ஆபத்தை விளைவிக்கும் இறைச்சிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்
20 Jul,2014
இளம் வயதிலிருந்தே அதிகளவில் சிவப்பு நிற இறைச்சி வகைகளை அதிகம் உண்பதனால் மார்கப் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிளார்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வின்போது 24 தொடக்கம் 43 வயதிற்கு இடைப்பட்ட 89,000 பெண்கள் தொடர்பான உடல் ஆரோக்கிய அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 3000 பேர் வரையானவர்கள் தமது உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் இந்நோய்த்தாக்கத்திலிருந்து கணிசமான அளவு விடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிவப்பு இறைச்சிகளுக்கு பதிலாக சிவப்பு பீன்ஸ்ஸை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.