பிரேத பரிசோதனை செய்ய சி.பி.ஐ. இன்று தோண்டி எடுக்கிறது.வேலை வாங்கித்தருவதாக கூறி டெல்லி பல்கலைக்கழக மாணவி கற்பழிப்பு
20 Jul,2014

டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவி வேலை தேடி வந்தார். அப்போது தனியார் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாகி விகாஷ் (வயது 35) என்பவரை அந்த மாணவி சந்தித்தார். வேலை வாங்கித் தருவதாக கூறி, விகாஷ் அந்த மாணவியை தனது அலுவலகத்துக்கு வரவழைத்தார். அங்கு அந்த மாணவியை விகாஷ் தாக்கியும் மிரட்டியும் கற்பழித்தார்.
இதுபற்றி அந்த மாணவி தெற்கு டெபடான் கற்பழிப்பு; புதைக்கப்பட்ட சிறுமிகளின் உடலை மீண்டும் எடுக்கிறது சி.பி.ஐ.

படானில் கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமிகளின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சி.பி.ஐ. இன்று தோண்டி எடுக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் கடந்த மே மாதம் 27–ந்தேதி திடீரென மாயமானார்கள். 3 நாட்களுக்கு பின்னர், இருவரும் அதே ஊரில் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதும், இந்த சம்பவத்தில் உள்ளூர் போலீஸ்காரர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
பின்னர் ஒரு சிறுமி கற்பழிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து சிறுமிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மர்மமே நீடித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்து சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்தினர். பின்னர் சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவற்கு உத்தரபிரதேச அரசு பரிந்துரை செய்தது. இதனையடுத்து விசாரணையை கையில் எடுத்த சி.பி.ஐ. சம்பவம் நடந்த கிராமத்திற்கு சென்று சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டனர். மேலும், கிராம மக்களிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து விசாரித்துவரும் சி.பி.ஐ. உண்மை நிலவரத்தை அறிய சிறுமிகளின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தது. சிறுமிகளின் உடலை எடுக்க சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சிறுமிகளின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றனர். கங்கை நதியின் கரையில் சிறுமிகள் புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலே தண்ணீர் சென்றது. தண்ணீர் 8 அடி உயரத்தில் சென்றது. இதனால் நேற்று சிறுமிகளின் உடலை எடுக்கும் பணி கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று சிறுமிகளின் உடலை சி.பி.ஐ. எடுக்க உள்ளது. சிறுமிகள் கொல்லப்பட்டது தொடர்பாக முன்னதாக அளிக்கப்பட்ட அறிக்கையில் உறுதியாக எதையும் நிரூபிக்காததை அடுத்து சி.பி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. ல்லி மளவியாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி விகாசை கைது செய்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்