டென்மார்க் ஊதின்ச நகரில் இருந்து இத்தாலி ரோமாபுரி நகருக்கு டாச்சி மூலமாக வருவேன் என்று வேண்டுதல் வைத்த நபர் ஒருவர் 29.226 குறோணர் செலவிட்டு வாடகைக்காரில் சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
மொத்தம் 2005 கி.மீ தொலை தூரத்தை மூன்று தினங்கள் பயணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் நபர்.
——————————————————————
டென்மார்க்கில் டவ்பெங்க உரிமையை இழந்து அதிலிருந்து வெளியேறியுள்ளோர் தொகை இந்த ஆண்டின் முதல் ஆறு மாதகாலப் பகுதியில் 9900 ஆக உயர்வு கண்டுள்ளது.
இந்தத் தொகை வருட முடிவில் 17.000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னதாக வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் 8000 முதல் 14.000 ஆக இந்தத் தெகை இருக்கும் என்று கூறியிருந்தது, ஆனால் நிலமை இப்போது அதைவிட உயர்வு கண்டுள்ளது.
——————————————————————
இஸ்லாமிய பெண் பிள்ளைகள் தலையை மூடி பர்தா ஆடை அணிந்து கொண்டு பாடசாலைகள் வருவது தடுக்கப்பட வேண்டும் என்று டேனிஸ் மக்கள் கட்சித் தலைவி பியா கியாஸ்கோ ஒரு பொன்குஞ்சு கருத்தை முன் வைத்துள்ளார்.
இவருடைய கருத்து அமல் செய்யப்பட்டால் தமது பாடசாலையில் உள்ள மாணவிகள் தலையில் உள்ள துப்பட்டா துண்டை கழற்றாமல் பாடசாலையை கழற்றிவிட்டு தனியார் பாடசாலைகளுக்கு போய்விடுவார்கள் என்று தலைநகரில் உள்ள நோரபல்ட் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
—————————————————————–
ரண்டி ஆபிரகாம்சன் என்பவர் பற்சிகிச்சை பி.எச்.டிக்காக எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை பலரது கவனத்தையும் தொட்டுள்ளது.
வலிதரும் சிகிச்சைகளை சந்திக்க பல நோயாளர்கள் பயப்படுகிறார்கள், இவர்களுக்கு விறைப்பு ஊசி போட்டு, மயங்கவைத்து சிகிச்சையளித்து பயத்தைத் தவிர்ப்பதைவிட ஹிப்நாட்டிசம் மூலமாக மயங்கச் செய்து சிகிச்சை வழங்குவது நல்லதென எழுதியுள்ளார்.
இதனால் மருந்துகளால் உருவாகும் பக்க விளைவுகள் குறைவதோடு வீண் செலவுகளும் இல்லாது போகும் என்றுள்ளார்.
——————————————————————
டென்மார்க்கில் நல்ல வெயிலுடன் கூடிய கோடை காலத்தை அனுபவித்த மக்கள் இனி காலநிலை மாற்றத்தை சந்திக்க வேண்டிய பருவம் வந்துள்ளதாக காலநிலை அவதானிப்பு பிரிவான டி.எம்.ஐ தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை, மேற்குப்புற கச்சான் காற்று, திடீர் மழை போன்ற வானத்தின் நிலையற்ற நாடகக்காட்சிகள் அரங்கேற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
——————————————————————
பிரிட்டனில் வாழும் சர்ச்சைக்குரிய இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு டென்மார்க்கில் வருடந்தோறும் வழங்கப்படும் கோ.சி ஆனர்சன் பரிசான ஐந்து இலட்சம் குறோணர் கிடைத்துள்ளது.
சல்மான் ருஷ்டி இந்தப் பரிசை ஏற்றுள்ளதாக மெற்றோ எக்ஸ்பிரஸ் கூறுகிறது, இவருக்கு மட்டும் ஏன் தேடித் தேடி பரிசு வழங்குகிறார்கள் என்ற மர்மம் குறித்து தனியாக ஒரு நூல் போட வேண்டியிருக்கிறது.
இவருடைய சமுதாய ஒழுக்கமும், மாடல் அழகிகளுடனான தொடர்புகளும், பரிசுகளும் ஆய்வுக்குரியவையாக இருக்கின்றன.
tks.durai