இதயம் காக்கும் திராட்சை
27 Jun,2014
பழங்களில் இனிப்புத் தன்மையைக் கொண்டுள்ள திரட்சை சுவையை மட்டுமல்ல, அதனுள் மருத்துத்தன்மையையும் அதிகமாக தக்கவைத்துள்ளது.
தற்போது உள்ள காலகட்டம் மட்டும் நாம் இதை பயப்படுத்தவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் முதல் கடைசி குடிமகன் வரை பருகி அனுபவித்த பழ ரசம் கூட திராட்சையாகத்தான் இருந்தது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிகமாக திராட்சை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக பிரான்சில் நாற்பது ஆண்டுகளாக திராட்சை விதைகளின் முக்கியத்துவத்தை அறிந்து அதை பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
உலகில் மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம் பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது.
திராட்சை எவ்வகை நோய்களை குணப்படுத்துகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
மலச்சிக்கல்
திராட்சைப் பழத்தில் ‘வைட்டமின் ஈ’ மற்றும் ‘வைட்டமின் சி இருக்கிறது.பச்சை திராட்சையை ஜூஸாக்கி சாப்பிட்டால் நாக்கு மற்றும் வாயில் ஏற்படும் புண் சரியாகும்.
குடல் சம்பந்தப்பட்டக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு திராட்சை மருந்தாக விளங்குகிறது.
காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் 4 அல்லது 5 காய்ந்த திராட்சையை ஊற வையுங்கள்.
ஊறிய திராட்சையை நன்றாகப் பிழிந்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி பல் முளைக்காத சின்ன குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம். இப்படி தினமும் செய்துவர, குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
இதய நோய்
ஒரு கப் பச்சை திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி போன்றவை விரைவில் குணமாகும்.
புற்றுநோய்
தினமும் ஒரு டம்ளர் கருநீலத் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் குணமாகும். முற்றிய புற்றுநோயின் வீரியத்தையும் குறைக்கும்.
தசை வளர்ச்சி
காய்ந்த திராட்சையை பசும்பாலில் ஊற வைத்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுங்கள். இது குழந்தைகளின் தசை வளர்ச்சியை சீராக்குவதுடன் எலும்புகளையும் வலுப்படுத்தும், மேலும் சளி, இருமல் இருந்தால் அதையும் போக்கும்.
மார்பகப் புற்றுநோய்
முக்கியமாக மருத்துவப்பலன்கள் அதன் விதைகளிலே அதிகமாக காணப்படுகிறது இது பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது.
நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.
கொலஸ்டிரால்
இரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.