திருமணத்திற்கு மறுத்த “பார் கேர்ள்” அக்காவின் தலையை மொட்டையடித்த தம்பி கைது!
13 Aug,2014
குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி "பார் கேர்ள்" பணிக்கு சென்றதாலும், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்ததாலும் அக்காவின் தலையை ஹேர் ரிமூவர் கிரீம் மூலம் மொட்டையடித்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.பெங்களூர் நகாவல்பைர சந்திராவில் வசித்து வருபவர் பிரியா. இவர் மும்பையின் பார் ஒன்றில் பணியாற்றி விட்டு கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூர் வந்திருந்தார்.அங்கும் பார் கேர்ளாக பணியில் சேர்ந்தார். இவர் பாரில் வேலைக்கு சேர்ந்தது இவரது தம்பி சந்தோஷுக்கு பிடிக்கவில்லை. பாரில் வேலை செய்ய வேண்டாம் என பலமுறை வலியுறுத்தியும் தம்பியின் பேச்சை அலட்சியப்படுத்திய பிரியா பாரில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.தம்பியின் விருப்பத்துக்கு மாறாக சமீபத்தில் பாரில் பணியாற்றிய நபரை பிரியா திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அக்காவின் செயலால் வேதனையடைந்த சந்தோஷ் தன் இரு நண்பர்களுடன் சேர்ந்து ஜூலை 27 அன்று இரவு 11:40 மணியளவில் பணி முடிந்துவீட்டுக்கு ஆட்டோவில் சென்ற பிரியாவை வழிமறித்து அவரது தலையில் ஹேர் ரிமூவர் கிரீமை போட்டு விட்டு தப்பியோடிவிட்டார்.வீட்டுக்கு வந்த பிரியா தலையை கழுவியவுடன் தலைமுடி உதிர்ந்து மொட்டையாகிவிட்டது. அதிர்ச்சியடைந்த பிரியா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சந்தோஷ் உட்பட அவரது இரு நண்பர்களையும் கைது செய்தனர்.