பிராவை தூக்கி காட்ட சொன்ன பொலிசாருக்கு $25,000 தண்டம்!! (அதிர்ச்சி வீடியோ வெளியீடு)
20 Jul,2014
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் காரில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பாதுகாப்பு போலீஸார் ஒருவர் சந்தேகப்பட்டு அருவருப்பான முறையில் சோதனை செய்ததற்காக $25000 நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து சாலையில் செல்லும் வாகனங்களை பாதுகாப்பு போலீஸார் சோதனை செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியே காரில் Zoe Brugger என்ற 29 வயது பெண் வந்துகொண்டிருந்தார்.
அவரை காரில் இருந்து இறங்க சொல்லிய போலீஸ் அதிகாரி அவருடைய டீசர்ட்டை தூக்கி பிராவை குலுக்கு காண்பிக்க சொல்லி வற்புறுத்தினார். பிராவுக்குள் போதை மருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தான் அவ்வாறு செய்யச்சொல்வதாக போலீஸார் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி Zoe Brugger பிராவை குலுக்கு காண்பித்தார்.


இந்த சம்பவம் அந்த வழியாக சென்ற மற்றொரு நபரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டது. தனக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் போலீஸார் நடுரோட்டில் அநாகரீகமான முறையில் தன்னை சோதனை செய்ததாக Zoe Brugger, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, பொது இடத்தில் ஒரு பெண்ணை அநாகரீமான முறையில் சோதனை செய்தது போலீஸாரின் குற்றம் என்று தீர்ப்பளித்து அந்த பெண்ணுக்கு $25000 நஷ்ட ஈடு வழங்கும்படி அதிரடியாக தீர்ப்பளித்தார்.