நார்வேசிறைகளில் போதிய இட வசதிஇல்லை இதனால் நெதர்லாந்து நாட்டில் வாடகைக்கு சிறை
11 Sep,2014

நார்வே நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இவர்களை அடைப்பதற்குத்தான் அந்த நாட்டு சிறைகளில் போதிய இட வசதி இல்லை. இதனால் சிறைக்கு போகவேண்டிய வரிசையில் 1,300 கைதிகள் காத்துக்கிடக்கிறார்கள்.
நாட்டில்
இதனால் பக்கத்து நாடான நெதர்லாந்தின் சிறைச்சாலைகளை பயன்படுத்திக் கொள்ள நார்வே முடிவு செய்து இருக்கிறது. அங்குள்ள சிறைகளுக்கு நார்வே நாட்டின் கைதிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். கைதிகளை பராமரிப்பதற்கான வாடகை கட்டணத்தையும் நார்வே அளித்துவிடும்.