ஈரான் விமான விபத்தில் 38 பேர் பலி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது பயங்கரம்

10 Aug,2014
 

             


ஈரானில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 38 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயம் அடைந்தனர். விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டபோது இந்த கோர விபத்து நடந்தது.
தரையில் விழுந்து நொறுங்கியது
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.18 மணி அளவில் இரட்டை என்ஜின் கொண்ட அனடோவ் அன்–140 ரக தனியார் பயணிகள் விமானம் ஒன்று ஈரானின் கிழக்கு நகரான தபசுக்கு புறப்பட்டது. அதில் ஒரு விமானி, 3 குழந்தைகள், 2 சிறுவர்கள் உள்பட 48 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 4 நிமிடங்களில் என்ஜினில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். அதனால் விமானத்தை அவர் மீண்டும் மெஹ்ராபாத் விமான நிலையத்துக்கே திருப்ப முயன்றார்.

அப்போது அங்குள்ள ஆசாத் பொலிவார்டு குடியிருப்பு பகுதியில் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த விமானத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியது.
38 பேர் பலி
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 38 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர் என்று ஈரானிய செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்து உள்ளது.

மேலும் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்தபோது அப்பகுதியில் இருந்த 3 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இவர்களும், விமானத்தில் பயணம் செய்து படுகாயமடைந்த 10 பயணிகளும் சிகிச்சைக்காக டெஹ்ரான் நகரில் உள்ள இமாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 5 பேர் மருத்துவமனையில் இறந்ததாக இமாம் மருத்துவமனை டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்து குறித்து, விமான நிலைய தீயணைப்பு படை பிரிவு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் பலியாகி விட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.
வால்பகுதி முதலில் விழுந்தது
ஈரான் மாணவர்கள் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விமானம் மேலே கிளம்பியபோது, அதன் வால்பகுதிதான் முதலில் தரையில் விழுந்து நொறுங்கியது என்று தெரிவித்து உள்ளது.

விபத்துக்கு உள்ளான இந்த விமானம், எந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது உடனடியாக தெரிய வரவில்லை.

எனினும், விபத்துக்கு விமானத்தின் என்ஜின் கோளாறே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய அனடோவ் அன்–140 ரக விமானம் வெளிநாட்டு உதிரிபாகங்களை கடத்தி வந்து தயாரிக்கப்பட்டது ஆகும்.
பொருளாதார தடையால் சிக்கல்
ஈரான் நாட்டுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பொருளாதார தடை விதித்து இருக்கின்றன. இதனால்தான் வெளிநாடுகளில் இருந்து ஈரான் புதிய விமானங்களை வாங்க முடியவில்லை. மேலும், அந்த நாட்டில் பழைய விமானங்களே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் விமானங்களும் அதிக அளவில் உண்டு.

பொருளாதார தடை காரணமாக, சில நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக விமான உதிரிபாகங்களை கடத்தி வந்து பழைய விமானங்களுக்கு பொருத்துகின்றனர். இதேபோல் புதிய விமானங்களையும் தயாரிக்கிறார்கள். எனவேதான் ஈரானில் அடிக்கடி விமான விபத்துகள் ஏற்படுவதாக அந்நாட்டின் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த 2011–ம் ஆண்டில் இருந்து இதுவரை 14 விமான விபத்துகள் ஈரானில் ஏற்பட்டு உள்ளது.
தடை நீங்கினால் விபத்து குறையும்
இது குறித்து ஈரான் ஏர் நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், ஈரானின் சிவில் விமான போக்குவரத்துக்கு 100 பேர் பயணம் செய்யக் கூடிய விமானங்களே அதிக அளவில் தேவைப்படுகிறது. ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டுவிட்டால் இத்தகைய விமானங்களை இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

ஈரான் நாட்டில் ஆண்டு தோறும் 7 கோடியே 60 லட்சம் பேர் விமான பயணம் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Share this:

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies