ளகப் புலனாய்வுப் பிரிவும், சி.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவும் கூட முயற்சிக்கின்றன.

சி.பி.ஐ இவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்றும், ராஜீவ்காந்தி கொலை குறித்தும் விசாரிக்க முனைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ராஜீவ்காந்தி கொலை இடம்பெற்ற போது அருண் செல்வராஜனுக்கு ஐந்து வயது தான் ஆகியிருக்கும்.

எனவே அதுபற்றி விசாரிக்க சி.பி.ஐ முயற்சிக்கிறது என்றால், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என்றே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டிலும், ஏனைய தென்மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தி குழப்பம் ஏற்படுத்த பாகிஸ்தான் உளவுப்பிரிவு முயற்சிப்பதாக ஏற்கனவே பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

இத்தகைய பின்னணியில் அருண் செல்வராஜன் பிடிபட்டிருப்பது, தமிழ்நாட்டில் அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது.

இவர் தமிழ்நாட்டில் தாக்குதல்களை நடத்துவதற்கான ஒருவராக இனங்காணப்படாத போதிலும் அதற்குத் தேவையான தகவல்களை வழங்கக் கூடிய ஒருவராகவே இந்திய அதிகாரிகளால் கூறப்படுகிறார்.

அருண் செல்வராஜன் கைது என்பது தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பற்றிய சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை ஒன்று இருந்தது.

அண்மைக்காலமாக அந்தச் சூழல் மெல்ல மாறியிருந்த நிலையில் தான் அருண் செல்வராஜன் விவகாரம் மீண்டும் இலங்கைத் தமிழர்களை சந்தேகத்துடன் பார்க்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

அருண் செல்வராஜனுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் பாகிஸ்தான் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா கடுமையான அழுத்தங்களை கொடுக்க முனையும்.

ஏற்கனவே புதுடில்லி கொடுத்த அழுத்தங்களையடுத்தே கடந்த மே மாதம் அமீர் சுபைர் சித்திக் இஸ்லாமாபாத்திற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் ஒருபோதும், தாம் இந்தியாவில் உளவு பார்ப்பதற்கு இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தவில்லை என்றே பாகிஸ்தான் கூறி வந்திருக்கிறது.

அருண் செல்வராஜன் பிடிபட்டவுடன் கூட, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் இது பழைய செய்தி என்றும், இந்தியா அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொள்வதாகவும் எதுவும் தெரியாதது போல் பதிலளித்திருந்தார்.

அதற்குப் பின்னர், பாகிஸ்தானிடம் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. இந்தநிலையில், அருண் செல்வராஜன் விவகாரத்தில், கொழும்பு மீது மீண்டும் புதுடில்லி அழுத்தங்களைப் பிரயோகிக்க வாய்ப்புகள் உள்ளன.

அத்தகையதொரு நிலையில், அது கொழும்புக்கும் புதுடில்லிக்கும் இரடையிலான உறவுகளை பாதிக்குமா அல்லது கொழும்புக்கும் இஸ்லாமாகபாத்துக்கும் இடையிலான உறவுகளை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



Share this:

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies