தோல் புற்றுநோயை தடுக்கிறதா சன்ஸ்கிரீன்?
27 Jun,2014
சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்களினால்(UV Rays) தோற் புற்றுநோய் ஏற்படுகின்றது.
இதனைத் தடுப்பதற்கு சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
எனினும் இந்த சன்ஸ்கிரீன்கள் தோற்புற்றுநோயிலிருந்து முழுமையான பாதுகாப்பினை அளிப்பதில்லை என பிரித்தானிய பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
அதாவது தோற்புற்றுநோய்களில் ஐந்தாவது வகையாகக் காணப்படும் வீரியம் மிக்க மெலனோமாவினை இந்த சன்ஸ்கிரீன்களால் தடுக்க முடியாது எனவும், வருடந்தோறும் 13,000 மக்கள் இப்புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வினை மேற்கொண்ட மான்ஸ்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான றிச்சார்ட் மரைஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.