சருமம் காக்கும் எலுமிச்சை
20 Jul,2014
பழங்களில் ஒன்றாக உள்ள எலுமிச்சை பல்வேறு அழகு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
நாம் பொதுவாக வீடுகளில் எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரை) அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது உண்டு. மேலும் இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சம் பழச்சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளிதில் தீர்த்துவிட முடியும்.
பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான்.
இந்த எலுமிச்சையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
சரும வறட்சியை தடுக்க
சருமத்தின் நிறத்தை அதிகரிக்க எலுமிச்சை துண்டை, நேரடியாக சருமத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, உடனே மாய்ஸ்சுரைசரைத் தடவி விட வேண்டும். இதனால் சருமம் அதிக வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
மென்மையான சருமம் கொண்டவர்களுக்கு
சென்சிடிவ் எனப்படும் மென்மையான சருமம் உள்ளவர்கள் எலுமிச்சையை நேரடியாகப் பயன்படுத்தினால் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆம்பிக்கும்.
ஆகவே ஒரு ஸ்ப்ரே பொத்தலில் எலுமிச்சை சாறு மற்றும் அதற்கு சமமான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, பின் முகத்தை நீரில் கழுவி, பின்பு எலுமிச்சை ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இப்படி பயன்படுத்த பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவ மறக்க வேண்டாம்.
சரும அழகை கூட்ட
சரும அழகை அதிகரிக்க எலுமிச்சையை பலவாறு பயன்படுத்தலாம். அது என்னவெனில், 2 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 1 முட்டையின் வெள்ளைக்கரு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சருமத்தில் புதிய மாற்றம்
2 பங்கு எலுமிச்சை சாற்றில், 3 பங்கு கிளிசரின் சேர்த்து, அத்துடன் 1 பங்கு ரம் சேர்த்து நன்கு கலந்து, தினமும் சருமத்தில் தடவி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சரும நிறத்தை அதிகரிக்க
ஒரு பௌலில் சரிசமமான அளவில் எலுமிச்சை சாறு, தக்காளி சாறு, வெள்ளரிக்காய் சாறு எடுத்துக் கொண்டு, அத்துடன் சந்தனப் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
இளமையை தக்க வைக்க
எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.
முகப்பருவை போக்க
சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குவ தற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.
உடலை சுத்தப்படுத்த
தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும்.
ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.