காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்
12 Jul,2014

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண்ணை அவளது காதலனும் அவன் சகோதரியும் சேர்ந்து உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிராரி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், அதே கிராமத்தில் வசிக்கும் மனோஜ் குமார் (24) என்ற வாலிபரை காதலித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மனோஜ் குமார் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு குடும்பத்தினருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று அந்த பெண்ணை மனோஜ் குமாரின் சகோதரி சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தயாராக காத்திருந்த மனோஜ் குமார், தன் காதலி என்றும் பாராமல் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். இதில் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் இன்று பரிதாபமாக இறந்தார்.
முன்னதாக போலீசாரிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், நடந்த சம்பவம் அனைத்தையும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ் குமாரை தேடி வருகின்றனர்