எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உடற்பயிற்சி
27 Jun,2014
எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உடற்பயிற்சிஎவலி கொடுக்கும் மூட்டு முதுமையின் அடையாளம் என கருதப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவெனில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதன் காரணமே ஒரு குறிப்பிட்ட வயதினை நெருங்கும் பொழுது பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. எனவே இளைய சமுதாயமே இன்றே உடற்பயிற்சியினை ஆரம்பியுங்கள்.
அளவான உடற்பயிற்சி கூட மூட்டு வலியினையும், எலும்பு தேய்மானத்தினையும் வெகுவாகக் குறைந்து விடும். தேய்ந்த மெல்லிய எலும்பும், மடிந்த கூன் போன்ற தோற்றமும் முதுமை வெளிப்பாடு என்று நாம் நினைக்கின்றோம்.
இறப்பைத் தவிர வேறு எதுவுமே வெல்ல முடியாதது அல்ல. உடல் பயிற்சி, நடைபயிற்சி என்று பேசுவது அதிகமாகி விட்டாலும் இதனை நாம் எவ்வளவு தூரம் கடை பிடிக்கிறோம் என்பதுதான் தெரியவில்லை.
அப்படி என்னதான் உடற்பயிற்சி நன்மை பயக்கிறது. மூட்டு வலி குறைகின்றது/தடுக்கப்படுகின்றது. எலும்புகள் உறுதியாகின்றன. படபடப்பு நீங்குகிறது. உடல் சக்தி கூடுகின்றது. தேவையான உடல் எடையை அடைய முடிகின்றது. சர்க்கரை நோய் தவிர்க்கப்படுகின்றது/கட்டுப்படுகின்றது.
மூளை சுறுசுறுப்பாய் செயல்படுகின்றது. தசைகள் உறுதிபடுகின்றன. கை, கால் நீட்டி மடக்குவதில் பிரச்சினை இன்றி இருக்கின்றது. இன்னமும் பல நன்மைகள் கொண்ட உடற்பயிற்சியின் அநேகமாக தினமும் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை செய்து வந்தால் ஒரு வருடத்தில் 8 சதவீத அளவு உடலின் இயக்கத்திறன் கூடுகின்றது.
25-30 சதவீதம் வரை சர்க்கரை இரத்தத்தில் கட்டுப்படுத்தப்படுக்கின்றது. 1-3 சதவீதம் வரை எலும்பின் அளவு அதிகப்படுகின்றது.