பக்கத்து வீட்டில் அழுகுரல் - பூல்சர் உண்டு 12 பேர் மரணம் தொழிற்சாலை மூடப்பட்டது

17 Aug,2014
 

பக்கத்து வீட்டில் அழுகுரல் கேட்டாலும் உதவப்பயம்டென்மார்க்கில் இடம் பெறும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களையும் மக்கள் தடுக்காமல் விலகி நின்று வேடிக்கை பார்க்கக் காரணமென்ன.. இது குறித்து மேக்கா போன் நடத்திய ஆய்வொன்று வெளியாகியுள்ளது.

வலிமை மிக்கவர்கள், வலிமை குன்றிய அப்பாவி மக்களை தாக்குவது தப்பான செயல் என்று தாம் உணர்ந்தாலும் அதற்குள் தலையிலாடமல் வாழ்கிறோம் என்று 71 வீதமான மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இவ்விதம் கொடுமைகளை விலகி நின்று பார்ப்பதற்கு அச்சமே முதலாவது காரணம் என்றும் கூறுகிறார்கள்.

அதேவேளை அப்பாவிகளுக்கு உதவப்போனால் இதுதான் தருணமெனக் கருதும் அவர்கள் உதவப்போனவனின் தலையில் பிரச்சனையை பொறித்துவிட்டு விலகி நிற்பதும், கடைசியில் நீதி கேட்டு போனவன் கத்திக்குத்து வேண்டி பரலோகம் போவதும் கடந்த காலங்களில் பரவலாக நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்விதமிருக்க டென்மார்க் புறொண்ட் புய் நகரசபை 15 வயது சிறுவன் ஒருவனுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இருவருடன் இணைந்து முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் மற்றவர்களை மிரட்டி இவர் கொள்ளைகளில் ஈடுபட்ட காரணத்தினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதின்ம வயது இளைஞருக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது என்று அவருடைய சட்டத்தரணி தெரிவித்தார்.

இன்னொரு செய்தியின்படி கொல்பெக் நகர விரைவுச்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி அருகில் வந்த பாரவண்டியுடனும் மோதின, இதனால் நபர் ஒருவர் மோசமான காயமடைந்துள்ளார்.

இதனால் றொள்பி காவன் நோக்கி செல்லும் விரைவுச்சாலையின் ஒரு பக்கம் மூடப்பட்டிருக்கிறது.

மறுபுறம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கெபு என்ற நகரத்தில் உள்ள கோட்டல் ஒன்றின் முன்னிலையில் டேனிஸ் கலைஞரான 65 வயதுடைய ஜென்ஸ் ஓவகாட் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த யூலை 17ம் திகதி நடந்த சம்பவம் இப்போதே ஊடகங்களில் வெளியாகியுள்ளது, இவருடைய 37 வயதுடைய பிலிப்பைன்ஸ் காதலியே கொலைக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பல டேனிஸ் வயோதிபர்கள் ஏழை நாடுகளுக்கு செல்வதும், இளம் பெண்களை மணமுடிப்பதும் இதுபோன்ற ஆபத்துக்களை சந்திப்பதும் கோடைகால கொலைகளாக இருக்கின்றன.


டென்மார்க்கில் மீன்  – காசு வரவு – தானிய பெருக்கம் மகிழ்வுடென்மார்க்கில் உள்ளவர்கள் லக்ஸ் மீன் பொரியலை இனி அரை விலைக்கு வாங்கக்கூடிய வாய்ப்பு வருமென்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் ரஸ்ய அதிபர் புற்றின் தடை விதித்த காரணத்தினால் நோர்வேயின் லக்ஸ் மீனும் அதற்குள் சிக்குப்பட்டுள்ளது.

கொள்ளை கொள்ளையாக அள்ளப்படும் நோஸ்க் லக்ஸ் மீனை ரஸ்யாவுக்கு அனுப்ப முடியாவிட்டால் அதை டென்மார்க் பக்கமாக தள்ளிவிடும் நோர்வே என்பது டேனிஸ்காரரின் கணக்கு.

இதனால் லக்ஸ் மீனின் விலை டென்மார்க்கில் அரைப்பங்காகக் குறையும் என்று டேனிஸ்காரர் மனப்பால் குடிக்கிறார்கள்.

ஏற்றுமதி படுத்தாலும் ஏதோ அரைவிலையில் பொரித்த மீன் கிடைக்கிறதென்றால் அதைவிட ஆனந்தம் ஏதம்மா..

புலி விழுந்தது நரிக்குத் தாயம் என்ற நம் நாட்டு பழமொழிதான் டேனிஸ்காரரின் பொரித்த மீனை எண்ணும்போது நினைவுக்கு வருகிறது.

இதற்கிடையில் டென்மார்க்கிற்குள் ஏற்றுமதி வரவால் கொட்டும் பணம் அமோகமாகக் கொட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த வகையில் நோவோஸீமாஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி வருமானம் முதல் ஆறு மாத காலத்தில் 9 – 11 வீதமாக அதிகரித்துள்ளது, இதனால் டென்மார்க் கல்லாப் பெட்டியில் 1.28 பில்லியன் குறோணர்களைக் கவிழ்த்துக் கொட்டியுள்ளது நிறுவனம்.

இதே நிறுவனம் சென்ற ஆண்டும் இதே காலப்பகுதியில் 1.07 பில்லியன் குறோணர்களை இலாபமாக உழைத்திருந்தது.

கடந்த 2008ம் ஆண்டு படுக்க ஆரம்பித்த டேனிஸ் ஏற்றுமதி வருமானம் மறுபடியும் உயர்வடைய ஆரம்பித்தால் எங்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.

இதற்கிடையில் காலம் நல்லாயிருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும் என்பது போல டென்மார்க்கின் அறுவடையும் இந்த ஆண்டு அமோகமாக விளைந்திருக்கிறது.

சரியான நேரம் வெயில், சரியான அளவில் மழை என்று காலநிலையும் கைகொடுத்த காரணத்தினால் தானிய அறுவடை அமோகமாக இருக்கிறது, தானியங்கள் சப்பை பற்றாமல் தரமாகவும் விளைந்துள்ளதாக விவசாயிகள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.

மறுபுறம் கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் டேனிஸ் பிரதமர் சுமார் ஐந்து பில்லியன் குறோணர்களை டென்மார்க் புற்றுநோய் பகுதிக்கு வழங்க இருக்கிறார்.

புற்றுநோயை முன்னரே கண்டறிந்து சிகிச்சை செய்ய எதிர்வரும் 2016 வரை இந்தப் பணம் பயன்படுத்தப்படும், இதனால் பல புற்றுநோய் மரணங்கள் தடுக்கப்படப் போகின்றன.

அதேவேளை டென்மார்க் லுக்ஸ்ரர் பாடசாலை இனி பெற்றோருடன் தொடர்பு கொள்ள ஸ்கைப்பை பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது, இன்னொரு பாடசாலை மாணவர்கள் வகுப்பறையில் கைத்தொலைபேசியை ஒலியின்றி ஆன் நிலையில் வைத்து பாவிக்கலாம், எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என்று கூறியுள்ளது.

இந்த உயர்வுகளை அறிந்து தமிழ் மக்களும் வருத்தம் – துன்பம் – கடன் – பென்சன் போதவில்லை – சீட்டு – வட்டி – குடி – வீண் பகை என்று அல்லும் பகலும் துன்பத்தால் அழியாமல் மகிழ்வாக வாழ்வை சந்தித்தால் என்ன..?

நடுக்கடலில் போனாலும் நாய்க்கு நக்கு தண்ணீர்தான் என்ற நிலையை இனியாவது மாற்ற வேண்டாமா..? என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது டென்மார்க் செய்திகள்.

றூல பூல்சர் உண்டு 12 பேர் மரணம் தொழிற்சாலை மூடப்பட்டதுறுலபூல்சரால் 12 பேர் பரிதாப மரணமடைந்துள்ளனர், இதனால் யோன் ஏ. றுலபூல்சர் தொழிற்சாலையின் உற்பத்திகள் நிறுத்தப்பட்டுள்ளன, அந்த நிறுவனம் வழங்கிய 30 வகையான உற்பத்திகள் கடைத்தொகுதிகளில் இருந்து திருப்பி எடுக்கப்பட்டுள்ளன.

இந்த இறைச்சி உணவுப்பொருளில் லிஸ்ரரியா என்ற உயிர் குடிக்கும் கிருமி பற்றியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது, இந்த நிறுவனம் 1999, 2012 காலப்பகுதிகளிலும் இதே பிரச்சனையில் சிக்குண்டிருந்தது.

இதற்கிடையில் எஸ்பியா நகரசபை கன்ரீனிலும் இது விற்பனையாகியிருக்கிறது, அங்குள்ள முதியோர் இல்லங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் அவசரமாக இவை மீளப் பெறப்படுகின்றன.

றுல பூல்சர் தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள் இது குறித்து பலத்த அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

பின்வரும் ஐந்து கடைத்தொகுதிகளில் றுல பூல்சர் விற்பனையாகிறது :

ஸ்பார் – ஈரோ ஸ்பார் – சூப்ப பெஸ்ற் – இயமா – டவ்லி புறுசன் – கிவிக்லி ஆகிய கடைத்தொகுதிகளில் இது விற்பனையாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதமே பக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் வரை உணவுக்கட்டுப்பாட்டு சுகாதாரப் பிரிவு தாமதித்தது ஏனென்று என்கில்ஸ் லிஸ்ற் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சுகாதாரப் பாதுகாப்புக்கள் சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது, இன்றைய டென்மார்க் ஊடகச் செய்திகளில் இந்த விவகாரம் ஆடிக்காற்றில் பறந்த அம்மி போல பறந்து கொண்டிருக்கிறது.

டென்மார்க் ஆர்லா பால் உற்பத்தி நிறுவனம் டென்மார்க்கில் உள்ள ஐந்து தொழிற்சாலைகளில் இருந்து மொத்தம் 79 பேரை வேலை நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்குக் காரணம் ஆர்லா உற்பத்திகளை ரஸ்யாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாதவாறு உருவாகியுள்ள புதிய சூழ்நிலையாகும்.

கிழக்கு உக்ரேன் விவகாரத்தில் ரஸ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பல தடைகளை அறிவித்தது தெரிந்ததே, அதற்கு பதிலடியாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியாகும் மரக்கறி, உணவுப் பொருட்களுக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது.

இந்தத் தடைக்குள் ஆர்லா பால் உற்பத்திப் பொருட்களும் மாட்டிக்கொண்டுள்ளதால் டென்மார்க்கில் 79 பேரின் வேலை பறக்கிறது.

தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறிக்கட்டிய கதையாக இருக்கிறது இந்த விவகாரம்.

இது போல புதிய பாடசாலை நேர அமைப்பு காரணமாக டென்மார்க்கின் தெற்கு யூலன்ட் பகுதியில் சுமார் 25 பிள்ளைகள் பராமரிப்பாளர் வேலையிழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது, பரடைசியாவில் மட்டும் 11 பேருடைய வேலைகள் பறி போகவுள்ளன.

பாடசாலை முடிந்து பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் போகும் பிள்ளைகளில் பலர் பாடசாலை நேர நீட்டிப்பு காரணமாக பாடசாலையிலேயே மாலைப் பொழுதை கழித்து, நேரடியாக வீடு திரும்புகிறார்கள்.

இதனால் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் உள்ளவர்களுக்கு பராமரிக்க பிள்ளைகள் குறைவதால் பலர் வேலை இழக்கிறார்கள்.

கண்டியிலை அடிச்ச காத்தில கண்டாவளை கைவிளக்கு நூர்ந்த கதையாக இருக்கிறது இந்த அவலம்.

இதற்கிடையில் கோப்பன்கேகன் பெரிய மசூதி கட்டப்பட்டதுபோல இப்போது ஓகூஸ் கொலரப்பாக்கனிலும் ஒரு பெரிய மசூதி அமைக்கும் எத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதை அமைக்க விடமாட்டோம் என்று பல டேனிஸ் கட்சிகள் வரிந்து கட்டி நிற்கின்றன, காரணம் ஓகூஸ் நகரத்தில் உள்ள மசூதி ஒன்று இளையோரை மூளைச்சலவை செய்து சிரிய போர்க்களம் அனுப்புகிறது என்ற சந்தேகம் நிலவுகிறது.

டென்மார்க்கில் இருந்து சிரிய போர்க்களத்திற்கு சுமார் 100 இளையோர் வரை சென்று அதில் 15 பேர் மரணித்துள்ளனர், இந்த விவகாரம் தற்போது கொதி நிலையில் இருப்பதால் மசூதிக்கு ஒரு படி அதிகமாக எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஆனால் இஸ்லாமிய சங்கங்களின் பேச்சாளர் சமி சடீனா கூறும்போது புதிய மசூதி பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கும் என்று தெரிவித்தார்.

கோப்பன்கேகன் மசூதி திறப்புவிழாவை டேனிஸ் அரசியல் தலைவர்கள் புறக்கணித்தமை தெரிந்ததே.டென்மார்க்கின் இன்றைய குற்றச் செய்திகள்


டென்மார்க் தலைநகர் கோப்பன்கேகனில் பொது வீதியில் வைத்து தனது மனைவியையும் பிள்ளையையும் கத்தியால் சரமாரியாகக் குத்திச் சரித்த 41 வயது நபர் இரட்டைக் கொலை முயற்சி குற்றச்சாட்டில் நான்கு வாரங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரால் குத்தப்பட்ட 33 வயதுத் தாயும், ஒரு வயது சிறு பிள்ளையும் தற்போது றீஸ் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சந்தேக நபர் காரணங்கள் எதையும் கூற மறுப்பதால் குறுகிய நேரமே விசாரணை இடம் பெற்றுள்ளது, கத்திக்குத்தை கண்ணால் பார்த்த பாதசாரிகள் பலர் இன்னமும் மலாரடிப்பில் இருந்து மீளவில்லை.

விபத்தில் யுவதி மரணம்

சுமார் 16 வயது மதிக்கத்தக்க இளம் யுவதி ஒருவர் வீதி விபத்தில் சிக்குண்டு பரிதாப மரணமடைந்த சம்பவம் நேற்று ஒலஸ்ரப் நகரத்தில் இடம் பெற்றது.

சுமார் 80 கி.மீ வேகத்தில் வந்த வாகனமொன்று இவர் மீது மோதியதால் மரணம் சம்பவித்துள்ளது, விபத்தை கண்ணால் பார்த்த சாட்சிகளை தேடிவருகிறது போலீஸ்.

காள்ஸ்பியா பியர் தொழிற்சாலையை தகர்க்கத் திட்டம்

மலேசியாவில் 19 சந்தேக நபர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டென்மார்க்கிற்குச் சொந்தமான காள்ஸ்பியா பியர் உற்பத்தி நிலையத்தை தகர்க்க திட்டமிட்டதாக சவுத் சைனா மோணிங் போஸ்ற் பத்திரிகை எழுதியுள்ளது.


டென்மார்க்கின் இன்றைய முக்கிய அரசியல் பொருளாதார செய்திகள்தற்போது உணவுப் பொதிகள் அடங்கிய 280 பாரவண்டிகளுடன், கவச வாகனங்கள் புடைசூழ ரஸ்ய உதவிகள் கிழக்கு உக்ரேனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அன்று 1987ல் உணவுப் பொருள் என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படைபோன்ற தந்திரத்தை ரஸ்யாவும் கடைப்பிடிக்கிறது என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.

ரஸ்ய உதவிகள் உக்கிரேனுக்குள் நுழையாது, ரஸ்ய எல்லையிலேயே நின்று உக்கிரேனுக்குள் தொழிற்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், உக்ரேனிய அரசுடன் இணைந்து செயற்பட்டால் தமது தரப்பில் ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினார் டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மாட்டின் லிதகோட்.

ஆனால் ரஸ்யா உதவி என்ற போர்வையில் உக்கிரேனுக்குள் நுழைந்தால் அது பாரதூரமான விடயமாகிவிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

அதுபோல நேட்டோ செயலர் ஆனர்ஸ் போ ராஸ்முசனும் ரஸ்யாவின் நகர்வு ஆபத்தானதென எச்சரித்துள்ளார்.

தனது எல்லைக்குள் நின்று உக்கிரேனை பார்த்து உதவி உதவி என்று கூற ரஸ்ய அதிபர் ஒன்றும் காதில் பூ வைத்த பேர்வழி அல்ல என்பது கவனிக்கத்தக்கது, அவர் கவச வாகனங்களையும் சேர்த்து அனுப்பியிருப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது.

உலக சாதனை படைத்த காற்றாடி உருவாக்கம்

டென்மார்க்கின் வெஸ்ற்யுஸ்க் மின் காற்றாடி உற்பத்தி நிறுவனம் அதிக நேரம் செயற்படக்கூடிய அதிசக்திவாய்ந்த காற்றாடி ஒன்றை உருவாக்கியுள்ளது.

100 மில்லியன் கிலோவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இந்தக் காற்றாடி கடந்த 2003ம் ஆண்டில் இருந்து சாதனை படைத்துவரும் சீமொன்ஸ் நிறுவனத்தின் 2.3 மெகாவாற் காற்றாடியின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்தக் காற்றாடி மூலமாக டென்மார்க்கில் தமிழர் அதிகம் வாழும் கேர்னிங் நகரத்திற்கு ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க முடியும்.

இது ஓர் அபாரசாதனை என்பதை ஏற்றுக்கொண்ட சீமொன்ஸ் நிறுவனம் இந்தச் சாதனையை நீண்ட காலம் தொடர முடியாது என்றும் கூறியது.

இன்று சீமோன்ஸ் நிறுவனம் நிறுத்தப்போகும் ஒரு காற்றாடி 6 மெகாவாற் சக்தி கொண்டதாக இருக்கிறது, இதனுடைய சாதனையை முறியடிக்க மேலும் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று சீமொன்ஸ் நிர்வாகிகள் கூறினார்கள்.


டென்மார்க்கின் இன்றைய நிகழ்வுகள் கல்வி – சமுதயாம்கல்வி தொடர்பான செய்தி :

டென்மார்க்கில் இன்று கோடை விடுமுறைக்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பித்த இரண்டாவது நாளாகும். இதுகுறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

இதில் முக்கியமானது கிறீவ நகரசபையாகும், இந்த நகரசபையில் உள்ள அரினா பாடசாலையில் உள்ள 300 மாணவர்களுக்கும் ஐ.பாட் வழங்கப்பட்டுள்ளது.

மின். நூல்களை வாசிக்கவும், புதிய பாடசாலை நிகழ்ச்சித்திட்டங்களை தரவிறக்கம் செய்து கற்கவும், பாடசாலைக் கல்வியில் ஐ.பாட்கள் முக்கிய பாத்திரம் வகிக்க இருப்பதால் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதே பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் கருத்துக் கூறும்போது, ஐ.பாட்டை வைத்துக் கொண்டு பேஸ்புக்கிற்குள் போகாமல் எப்படி வாழ்வது என்று கேள்வி எழுப்பினார்கள்.

சமுதாயம் தொடர்பான செய்தி :

டென்மார்க்கில் உள்ள ஐந்து நகரசபைகளில் அதிவிசேட சமூகவியல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

டேனிஸ் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள், வலிகளை காலம் தாழ்த்தவிடாது உடனடியாக தீர்க்கும் பணிகளை இந்த உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளுவார்கள்.

இந்த ஏற்பாடு பாடசாலைகள் – பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள் – நகரசபைகள் – குடும்பங்கள் என்ற நான்கு கோணங்களில் இணைக்கப்பட்டுள்ளதால், பல பிரச்சனைகள் இலகுவாகத் தீர்க்கப்படும் என்று மகிழ்வு தெரிவித்துள்ளன சமுதாய நிறுவனங்கள்.

வைலை, றணாஸ், ஒல்போ, ஓகூஸ், கோப்பன்கேகன் ஆகிய நகரங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இது வெற்றி பெற்றுள்ளதால் மற்றைய 93 நகர சபைகளையும் கவர்ந்துள்ளது.

tks.s.duraiShare this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies