சுவிசில் 6 பெண்களை அடைத்து கற்பழித்து வந்த முதியவரை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
சுவிசின் சூரிச் (Zurich) மாகாணத்தை சேர்ந்த பொறியாளர் (60) ஒருவர் தன் வீட்டின் கீழ் உள்ள பாதாள அறையில் 6 பெண்களை அடைத்து வைத்து, அவர்களை கற்பழித்துள்ளான்.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இந்நபரின் வீட்டின் அருகே மீட்பு பணிக்கு வந்திருந்த அவசர சேவைகள் அந்த பாதாள அறையை பார்த்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த படுக்கை, காணொளி கமெரா மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்டவை பார்த்து அவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் பொலிசுக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இங்கிருக்கும் ஆதரங்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம் என்றும் விரைவில் தப்பி ஓடிய அந்த முதியவரை நாங்கள் கண்டுபிடித்து கைது செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கான்ஸ்டன்ஸ் ஏரியில் கரை ஒதுங்கிய மர்ம சடலம்: தேடப்படும் கொலையாளியா?
சுவிஸை சேர்ந்த கொலைகாரன் ஒருவனின் சடலம் ஜேர்மனியில் உள்ள கான்ஸ்டன்ஸ் ஏரியில் கிடைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
சுவிஸை சேர்ந்த பொறியாளர், நிதியாளர் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டாளருமான ஜார்ஜென் ஹெர்மன் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி லிச்சென்ஸ்டீன் வங்கியின் முதலாளியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஜார்ஜென் தனது வலைதளத்தில் தன்னை, லிச்சென்ஸ்டீன் பகுதியின் ராபின் ஹுட் என்று குறிப்பிட்டுள்ளார்.
வங்கியின் முதலாளியை கார் பார்க்கிங்கில் சுட்டு கொன்ற பிறகு, அவர் தனது வலைதளத்தைல், உங்களால் முடிந்தால் என்னை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடியுங்கள், அப்படி பிடித்தால் உங்களுக்கு வெகுமதியாக 200,000,000 ப்ராங்குகள் தருவதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜேர்மனியில் ஒரு இறந்த உடல் கிடைத்துள்ளதாக சுவிஸ் தேசிய காவல்துறைக்கு கடந்த வியாழக்கிழமை மதியம் தகவல் கிடைத்துள்ளது.
அந்த சடலத்தின் உடலில் இருந்த உடை மற்றும் நகைகளை வைத்து பார்க்கையில் சுவிஸில் பல மாதங்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த கொலைகாரனாக சந்தேகப்படும் ஜார்ஜென் ஹெர்மனாக அது இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தற்போது சிதிலமான நிலையில் இருக்கும் சடலத்தை ஜேர்மனியைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் டி.என்.ஏ சோதனை மற்றும் பற்களை சோதனை செய்து அது யாரென கண்டுபிடிக்கவுள்ளனர்.
மேலும், அந்த சடலம் ஜார்ஜெனுடையதாக இருக்கலாம் என்றும், கொலை செய்த பின்னர் லிச்சென்ஸ்டீன் நகரில் இருந்து கான்ஸ்டன்ஸ் ஏரி நோக்கி ஓடும் ரைன் நதிக்கரையில் தனது உடைகளையும், கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் வைத்துவிட்டு ஜார்ஜென் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.